இப்படி ஒட்டு மொத்த தமிழகமும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த போதும் ஏன் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை . மத்திய அரசு தமிழர்களின் மீது வெறுப்பாக இருக்கிறதா ? இந்திய அரசு நலனுக்கு இலங்கை பிரிய கூடாது என்று மௌனம் காக்கிறதா ? விடுதலை புலிகளின் மீதான வெறுப்பின் மீது ஒட்டு மொத்த தமிழர்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லையா ?
இப்படி பல கேள்விகள் இன்று எல்லோர் மனதிலும் எழும்பி கொண்டிருக்கிறது . இதை பற்றி சிறிது அலசி பார்போம் .
முதலில் இன்றைய அரசியல் சூழலை பார்க்க வேண்டும் . பல்வேறு சிக்கல்கள் மத்தியிலும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை ஒட்டிவிட்டது காங்கிரஸ் கூட்டணி . இன்னும் மூன்று மாதத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது . இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு கூட்டணி பற்றி காய் நகர்த்த ஆரம்பித்து விட்டது .
இந்த சூழ்நிலையில் தான் சிங்கள அரசு மிக கொடுரமான மனித அவலத்தை தமிழர்கள் மத்தியில் தினம் தினம் அரங்கேற்றி வருகிறது . இதை கண்டித்தும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் சார்பாகவும் , அரசியல் காட்சிகளுக்கு அப்பாற்பட்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றன . இதில் முக்கியமாக காங்கிரஸ் கட்சியும் , அதிமுகவும் நேரடியாக விடுதலை புலிகளை எதிர்கின்றன . இந்தநிலையில் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைகளும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே கருத்துக்களை சொல்லி வருகின்றன .
திமுக சிங்கள அரசுக்கு எதிராக கருத்தகளை சொன்னாலும் போர் நிறுத்தத்திற்கு அவசர நடவடிக்கை ஏதும் எடுக்கவுமில்லை . அப்படி மத்திய அரசை வலியுறுத்தினாலும் மத்திய அரசு அதை பற்றி கண்டு கொள்ளவுமில்லை . இது தான் மத்திய அரசின் அலட்சியத்தை படம் பிடித்து காட்டுகிறது .
இன்று தமிழகத்தில் அதிமுக தொண்டர்களாக இருந்தாலும் சரி , திமுக தொண்டர்களாக இருந்தாலும் சரி , காங்கிரஸ் தொண்டர்களாக இருந்தாலும் சரி யாருமே விடுதலை புலிகள் தோற்பதை விரும்பவில்லை . ஏனெனில் விடுதலை புலிகள் மட்டும் தான் ஈழ தமிழர்களின் ஒரே பிரதி நிதிகள் . விடுதலை புலிகள் தோல்வி பெற்றால் தமிழன் தோற்பதை போல் ஒவ்வெரு தமிழனும் நினைக்கிறான் . ஆனால் கட்சி என்ற நிலையில் தன் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கிறார்கள் .
ஏன் இந்த பிரச்சனை என்று நாம் பார்க்கும் போது அது மக்களிடம் உள்ள பிரச்சனையா ? இல்லை அரசியல் கட்சிகளிடம் உள்ள பிரச்சனையா ? இன்றைய சூழ்நிலையில் உலகமே சுயனலமானதாக மாறி விட்டது . நான் என் வேலை என்ற நிலை ஏற்பட்டு விட்டது . யார் எப்படி போனாலும் நானும் என் குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்ற சுயநல சிந்தனை ஒருபுறம் . ஈழ தமிழன் அழிகிறான் என்ற கவலை மனதில் இருந்தாலும் . நான் என்ற நிலையில் அது மிகவிரைவில் மறந்து போய்விடும் .
அரசியல் கட்சிகளோ எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து விடலாம் . அப்படி கூட்டணி வைத்து விட்டால் இது தேர்தல் உடன்பாடு மட்டும் தான் என்றும் சொல்லி விடலாம் . இப்படி தொகுதி ஒப்பந்தம் செய்து தேர்தலில் நின்று வெற்றிபெற்றாலும் இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை . மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கும் இல்லை .
காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் திமுக இல்லையென்றால் அதிமுக கூட்டணி வைக்கும் . இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை . திமுகவுடனும் அதிமுகவுடனும் கூட்டணி வைக்க சிறிய கட்சிகள் தயாராக இருக்கிறது . இதுவரை எந்த தேர்தலிலும் ஈழ தமிழர் நலனை முன்வைத்து எந்த கட்சியும் போட்டியிடவுமில்லை .
இந்த தேர்தல் கூட்டணியும் அப்படிதான் அமைய போகிறது ஈழ தமிழர்களுக்கு எதிரான கூட்டணி என்று எந்த கூட்டணியையும் எந்த கட்சியும் குறை சொல்ல முடியாது . ஏனெனில் இரண்டு கூட்டணி தலைமைகளுமே ஈழ தமிழர்களுக்கு எதிரான கூட்டணிதான் . அப்படி தேர்தலில் முன்வைத்து மக்கள் அங்கீகாரம் பெறாத ஒரு கோரிக்கையை வரும் அரசுகள் எப்படி நிறைவேற்றும் .
என்று தமிழகத்தில் ஈழ ஆதரவு கட்சிகள் ஓன்று சேர்ந்து தமிழ் ஈழ விடுதலையை முன்வைத்து தேர்தலில் வெற்றிபெறுகிறார்களோ அன்று தான் தமிழ் ஈழ பிரச்சனையில் இந்தியா ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் . அதுவரை சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டே இருக்கும் . அதுவரை மக்களும் ஏமாளிகளாகவே இருப்பார்கள் .
ஈழ ஆதரவு கட்சிகளே நீங்கள் வெறும் போராட்டங்கள் நடத்தி பயன் இல்லை. ஈழத்திற்கு எதிராக இருக்கும் கட்சிகளை இப்போதே ஒதுக்கி விட்டு நீங்கள் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுங்கள் . அதன் பின்னர் மக்களிடம் வாக்கு கேளுங்கள் தமிழின விரோத ஆட்சியா ? இல்லை தமிழின ஆட்சியா ?
தவறு ஒன்றும் மத்திய அரசிடமில்லை தமிழகத்தின் மீதே . தமிழா விரைந்து செயல்பாடு. உனக்கு எதிராக செயல் பட்டு விட்டு தமிழகத்திற்கு வாக்கு கேட்க வர பயம் இருக்க வேண்டும் . இந்த தேர்தல் தமிழ் ஈழத்தை வென்றெடுக்கும் தேர்தலாக இருக்கட்டும் . ஈழ ஆதரவு கட்சிகளே இது தான் தமிழ் ஈழ மக்களுக்கு நாம் முதல் கடமை . வெறுமனே நீங்கள் எடுக்கும் போராட்டம் பயன் தராது . Tweet
4 கருத்துக்கள்:
well said...
Good article...........
very good ans sesible article.
தமிழகத்து 40 உறுப்பினர்களால் அமைக்கப் பட்டக் காங்கிரசு அரசு.
தமிழகத்தை மொத்தமாக அலட்சியப் படுத்தி,அவமானப் படுத்தி வருகிறது.
பொய்யே சொல்லி முழு ராணுவ முப்படை ஆதரவைத் தருகிறது,சிங்கள இனவாத அரசிற்கு.அங்கே 24 மணி உளவு விமானம்,படையுடன் சேர்ந்து திட்டமிடும் தளபதிகள்,கப்பல் படை அனைத்தும் இந்தியாவால் செய்யப் படுகிறது.
ஒரே காரணம் சோனியாவின் பழி
வாங்கும் ரத்த வெறிதான்.அதற்கு மொத்தத் தமிழினமே அழிய வேண்டுமா?
தமிழக அரசியல் வாதிகளை நம்பிப் பயன் இல்லை.இளைய சமுதாயம்,முக்கியமாக மாணவர்களும்,மற்ற வழ்க்கறிஞர்கள்,இன உணர்வாளர்கள் அனைவரும் இன்றைய நாளில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நினைவு கொண்டு சோனியா எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்து தமிழகத்தை மொத்தமாக போராட்டக் களமாகக் காட்டுவது ஒன்றே வழி.
புது டில்லியின் அரக்கத்தனம் அமைதிப் போராட்டத்தால் அடங்காது.
Post a Comment