Tuesday

இது உன்னை போல் ஒருவன் விமர்ச்சனமில்லை

கமல் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் உன்னை போல் ஒருவன் . இந்த படத்திற்கு ஏறக்குறைய ஐம்பத்து பேருக்கு மேல் பதிவுலகத்திலே விமர்ச்சனங்கள் எழுதியாயிற்று அதில போய் நானும் விமர்ச்சனம் எழுதி ஐம்பதில ஒண்ணா ஆக விரும்பல .அதன் தொகுப்பை பார்க்க விரும்புவர்கள்இங்கே செல்லுங்கள் .

மிகவும் அருமையாக படம் வந்திருக்கிறது என்று ஒரு சாரார் வழக்கம் போல் சொல்லுகின்றனர் . கமலின் நடிப்பு பிரமாதம் , இது தமிழ் சினிமாவுலகிர்ற்கு கிடைத்த மிக பெரிய வரம் , இது ஒரு இந்திய பார்பனியர்களுக்கு ஆதரவு திரட்டும் படம் , முஸ்லிம்களுக்கு எதிரான படம் இப்படியெல்லாம் பல வகைகளில் விமர்ச்சனங்கள் வருகிறது . கிராமத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்க காய்க்கிற மாவில தான் கல்லெறி படும் என்று . அதே போல படம் நல்லா இருப்பதால் தான் இத்தனை விமர்சனங்கள் என புரிந்து கொள்ள முடிகிறது .

கமல் சினிமா உலகத்திற்கு கிடைத்த நல்ல ஒரு நடிகன் நல்ல கலைஞன் . சிலர் நடிக்கவே தெரியாமல் சும்மா நான்கு துள்ளியே படத்தை ஓட்ட பார்கிறவர்கள் மத்தியில் கமல் உழைப்பையும் சேர்த்து மூலதனமாக்குவதில் வல்லவர் என்பதை நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை . எல்லா தயாரிப்பாளர்களும் நினைக்கிறது போல இந்த தயாரிப்பாளர் கமலும் படத்துக்கு நல்ல வசூல் வர வேண்டும் என்று தான் நினைப்பார் . கமலை பொறுத்த வரையில் இது ஒரு தொழில் . நல்லா படம் ஓடினால் போட்ட முதலையும் எடுத்து கொஞ்சம் லாபமும் பார்க்கலாம் அவரின் எண்ணம் அப்படி தான் இருக்கும் .

ஆனால் நம் மக்களின் எண்ணங்களை பார்க்கும் பொது தான் .............................

அதாவது சின்ன திரை சீரியலை பார்த்து அழுது கொண்டிருப்பதும் அந்த நாள் முழுவது அதை பற்றிய சிந்தனையில் நாட்களை ஒட்டுவதுமாக இருப்பது போல இங்கே கமல் படத்தை எடுத்த நோக்கம் என்ன கமல் இதன் மூலம் என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்று ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள் . ஒவ்வேருவரின் விமர்சனங்களை பார்க்கும் போது ஏதோ சினிமாவ பார்த்து விமர்சனம் செய்தது போல் இல்லாமல் ஏதோ கொள்கைக்காக படம் எடுக்கும் கமலின் படங்களை விமர்சிப்பது போல் இருக்கிறது .

பொதுவாக சினிமாவில் காட்டப்படும் நிகழ்வுகள் அல்லது சொல்லப்படும் செய்திகள் நிஜ வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் .அதற்காக ஒரு லட்சியத்தோடு வாழும் மகான்களிடமும் , கொள்கைவாதிகளிடமும் எதிர்பார்க்கும் கருத்துக்களை கமலிடம் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் . கமலுக்கு சினிமா ஒன்றும் பொழுது போக்கு அம்சமுமில்லை , தன் கொள்கைகளை வெளிக்காட்டும் ஊடகமும் இல்லை . கமலுக்கு சினிமா ஒரு தொழில் அவ்வளவு தான் . சினிமாவ பார்த்தமா குடுத்த காசுக்கு பராயில்லாம டைம் பாஸ் ஆச்சா அப்படின்னு போறத விட்டுட்டு ஆராய்ச்சியெல்லாம் .... தேவையில்லை தானே ................
நான் இன்னும் படம் பார்க்கலீங்கோ .....

4 கருத்துக்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

உண்மைதான்..ஆனா மக்கள் புரிஞ்சுகினமாட்டேன்றாங்களே...

அவிங்களுக்கு...மதம் பிடிச்சுடுச்சே...பாகன் யாருமில்லியே அடக்க.......

குறை ஒன்றும் இல்லை !!! said...

:)))))
:(((((((((
?????????
!!!!!!!!!!

Anonymous said...

//www.sureshkumar.info//

43 koduththuddu oru domain vaangkiddu peesu veera pesaringa. rascal

Anonymous said...

maassaan.. nee loosaadaa.. ngkoyyala.

Post a Comment

Send your Status to your Facebook