Friday

நாஞ்சில் சம்பத் விடுதலை ஆவாரா ? வாதாடும் வைகோ

நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும் என நானே நீதிமன்றத்தில் வாதாடுவேன் என  கூறியதையடுத்து வைகோ நேரில் ஆரஜாகி வாதாடினார் .

திருப்பூரில் நடந்து ஈழ தமிழர் பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் இத்தாலியில், சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால், அவன் சேலை கட்டி சோனியா காந்தி ரூபத்தில் இந்தியா வந்துள்ளான். தினமும் ஈழத்திலே தமிழர்கள் இறந்து வருவதற்கும் சோனியா காந்தி தலைமையில் உள்ள காங்கிரஸ் அரசே காரணம் என குற்றம் சாட்டி  பேசினார் .

இதையடுத்து திருப்ப்பூர் மாவட்ட காவல் துறை நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரத்தில் நடந்த பொது கூட்டத்திற்கு பேச மேடை ஏறிய பொது காவல் துறையினர் கைது செய்தனர் . நாஞ்சில் சம்பத் சார்பாக ஜாமீன் கேட்டு மனு செய்ததை யடுத்து ஜாமீனில் வெளிவிட திருப்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டது . அன்று இரவே தமிழக அரசு நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியது .

இதையடுத்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டது . மதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் கொள்கை பரப்பு செயலாளருமான நாஞ்சில் சம்பத்தை திமுக அரசு உள்நோக்கதுடனே கைது செய்தது அனைவருக்கும் தெரியும் .  பொதுவாகவே நாஞ்சில் சம்பத் என்றால் திமுகவிற்கும் கலைஞருக்கும் அலர்ஜி . கடந்த முறை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது மதிமுகவிற்கு எதிராக கலைஞரால் உருவாக்கப்பட்ட  சதி செயல்களை அம்பலபடுத்தியத்தில் முக்கிய பங்காற்றியவர் .

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ,மதிமுக கூட்டணி சார்பாக தீவிர பிரச்சாரம் செய்தவர் . அதனால் தான் கடந்த அதிமுக ஆட்சியில் பேச்சாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திமுக அரசு ரத்து செய்த போதும் நாஞ்சில் சம்பத் வழக்குகள் மட்டும் ரத்து செய்யவில்லை . நாஞ்சில் சம்பத் மீது பல முறை திமுக ரவுடிகளே தாக்குதல் நடத்தினார்கள் . அந்த அளவிற்கு நாஞ்சில் சம்பத் என்றால் திமுகவிற்கு அலர்ஜி .

இப்போதும் திமுகவின்  ஈழ தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தமிழின துரோகத்தையும் தான் பேச்சின் மூலம் வெளிக்காட்டி கொண்டிருந்தார் . மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் இந்த தேர்தலில் நாங்கள் இலங்கை பிரச்சனையை வைத்து பேசுவோம் என்றும் சொல்லிவிட்டார் . அப்படியென்றால் மக்கள் ஆதரவு பெற்ற பேச்சாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் இதுவே திமுகவின் நிலைப்பாடு . அதனடிப்படையில் தான் தமிழின ஆதரவாளர் சீமான் , கொளத்தூர் மணி போன்றோரை சிறையில் அடைத்தது .

பொதுவாகவே வைகோ தொண்டர்கள் மீது மிகவும் அன்பு காட்டுபவர் . அதுமட்டுமல்லாது மதிமுகவிற்கு  நாஞ்சில் சம்பத் மிகவும் முக்கியமானவர் . அதனால் தான் வைகோவே நேரில் ஆஜராகி நாஞ்சில் சம்பதிற்காக வாதாடுகிறார் . இன்று நடைபெற்ற விசாரணையில் 20 தேதிக்குள் அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது .அன்றைக்கே இறுதி விசாரணையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 20 தேதிக்குள் தெரியும் நாஞ்சில் சம்பத் விடுதலையா ? இல்லையா ?

இது தொடர்பான பதிவு

2 கருத்துக்கள்:

வின்னர் said...

நாஞ்சில் சம்பத் மிக விரைவில் விடுதலை ஆக வேண்டும் . அப்போது தான் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உஷ்! சோனியா தங்கமானவங்க!
வாயை பொத்துங்க!!

Post a Comment

Send your Status to your Facebook