Sunday

வெல்லட்டும் தமிழ் ஈழம்

கல்மடு அணையை விடுதலை புலிகள் தகர்த்தனர் . இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்ட ராணுவத்தினர் பலி என்றும் . ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷே மற்றும் சிங்கள கைக்கூலி டக்லஸ் தேவானந்த ஆகியோர் கொலை செய்யப்பட்டனர் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன .

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவு உண்மை என்பது இதுவரை உறுதிபடுத்தவில்லை , கல்மடு அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மை அதைபற்றிய ஒளிபடங்கள் வரை வந்து விட்டது . பல ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்பதும் உண்மை . ஆனால் நாம் இந்த ஆயிர கணக்கான அளவு என்பது எத்தனை உண்மை .

இதுவரை விடுதலை புலிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை . இவற்றை எல்லாம் பார்க்கும் போது வெற்றி செய்தி என்பது மிகவிரைவில் நமக்கு கிடைக்கும் . அது தமிழ் ஈழ வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இத்தனை நாளும் பின்வாங்கிய விடுதலை புலிகள் இப்போது சில திட்டமிடல்களை செய்து ராணுவத்தை நிலை குலைய செய்துள்ளனர் .

ராணுவத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு . இதில் முக்கியமாக களமுனை ராணுவத்திற்கும் தலைமைக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இதில் இன்னும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது . ஏனெனில் தினமலர் கூட செய்தி வெளியிட்டிருக்கிறது அதிக ராணுவ வீரர்கள் பலி என்று .

இந்த நிலையில் இராணுவம் பாதுகாப்பு பகுதி என அறிவித்து அந்த இடத்தில் உள்ள மக்கள் மீது குண்டுவீசி பத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் . சிங்கள அரசு அப்பாவி மக்களையே குறிவைத்து இனபடுகொலையை செய்கிறது . நம் வெற்றி மிதப்பில் சிங்கள அரசு செய்யும் இனபடுகொலையை மறந்தவர்கள் ஆகிவிடக்கூடாது .

இனபடுகொலைகளுக்கேதிரான போராட்டம் தொடரட்டும் அது தமிழ் ஈழம் வெல்லும் போராட்டமாக அமையட்டும் . வெல்லட்டும் தமிழ் ஈழம் .

2 கருத்துக்கள்:

Anonymous said...

கல்மடுக்குளத்தை புலிகள் உடைத்ததினால் எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் விவசாயம் பாதிக்கபடுமே தவிர ராணுவத்துக்கு பாதிப்பு இல்லை.

Anonymous said...

/*கல்மடுக்குளத்தை புலிகள் உடைத்ததினால் எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் விவசாயம் பாதிக்கபடுமே தவிர ராணுவத்துக்கு பாதிப்பு இல்லை.*/

சிங்கள அடிவருடி அய்யா, தமிழரின் விவசாயத்தை விட தமிழனின் உயிர் முக்கியம். யார் சொன்னது மீண்டும் விவசாயம் பண்ண முடியாதுன்னு. முட்டாளே.

Post a Comment

Send your Status to your Facebook