இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Monday
பிளாஷ் நியூஸ் : ஈழ தமிழர்களுக்காக காங்கிரஸ் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
அப்போது அங்கிருந்த வக்கீல் சங்க தலைவர் அசோக் பத்ம ராஜ் , முன்னாள் உப தலைவர் செல்வா குமார் ஆகியோர் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறித்தனர் . பின்னர் கோசல் ராம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
சில தினங்களுக்கு முன்பு சீர்காழி காங்கிரஸ் வட்டார செயலாளர் ரவி சந்திரன் தீக்குளித்து வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது .
http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
Saturday
கருப்பு கொடி பேரணி ஆயிரகணக்கானோர் பங்கேற்ப்பு
பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் இன்று கருப்புக் கொடி பேரணி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மன்றோ சிலையில் இருந்து கருப்புக் கொடி ஏந்தி துவங்கிய பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி நிறைவடைகிறது.
தியாகி முத்துக்குமாருக்கு அஞ்சலி:குமரி மாவட்ட விசைபட்கு மீனவர்கள் வேலைநிறுத்தம்
வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள350 க்கும் மேற்பட்ட விசை படுகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை .
இன்று தியாகி முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது . இதில் பெரும்பாலான தமிழின உணர்வாளர்களும் , மாணவ, மாணவிகளும் ,அரசியல் கட்சி தலைவர்களும் , இளைஞர்கள் , வழக்கறிஞ்சர்கள்பெரியோர்கள் , சிறியோர்கள் என பெரும்பாலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
முத்துக்குமார் தன் உடலில் கொளுத்திய தீயானது இன்று ஒவ்வெரு தமிழனின் மனதிலும் கொழுந்து விட்டு எரிகிறது . தமிழகம் இன்று ஓன்று சேர்ந்து இந்தியாவையும் இலங்கையையும் எதிர்த்து வருகிறது .
இலங்கை பாதுக்காப்பு இயக்கத்தின் சார்பாக பெப்ருவரி 4 ஆம் தேதி ( இலங்கையின் சுதந்திர தினம் ) தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் அறிவிக்க பட்டுள்ளது . இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் .
வெல்லட்டும் தமிழ் ஈழம். முத்துக்குமாரின் எண்ணம் ஈடேறட்டும்.
Monday
திட்டமிட்டு வெளிநாடுகளில் பரப்பப்படும் பொய் செய்திகள்
குறிப்பாக இந்திய பத்திரிக்கைகளில் இந்த பொய் செய்திகள் வருமளவிற்கு இலங்கை இனவெறி அரசு பார்த்து கொள்கிறது . முதலில் கல்மடு குளம் உடைந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தார்கள் என்ற ஒரு செய்தியும் . அதே நேரம் பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது படையினர் நேற்றும் தொடர் எறிகணை தாக்குதல்: 22 பொதுமக்கள் பலி; 60 பேர் படுகாயம்
இன்று கொழும்பில் தகவல் தொடர்புகள் துண்டிப்பு என்றும் , கொழும்பு பரபரப்பாக இருப்பது போன்றும் , விடுதலை புலிகள் ராணுவத்தை விரட்டி விரட்டி வருவதாகவும் பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறது . இந்த நிலையில் " மக்கள் பாதுகாப்பு வலயம் " மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் : 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி , 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் ! இப்படி பட்ட மனித அவலங்களை தமிழ் சமூகமும் உலகும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த செய்திகள் பரப்பப்படுகிறது .
உலக தமிழர்களை போதை ஏற்றிவிட்டு ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் கூண்டோடு அழிக்க சிங்கள இனவெறி அரசு முடிவு செய்து விட்டது . நாம் விழித்திருந்து சிங்கள அரசின் அவலத்தை வெளியில் தெரியப்படுத்தி உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல வேண்டும் .
தமிழினமே விழித்துக்கொள் இனியும் தாமதித்தால் நாளை ஈழ தமிழினம் இருக்காது .
அரசியல் வாதிகளே ஈழ தமிழனின் பிணத்தில் அரசியல் செய்தது போதும் . தாயக தமிழர்களே நம் சொந்தங்களை இனியும் காப்பற்ற தவருவோமேன்றால் நம்மை காலம் மன்னிக்காது . பக்கத்திலே ஆறுகோடி தமிழன் இருந்து என்ன பயன் .
