வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆடியோ கேட்க இந்த இணைப்பில் செல்லவும் '
மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
இதேவேளையில் வன்னி முள்ளிவாய்க்கால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் அடைக்கலம் கோர முற்பட்ட மக்களையும் படையினர் சுட்டுக்கொலை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடியோ கேட்க இந்த இணைப்பில் செல்லவும் Tweet
0 கருத்துக்கள்:
Post a Comment