Monday

மாலைதீவில் வெளி நாட்டவர்கள் மீறும் விதிமுறைகள்

Male Map

இந்திய பெருங்கடலில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகள் சேர்ந்தது தான் மாலைதீவு . வெள்ளை மணல் கடற்கரையை கொண்ட அழகிய தீவு கூட்டங்கள் தான் இந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள் . சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகையை கொண்டது . இந்த நாட்டில் நகரம் என்று சொன்னால் ஒரே ஒரு நகரம் தான் காணப்படுகிறது . அது தான் மாலைதீவின் தலைநகரம் மலே .இங்கு இந்த நாட்டின் மொத மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர் .

நான் முதன் முதலாக இங்கு வந்த போது என்னை ஆச்சரியபட வைத்தது இந்த நாட்டின் போக்குவரத்து விதிமுறைகள் . அதே நேரம் வருத்தபட வைத்ததும் அதை மீறுபவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அதில் பெரும்பான்மையோர் இந்தியர்களே .


Male City

இந்த மலே நகரமானது மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது . இங்கு அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தபட்டிருக்கும் . இது என்னவோ இந்தியாவில் இல்லாததா என நினைக்க வேண்டாம் . அதில் நடந்து செல்பவர்களுக்கான சிக்னல்களும் இருக்கும் . இந்த நாட்டின் குடிகள் வாகனத்தில் வருபவர்களாக இருந்தாலும் சரி நடந்து போகிறவர்களாக இருந்தாலும் பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் செல்வார்கள் .


இரவு எத்தனை மணி நேரமானாலும் சிக்னல்கள் இயங்கி கொண்டே இருக்கும் . இரவு பதினொன்று மணிக்கு மேல் யாரும் அதிகமாக சாலையில் செல்ல மாட்டார்கள் . எப்போதாவது யாராவது செல்வார்கள் அவர்கள் கூட பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் சிக்னலை கடந்து செல்வார்கள் . நடந்து செல்பவர்கள் கூட சிக்னலை பார்த்து தான் செல்வார்கள் .


ஆனால் இங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் வெளிநாட்டினர் , பெரும்பாலும் இந்தியர்களும், வங்காள தேசத்தவரும் தான் . இவர்கள் எப்போது சென்றாலும் விளக்குகளை பார்ப்பதில்லை வாகனம் ஏதாவது வருகிறதா இல்லையென்றால் கடந்து விடுவார்கள் . சில நேரங்களில் இப்படி செல்லும் போது சிறிய மோதல்கள் வரை நடந்திருக்கிறது . (பெரிய மோதல்கள் நடைபெற வாய்ப்புகள் இல்லை ஏனெனில் வாகனங்கள் செல்லும் வேகம் மிகவும் குறைவாக தான் இருக்கும் )


இந்தியாவில் தான் நாம் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்க வில்லை நாம் இன்னொரு நாட்டிற்கு சென்றுமா எங்களோடு கூடவே பிறந்தது இதுவென்று காட்ட வேண்டும் . நாம் செல்லும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றாலும் அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே .
நம்மால் அந்த நாட்டின் விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கலாமே .

இதை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் . உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள் தோழன் .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook