Tuesday

ஐநாவும் டீக்கடை பெஞ்சும்

இரண்டாம் உலக போரையடுத்து 1945 ஆம் ஆண்டு  உலக நாடுகள் சேர்ந்து உலக நாடுகளை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை . இதில் உலகின் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன . ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமே சர்வதேச சட்ட திட்டங்கள் , சர்வதேச பாதுகாப்பு , சர்வதேச பொருளாதார மேம்பாடு , சமூக சேவைகள் , மனித உரிமைகளை நிலை நாட்டுவது , மனித உரிமை மீறல்களை தடுப்பது , உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .

இதில் பொதுச்சபை( General Assembly  ) , பாதுகாப்பு சபை(Security Council), பொருளாதார மற்றும் சமூக சபை( Economic and Social council) ,அனைத்துலக நீதிமன்றம்(International Court of Justice ) போன்ற உள்  அமைப்புகள் காணபடுகின்றன . பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க படுகின்றன ஆனால் அமெரிக்க , சைனா , ரசியா , இங்கிலாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன . அது மட்டுமல்லாது இந்த ஐந்து நாடுகளுக்கும் பாதுகாப்பு சபையில் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .

உலகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெற்று முடிவுகள் எடுக்க படும் . ஒரு சிறுபான்மை இனம் தாக்கபட்டாலோ அத்துமீறி இன்னொரு நாட்டின் மீது ஒரு நாடு படைஎடுத்தாலோ விவாதங்கள் நடத்தி குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படும் . ஆனால் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் நினைத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கலாம் மனித பேரவலம் ஏற்படுத்தலாம் .

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையை பார்த்தால் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஒவ்வெரு மனிதன் ஒவ்வெரு இனம் இவைகளின் உரிமைகள் நிலை நாட்ட படும் என்று மேலோட்டமாக இருக்கும் . ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஒரு டீக்கடை பெஞ்சு ரேஞ்சிக்கு தான் இருக்கிறது . உலகத்தின் கண்களுக்கு முன்னாலே லட்சகணக்கான மக்கள் இனவெறி அரசால் கொல்ல   பட்ட போது  ஐக்கிய நாடுகளும் அதன் செயலாளரும் அறிக்கை மட்டுமே கொடுத்து கொண்டிருந்தனர் . ஆனால் கண் முன்னே இறந்து கொண்டிருக்கும் உயிர்களை காப்ப்பாற்ற காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வில்லை .

இலங்கையில் பெரும்பான்மை மக்களால் பறிக்க பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கவும் இல்லை . உலகத்திலே மிக பெரிய மனித பேரவலம் இலங்கை தீவிலே நடைபெற்ற போதும் , நடைபெற்றிருக்கின்ற போதும் ஐக்கியி நாடுகள் சபையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை . ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் இலங்கை பேரவலத்தை நீங்கள் ஏன் தடுக்க வில்லை என்பதற்கு நான் இருபதுக்கு மேற்பட்ட கண்டன அறிக்கையை கொடுத்து விட்டேன் ஒரு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளராக என்னால் இதைதான் செய்ய முடியும் என்கிறார் .( இதைதான் நம்மூரு முதல்வரும் சொல்லுகிறார் )

இப்படி எதுவுமே செய்ய முடியாத ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதர்களுக்கு என்ன பயன் . டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது நடைபெறும் விவாதம் போன்றது தான ஐக்கியாய நாடுகள் சபையா ? உலகத்திற்கு தெரிந்தே ஒரு இனவெறி நாடு இன்னொரு இனத்தின் மீது படுகொலை நடத்தும் போது தடுக்க முடிய வில்லையெனில் ஐக்கிய நாடுகள் சபையே தேவையில்லை தானே .

7 கருத்துக்கள்:

தினேஷ் said...

இது வெட்டி டீ கடை .. ஆனா அவனுகளுக்கு தேவைப்பட்ட இந்த டீ கடைய காட்டி பயமுருத்துவானுக ஆனா ஒண்ணும் நடக்காது..

Suresh Kumar said...

சூரியன் said...

இது வெட்டி டீ கடை .. ஆனா அவனுகளுக்கு தேவைப்பட்ட இந்த டீ கடைய காட்டி பயமுருத்துவானுக ஆனா ஒண்ணும் நடக்காது../////////

அது ஒரு வெட்டி கடை என்று தான் பாண் கீ மூனே சொல்றாரு . நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .//

இலங்கை பிரச்சனையில் அப்படியொன்றும் செய்யாதது ஏன் என்று புரியவில்லை

கலையரசன் said...

புதுசா சொல்றீங்க?
அது அப்படிதான்னு தெரியாதா?

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .//

இலங்கை பிரச்சனையில் அப்படியொன்றும் செய்யாதது ஏன் என்று புரியவில்லை //////

ஐநா பொது செயலாளர் என்ற முறையில் இருபதுக்கு மேற்பட்ட கண்டன அறிக்கைகளை கொடுத்தார் . இதுக்கு மேல ஒன்றும் செய்ய முடியாதாம் . ஐநா தோன்றிய நோக்கம் நிறைவேற்ற படவில்லையென்றால் எதற்கு அந்த வெட்டி கடை . அந்த ஐநாவே ஐந்து வல்லரசு நாடுகளுக்ககதான்

Suresh Kumar said...

கலையரசன் said...

புதுசா சொல்றீங்க?
அது அப்படிதான்னு தெரியாதா? //////////


எல்லாமே அப்படி தான் என்று இருந்து விட முடியுமா நன்றி நண்பரே

Suresh Kumar said...

நன்றி ஆ.ஞானசேகரன் உங்கள் கருத்திற்கு

Post a Comment

Send your Status to your Facebook