Tuesday
தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் இந்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டதாகவும், அதற்கு மாநில அரசு துணை போவதாகவும் கூறி, இதனை கண்டித்து வரும் 28ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மதிமுக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்தி வருகிற தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதல்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது. ஆறு இலட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள்.
சிங்கள அரசு ஈவு இரக்கமின்றி அந்த மக்கள் மீது இடைவிடாத விமானத் தாக்குதலும், பீரங்கித் தாக்குதலும் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் "காசா' பகுதியில் ஆயுதம் ஏந்திப் போராடும் "காமாஸ்' அமைப்பினர் மீது இராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் கருத்தினை மதித்து போர் நிறுத்தம் செய்து விட்டது.
ஆனால், இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. கண்துடைப்புக்காகக் கூட பிரணாப் முகர்ஜியை இதுவரை அனுப்ப கூட இல்லை.
சிவசங்கர் மேனன் இலங்கை இராணுவத்தின் தமிழினப் படுகொலைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசிடம் மடிப்பிச்சை ஏந்தி அடிமைகளாக வாழ்வதை விட மடிவதேமேல் என்று தாங்களாகவே முல்லைத்தீவில் இராணுவத் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் மரண பூமியில் தவிக்கின்றார்கள்.
தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் திமுகவும் தான் பொறுப்பாளி ஆவார்கள். இந்திய அரசின் துரோகத்திற்கு முழுக்க முழுக்க கருணாநிதி துணையாக இருக்கிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.
தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் இந்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து வரும் 28 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
..............................................................................
Thursday
இடைதேர்தலில் சிபுசோரன் தோல்வி
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்டுகள் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிய போது ஏற்பட்ட சிக்கலுக்கு சிறிது தோள்கொடுத்தவர் தான் சிபு சோரன் . அதற்காக காங்கிரஸ் கட்சியால் கொடுக்க பட்ட அன்பளிப்பு தான் முதலமைச்சர் பதவி .
இதையடுத்து ஜார்கண்ட் மாநில சட்டபேரவை உறுப்பினராவதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார் . இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை எண்ண தொடங்கின துவக்கம் முதலே பின்தங்கி இருந்த சிபு சோரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வாக்காளரை விட ௮000 (8000) வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார் .
இந்த தோல்வியின் மூலம் அவர் முதலமைச்சர் பதவி இழக்க கூடும் . முன்னர் ஒருமுறையும் குறைந்த காலத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிட தக்கது .
என்னதான் நம்ம முதலமைச்சர் ஆகிட்டாலும் மக்கள் ஒட்டு போட்டு அங்கீகரிக்க வேண்டும் .
தமிழர்களுக்காக எந்த இழிவையும் ஏற்க தயாரா ? இந்தியா
Sunday
ஆனையிறவை இராணுவம் கைப்பற்றியதா ?
கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவம் ஆனையிறவு முல்லை தீவு நோக்கி படை நடவடிக்கையை துரித படுத்தியிருக்கிறது . இப்போது ஆனையிறவையும் கைப்பற்றியதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . விடுதலை புலிகள் பரந்தனை கைவிட்ட உடனே ஆனையிறவையும் கைவிடுவார்கள் என்பது காட்டாயம் . இந்த நிலையில் இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
Saturday
இலங்கை அமைச்சரை வழிமறித்து மதிமுகாவினர் கலாட்டா
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது.
இது பற்றித் தெரியவருவதாவது:-
இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். மதகடி என்ற இடத்தில் வந்தபோது அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க.வினர் மற்றும் காரைக்கால் போராட்ட குழுவினர் இலங்கை அமைச்சரின் காரை வழிமறித்தனர்.
கையில் கறுப்புக்கொடி ஏந்தி நின்ற அவர்கள் "இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே" என கோஷமிட்டனர். தகவல் கிடைத்ததும் காரைக்கால் பொலிஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை விடுவித்தனர்.
ஈழ தமிழர்களை கொலை செய்து விட்டு பாவ மன்னிப்பு எடுக்க வருகிறார்களா ?