Friday

செருப்படி உணர்த்தும் உண்மை


சமீபத்தில் ஈராக்கிற்கு சுற்று பயணம் செய்த அமெரிக்காவின் தற்போதைய அதிபர் புஷிற்கு அந்த நாட்டில் நடந்த மிக பெரிய அவமானம் தான் செருப்படி வீச்சு. இந்த செருப்படியின் பின்னால் உலகத்திற்கு ஒரு செய்தி தெரிகிறது. ஈராக்கின் மீது தன் தந்தை (அதாவது தற்போதைய அதிபரின் தந்தை புஷ் ) ஒரு முறை படை எடுத்து தோல்வியுடன் திரும்பினார். அந்த மாறாத வடு மகனுக்கு பற்றி தன் தந்தை செய்த தவறையே திரும்பவும் செய்தார். தன் தந்தையால் முடியாததை தான் சாதிக்க வேண்டுமென்று விதி மீறி படை எடுத்தார் . நிலங்களை கைப்பற்றினார் அந்த நாட்டின் அதிபரையும் தூக்கில் இட்டார் . அவரால் முடிந்தது அவ்வளவுதான் . ஆனால் அந்த நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியவில்லை . ஒரு வெற்றி என்பது ஆயுத வெற்றியோடு நின்று விடுவதில்லை . மாறாக அந்த பகுதி மக்களின் மனங்களில் தான் இருக்கிறது.

ஆயுதத்தால் வென்ற மகிழ்ச்சியில் ஈராக்கிற்கு சென்ற புஷின் மீது தான் ஒரு நிருபர் தன்னுடைய இரண்டு கால்களில் இருந்த சூக்களை கழற்றி வீசினார் . இந்த செயல் அத்துமீறி ஒரு நாட்டின் மீதோ ஒரு இனத்தின் மீதோ படையெடுக்கும் ஒவ்வெரு அதிபருக்கும் கிடைத்த கிடைக்கின்ற அவமானம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .


அமெரிகாவில் அடுத்த மாதம் புதிய அதிபர் பதவியேற்க இருக்கின்றார் . அதுவும் காலம் காலமாக ஒடுக்க பட்ட ஒரு இனத்திலிருந்து வந்திருக்கிறார் . இவர் வருகையும் புஷின் பிரிவையும் ஒடுக்க பட்ட மக்கள் எதிர் நோக்கி இருக்குகிறார்கள். இதற்கு புதிய அதிபர் என்ன செய்ய போகிறார் . அமெரிக்கா அதிபர் அவமான பட்டு விட்டார் என நினைக்கிறாரா ? இல்லை இதன் காரணம் என்ன என்பதை நினைத்து நீதி வழங்க போகிறாரா ?

3 கருத்துக்கள்:

Anonymous said...

ஊரை உலையில் போட்டு, பதவிக்காகவும், தனது சுயலாபத்திர்க்காகவும் அரசியல் செய்பவன் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் செருப்படி கிடைக்கும் என்பதிற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆனால் அந்த நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியவில்லை //

இதுவே உண்மை. ஆனால் மனம் வெல்லுதல் நடக்கும் விடயமில்லை.
அத்துடன் சதாம் இந்த அளவில்லை என அவர்களை எண்ணும் படி இவர்கள்
நடப்பு...

தேவன் மாயம் said...

அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் எதிர்பார்க்கும் புஷ் போன்றவர்களுக்கு மான அவமானமோ, சொரணையொ இருப்பதில்லை!!

Post a Comment

Send your Status to your Facebook