Monday

கடைசி கட்ட கணிப்பு அதிமுக கூட்டணி 37 திமுக கூட்டணி 3

ஒரு வழியா தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த நிலையில் மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் . அரசியல் கட்சிகளுக்குள் கலக்கம் ஏற்பட்டு விட்டது நாம் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற சிந்தனைகளே மேலோங்கி காணப்படுகின்றன .

தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நிலையில் கூட்டணி பலத்தில் அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் உள்ள வித்தியாசம் .5 சதவீதமே . தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன் மின்னி கொண்டிருந்த விஜய காந்த் அதிமுக திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் துவங்கியவுடன் மறைந்து போய் விட்டது . பாரதிய ஜனதா கட்சி இரண்டு மூன்று தொகுதிகளில் கணிசமாக வாக்குகள் இருக்கிறது . ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெற முடியாத வாக்குகளாக இருக்கிறது .

இந்த தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் தான் நேரடி போட்டிகள் நிலவுகிறது . இந்த தேர்தலில் முதன்மை பிரச்சனையாக ஈழ தமிழர்கள் பிரச்சனையே காணப்படுகிறது . ஈழ தமிழர்கள் பிரச்சனை இருந்த காரணத்தால் திமுகவால் சாதனைகளை சொல்ல முடியாமல் போய் விட்டது .

காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு அலையே உருவாகியிருக்கிறது .அதுமட்டுமல்லாது விலைவாசி உயர்வுகள் , மின் தட்டுபாடு போன்ற பல பிரச்சனைகள் திமுகவிற்கு எதிராகவே இருக்கிறது . ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுகள் நடத்தும் இன படுகொலையை இந்திய காங்கிரஸ் அரசு முன்நின்று நடத்துவதாலும் அதை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்

கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான எதிர்ப்பு அலையை விட இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது . அது மட்ட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 4o தொகுதிகளிலும் வென்றது . ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக மட்டுமே வெளியில் வந்தும் திமுகவால் தனி பெரும்பான்மை பெற முடியவில்லை . அந்த தேர்தலில் திமுக , அதிமுக கூட்டணிக்கு உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 4 சதவீதம் தான் . கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமகவால் அதிமுக கூட்டணிக்கு ஆறு சதவீத வாக்குகள் உயர்ந்துள்ளது . இந்த ஆறு சதவீத வாக்குகளும் திமுக கூட்டணிக்கு குறைந்திருக்கிறது .

அது மட்டுமல்லாது நடுநிலை வாக்காளர்கள் இந்த முறை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் . கடந்த முறை தேமுதிகவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்குகளை புறக்கணித்தவர்கள் வாக்குகள் சிதறாமல் இருக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் .

கடைசி கட்ட கணிப்பின் மூலம் அதிமுக கூட்டணி 36 தொகுதிகளிளுருந்து 38 தொகுதி வரை வெற்றி பெறும் திமுக கூட்டணி 4 முதல் 2 தொகுதிகள் வெற்றி பெறலாம் . வாக்களிக்கும் நாளில் சில வேளை அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது .காங்கிரஸ் கட்சியானது புதுச்சேரியில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது .

13 கருத்துக்கள்:

பின்னூட்டம் பெரியசாமி.. said...

அ.தி.மு.க. கூட்டணி : 40
காங்கிரஸ் கூட்டணி : 0
என்பதே இப்போதுள்ள நிலவரம். இந்த நிலவரத்தைக் கேட்டுக் கலவரமான எதிர் தரப்புக்கு அல்லு விட்டுப் போயிருக்கிறது என்பது உண்மை.
தமிழீழப் பிரச்சினையில் துரோகம், மக்கள் எழுச்சியை காவல் துறையைக் கொண்டு தடுத்தது, உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்தது, மின் வெட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றால் காங். தி.மு.க. கூட்டணி மண்ணைக் கவ்வும் போலத் தெரிகிறது. இந்த அலையில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டிய தொல்.திருமாவும் சேர்ந்திருப்பது கவனத்திற்குரியது.
கலைஞரின் வயதையும் இயலாமையும் கருதி மக்கள் ஏதாவது அனுதாபம் கொண்டு ஆறுதலடைவதற்காக ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுத் தருவார்கள் என்று எண்ணியிருந்தீர்கள் என்றால் அது தவறு. தமிழக மக்கள் இந்த வகையில் இரக்கமற்றவர்கள். எந்தப் பக்கமாக இருந்தாலும் ஸ்வீப் தான். இதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலே எடுத்துக் காட்டு.

மத்திய சென்னை: முஸ்லீம்களின் வாக்குகளை இழந்ததால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப் படுவார்.

தென்சென்னை: டி.ஆர். பாலு தொகுதியை விட்டு ஓடிப்போன ஒரே காரணம் போதும் தி.மு.க தோற்க.

இது போன்ற தொகுதிகளில் தி.மு.க வெல்லும் என நினைத்து நீங்கள் ஒன்றிரண்டு கொடுத்திருந்தால், எந்த தொகுதி என பெயரை வெளியிடவும். புள்ளி விபரங்களை அள்ளித் தர வசதியாக இருக்கும்.

Suresh Kumar said...

நண்பர்
பின்னூட்டம் பெரியசாமி..அவர்களே 37 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது முடவு ஆகி விட்டது மற்ற மூன்று தொகுதிகள் அதாவது மத்திய சென்னை , மதுரை , புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் திமுகவிற்கு சிறிய வாய்ப்புகள் இருக்கிறது . அதுவும் சில நேரங்களில் மாறி 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறலாம் .

Anonymous said...

எனக்கு தெரிந்து 30 அதிமுக 10 திமுக என்ற கணக்கில் இருக்கும் . தேமுதிக 2 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் .

VJ said...

how abt madurai, ramnad, trichy and chidambaram?

I don't think so.

Suresh Kumar said...

VJ கூறியது...

how abt madurai, ramnad, trichy and chidambaram?

I don't think so. ///////////


மேற்சொன்ன மூன்று தொகுதிகளில் மதுரை மட்டும் சில வாய்ப்புகள் இருக்கிறது

Anonymous said...

திமுக காங்கிரஸ் கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என உளவு துறை தகவல்கள் சொல்கிறது .

Yoga said...

ADMK front will win all the seats. Tamil people want the Eelam Tamils killing to be stopped and Eelam to formed so they support ADMK.

Anonymous said...

:_0

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

வாக்காளன் said...

note this ..
there is going to be no major impact due to srilankan issue..
only 10 % of people will vote based on srilankan issue..
this is indian election and not for srilanka..

keep it in mind .. we need to think of many other factor along with srilanka issue.. not just srilanka issue..

r u okay with just solving srilankan issue and leave all indian tamils in throttle???

DMK + will get 18 - 21 seats
admk will get 19 - 21
BJP - 1

ஜோதிபாரதி said...

உங்கள் அலசல் நன்று!
நடக்க வேண்டும் என்பது விருப்பமும் கூட!

Suresh Kumar said...

அன்புள்ள வாக்காளன் அவர்களே நீங்கள் சொன்ன 10% தான் வெற்றியை தீர்மானிப்பது பொறுத்திருப்போம் சனி கிழமை வரை

Suresh Kumar said...

ஜோதிபாரதி கூறியது...

உங்கள் அலசல் நன்று!
நடக்க வேண்டும் என்பது விருப்பமும் கூட! /////////


நன்றி ஜோதிபாரதி அவர்களே கொஞ்ச நாளா நம்ம பக்கம் வாறதே இல்ல

Post a Comment

Send your Status to your Facebook