Saturday

6 -வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம் 4 பேர் கவலைகிடம்

இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி சென்னையில் 6 வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . இதில் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது . இதையடுத்து உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை யாரும் பார்க்க வரவில்லை எனவும் சோனியா காந்தி உடனடியாக தலையிட்டு போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டனர் . அவர்களை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர் .

இலங்கையில் தமிழர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்தும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்தில 13 ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினர் . ஆனால் தமிழக காவல் துறை அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல்    துரத்தியது . இப்படி ஒவ்வெரு இடமாக மாறி மாறி தங்களுடைய உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றனர் . இப்போது மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்கள் .

உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு பல பெண்கள் மற்றும் பொதுமக்கள் சென்று பெண்களை வாழ்த்தியும் அவர்களுக்கு ஆதரவாக போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றனர் . உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் பெண்களில் நான்கு பேரின் உடல் பலவீனமடைந்து இருக்கிறது . இந்த நிலையில் தான் சத்திய மூர்த்தி பவனை பெண்கள் முற்றுகையிட்டனர் . நாடாளுமன்ற தேர்தலில் மங்கி போன ஈழ ஆதரவு போராட்ட்டத்தை பெண்கள் கையில் எடுத்து போராடி வருகிறார்கள் .

இன்னும் சில நாட்கள் இந்த போராட்டம் நீடித்தால் இன்னும் பலரின் உடல்நிலை மோசமாகும் என தெரிகிறது . தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாக தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் . பெண்களின் போராட்டமானது தமிழகமெங்கும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது .

பெண்கள் 20 தேதி தமிழக பிரச்சாரத்திற்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து போர்நிறுத்தம் வலியுறுத்தவிருக்கிறார்கள்.  காங்கிரஸ் அரசும் சோனியாவும் பெண்களின் குரலுக்கு செவி சாய்ப்பார்களா ?

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook