தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் மத்திய உள்துறை மந்திரி ப . சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்து ஆண்டு கால சாதனை விளக்க பொதுகூட்டத்தில் இவ்வாறு பேசினார் .
இந்த செய்தியில் சிதம்பரம் தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார் . இந்த நேரத்தில் நாம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் குறித்த வெற்றியை பார்ப்போமானால் தமிழகம் மற்றும் புதுவையில் தொகுதிகளையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பரிசாக தந்தார்கள் தமிழக மக்கள் .
திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் காட்சிகளுக்கு தேவைக்கு அதிகமான மிகவும் பலம் வாய்ந்த மந்திரி பதவிகளை போராடி மிரட்டி வாங்கினார்கள் . இதனால் இந்த மந்திரிகளும் சரி எம்பிக்களும் சரி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு என்ன மதிப்பளித்தார்கள் .
வாரம் தோறும் சிங்கள இனவெறி ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் தன் நாட்டு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுத்தார்களா ?
தமிழனுக்காக ஜப்பான் அரசு உதவியோடு வரவேண்டிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு தடுத்த போது அதை செயல் படுத்த நடவடிக்கை எடுத்தார்களா ?
முல்லை பெரியாறு ஆணை நீர்மட்டம் உயர்த்த உச்சநீதி மன்றம் விதித்த ஆணையை செயல் படுத்த நடவடிக்கை எடுத்தார்களா ?
இதை போலவே காவிரி பிரச்னை .
இதையும் தாண்டி தமிழகத்தில் மின்வெட்டு , விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் இருந்த போதும் அதை பற்றி கூட கவலை படாத தமிழக மக்கள் தங்கள் தொப்பிள் கோடி உறவுகள் இலங்கை தீவிலே சிங்கள இனவெறி அரசால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படும் போது பொங்கி எழுந்தார்களே . அப்போது இந்த மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கைக்கு எப்படி செவி சாய்த்தது .

இந்தியா சிங்கள அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்தவும் , போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழக மக்களின் பதினொன்று பேர் தன்னையே தீக்கிரை யாகினார்களே . அவர்கள் குரலுக்கு மதிப்பளித்ததா ?
தமிழகமே கொந்தளித்த போது அடக்கு முறையால் தமிழின உணர்வாளர்களை கைது செய்து சிறையில் அடித்ததை விட இந்த அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா ?
தமிழன் தான் மத்திய அரசை ஆட்டி படைத்தான் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்களால் தான் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் கவிழாமல் நின்றது . அந்த தமிழக மக்களுக்கு நீ செய்த நன்றி கடன் என்ன ?
தமிழக் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து விட்டு மீண்டும் தமிழக மக்களை நோக்கி வாக்குகள் கேட்க எப்படி மனம் வருகிறது .
தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நினயிக்கும் எனபது தமிழக மக்களுக்கும் தெரியும்.
மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் நாளை நீ சொல்வாய் ஈழ தமிழர்களை கொலை செய்ய தமிழக மக்கள் அங்கிகாரம் தந்து விட்டார்களென்று .
தமிழ் உறவுகளை கொலை செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி புரியும் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் திமுகவையும் இந்த தேர்தலில் தோற்கடிப்போம் தமிழக மக்களை காப்போம் .
தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் . தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் பட்சத்தில் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது இதை உணர்ந்து நாம் செயல் படுவோம் . இந்த தேர்தல் தமிழனுக்கும் தமிழின துரோகிகளுக்கும் நடைபெறும் தேர்தல் . யார் வெல்ல வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வோம் .
5 கருத்துக்கள்:
இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள்
இந்த முறை மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்.
அசோசியேட் கூறியது...
இந்த முறை மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்.//////////////
இந்த முறை மக்கள் சரியான முடிவெடுத்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . நன்றி அச்சொசியாடே அவர்களே .
winner கூறியது...
இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள்/////////////////////
இனி மக்கள் ஏமாறாமல் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மக்களால் எமாற்றபடவேண்டும் .
வணக்கம், காங்கிரசை வேறோடும் வேறடி மண்ணோடும் முற்றாக ஒழிக்க வேண்டிய வேலை இது, தமிழக மக்களிடம் வீதி வீதியாக சென்று வீடு வீடாக மக்களை சந்தித்து காங்கிரசுக்கு துணையிருக்கின்ற கட்சிகளையும் புறக்கணிக்க செய்ய வேண்டும்... தோழமையுடன் சோலைமாரியப்பன்
Post a Comment