இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழக அரசு இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது .
இதை எதிர்த்து டைரக்டர் சீமான் சார்பாக சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.
புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்நீதி மன்ற தீர்ப்பானது தமிழின விரோத அரசுக்கு கிடைத்த முதல் தோல்வி . இது தமிழர்களின் பேச்சுரிமைக்கு கிடைத்த வெற்றி .
Tweet
2 கருத்துக்கள்:
தமிழனின் உரிமைக்கு கிடைத்த வெற்றி வெல்லட்டும் தமிழ் ஈழம் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம்
அப்போ இவ்வளவு நாள் உள்ள இருந்ததுக்கு அவருக்கு ஏற்பட்ட மனஉலைச்சல் இதுக்கெல்லாம் என்ன பதில்... கேசு குடுத்தா உள்ள புடிச்ச போடறது அப்புறம் நாய்படாத பாடு படனும் நிரபராதின்னு நிருப்பிக்க...
Post a Comment