Tuesday

வாக்களிக்க செல்பவர்களுக்கு சில டிப்ஸ்

முடிந்தவரையில் காலை வாக்களிப்பது நல்லது மாலையில் வாக்களிக்கலாம் என நாம் இருந்து விட்டால் நமது வாக்கை வேறு யாராவது வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு .

வாக்களிக்க செல்லும் முன்னர் வாக்காளர் அடையாள அட்டை மறக்காமல் எடுத்து செல்லுங்கள் . வாக்காள அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிசனால் அங்கீகரிக்க பட்ட  கீழ் கண்ட அடியால அட்டைகளில் ஏதாவது ஒற்றை கொண்டு செல்லுங்கள் .

1. பாஸ்போர்ட்
2. ஓட்டுனர் உரிமம்
3. வருமான வரி பான் அட்டை
4. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் , உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை.
5. அரசு வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக்குகள் மற்றும் விவசாயிகளுக்கான பாஸ் புக்குகள்
6. நிலம், வீட்டு விற்பனை பத்திரங்கள், மனை பட்டா.
7. பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்.
8. ஓய்வு ஊதிய ஆவணங்கள்
9. சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாள அட்டை
10. துப்பாக்கி லைசென்ஸ்
11. உடல் ஊனமுற்றோர்க்கான சான்றிதழ்
12. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை
13. மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.


வாக்களிக்கும் முன்னால் யாருக்கு வாக்களிக்கிறோம் எதற்கு வாக்களிக்கிறோம் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் .

வாக்களிக்கும் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்து முடிந்தவுடன் நீங்கள் வாக்களித்த சின்னத்தில் விளக்கு எரிகிறதா என பாருங்கள் .

மறக்காமல் வாக்களியுங்கள் வாக்களிப்பத்து உங்கள் உரிமை
.

1 கருத்துக்கள்:

Suresh Kumar said...

Kajan கூறியது...

Pls place your valuable vote at
http://internationaldesk.blogs.cnn.com/

(Should The International Community Intervene In Sri Lanka?)/////////


Yes I voted

Post a Comment

Send your Status to your Facebook