Sunday

தமிழ் புத்தாண்டும் அரசின் குழப்பமும்

தை ஒன்றாம் தேதி (பொங்கல் திருநாள் ) அன்று தமிழ் புத்தாண்டு என்று உத்தரவு பிறப்பித்த கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னர் எதற்கு வடமொழி வருடத்தின் பெயர்.

காலம் காலமாக நம் மீது ஆட்சி செய்தவர்கள் விட்டு சென்ற பழக்கவழக்கங்களை நம் கலாச்சாரம் என நினைத்து பல ஆண்டுகள் கொண்டாடினோம். இப்போதும் கொண்டாடி வருகிறோம். "கல் தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என்ற பெருமைக்குரிய தமிழர்கென்றுஒரு தனி கலாசாரம் இல்லையா என்ற கேள்வி எழும் போது வரும் விடைகள் தான் . நம்முடைய கலாச்சாரங்களில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் உருவாக்கிய கலப்படம்.

நம் நடைமுறையில் இருந்த தமிழ் வருட பிறப்பு அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் வருகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழில் இல்லை. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில்

கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”

இப்போது நாம் கூறி வருகிற வருட பிறப்பு என்பது கூட தவறு புத்தாண்டு என்பது தான் சரியானது. இந்த நிலையில் தான் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து இருக்கிறது. அதில் பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டையும் சேர்த்து அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட நாளை குறிப்பதற்கு சர்வதாரி என்ற சமஸ்கிரத ஆண்டின் பெயரை போட்டதுஅரசின் குழப்பத்தை காட்டுகிறதா? இல்லை அதிகாரிகள் அதை தமிழ் ஆண்டின் பெயர் என்று நினைத்து விட்டார்களா ?

இதை சரி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழா தை முதல் தேதி உன் புத்தாண்டு சித்திரையல்ல . புத்தாண்டு பிறக்கட்டும் புதுவாழ்வு மலரட்டும்

14 கருத்துக்கள்:

Cable சங்கர் said...

இவங்க சொல்லிட்டா நான் அன்னைக்குதான் கொண்டாடணுமா..? நான் அன்னைக்கு பொங்கல் மட்டும்தான் கொண்டாடுவேன்.

Anonymous said...

Mr. Tamil M.A., y don't u better research and invent anything which brings Great n Good name to Tamil as Tamizhlan rather writing and spending time on this.... Am a Tamizhlan tooo.. Plz don't over do it.. It's a language to communicate with people..

Suresh Kumar said...

@ cable sanker

நீங்கள் பொங்கல் கொண்டாடினாலே போதும் . ஏனெனில் பொங்கல் பண்டிகை தான் புத்தாண்டு பண்டிகை

Suresh Kumar said...

It's a language to communicate with people../////

அய்யா அது மற்றவங்கள தொடர்பு கொள்ளுவதற்கு என்று எங்களுக்கும் தெரியும். நம்ம தாய் மொழிக்கென்று ஒரு பண்பாடு, கலாசாரம் இருக்கிறது .அது உங்களுக்கு தெரியுமா ?

Anonymous said...

பண்பாடு - கலாசாரம், Y don't the above two didnt make a quality tamil people in tamilnadu... Pls i don't wanna compare our tamilans with other people plzzzz....Correct me if am wrong
Dressing Attitude - Above Zeroooooo
Good Communication - Below Zerooo(filthy lang..)
Public decency - Far Below Zero ( pee at public)
Respecting Ladies - Never at all (more rapes)
list goes on --- where is the பண்பாடு, கலாசாரம் all ... nothing is useful in this context...

KATHIR = RAY said...

THIRUVALLUVAR AANDU THAN THAMIL PUTHANDU ENPATHU SARIYAGA IRUKUM . THAI 1M THETHI APDIYA YOSINGA

THIRUVALLUVAR ANDU MUTHAL THETHI MAATU PONGAL OR ADUTHA NAAL VARUTHU ANTHA NAAL THAMIL PUTHAANDU ARIVICHA NALLA IRUKKUM SARIYA

KATHIR = RAY said...

TAMIL NEW YEAR IS THIRUVALUVAL AANDILIRUNDU KANAKITTAL NALLA IRUKKUM

Suresh Kumar said...

நானும் தமிழன் தான்- சொன்னது… /////////

நீங்கள் சொன்னவை அனைத்துமே தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. என்னை பொருத்தவரையில்,எனக்கு தெரிந்த வரையில், தொடர்பு மொழியை மிக விரைவாக கற்று கொள்வதில் தமிழன் தான் முன்னிலை

A N A N T H E N said...

:)

வின்னர் said...

நல்லா சொல்லியிருக்கீங்க சுரேஷ் எனக்கு கூட அந்த ஆண்டுகளின் பெயர் இப்போது தான் தெரிந்தது எப்படி வந்ததென்று. நன்றி
அரசு அதிகாரிகள் நாள் மட்டும் தான் மாற்றியதாக நினைத்திருப்பார்கள்

Anonymous said...

தமிழருக்கு தைப் பொங்கள் தினத்தை புத்தாண்டாகப் பிரகடணம் செய்யப்பட்டது தொடர்பான சில சந்தேகங்கள்!!!!!!!!

1. சித்திரைப் புத்தாண்டு இந்துக்களின் புத்தாண்டு. த‌மிழ‌ர்க‌ளில் உள்ள‌ இஸ்லாமிய‌ர்களும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் தைப்பொங்க‌ல் தின‌த்தில்தான் கொண்டாடுகின்றார்க‌ளா?

2. கிறிஸ்த‌வ‌ர்க‌ளும், இஸ்லாமிய‌ர்க‌ளும் த‌ங்க‌ளுக்கென‌ த‌னித்துவ‌மான‌ தின‌த்தில் புத்தாண்டைக் கொண்டாட அனும‌திக்கும் அர‌சு இந்துக்க‌ளின் விட‌ய‌த்தில் மாத்திர‌ம் த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ போர்வையில் இந்து ம‌த‌த்திற்கு எதிரான‌ முடிவை எடுக்க‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் எவ்வாறு அனும‌தித்த‌து?


புள்ளிராஜா

Suresh Kumar said...

நண்பர் புள்ளிராஜா அவர்களே இது தமிழர் புத்தாண்டு இதில் மதத்திற்கு இடமில்லை .மொழியால் ஒன்றுபட்ட நாம் கொண்டாடவேண்டியது

Anonymous said...

திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடும் போது. வடமொழி ஆண்டின் பெயருக்கு அவசியமில்லை .அரசு இதை கவனித்து சரி செய்யும் என நினைக்கிறேன்

Anonymous said...

என்ன தல இப்போ ஆங்கில புத்தாண்டு. அது முடிந்த அப்புறம் எதா இருந்தாலும் முடிவு பண்ணலாம், ..................

Post a Comment

Send your Status to your Facebook