Friday

முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .

தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .

10 கருத்துக்கள்:

vasu balaji said...

கண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை சுரேஷ்.

S.A. நவாஸுதீன் said...

இதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்

பித்தன் said...

its all clear politcs tactice m. karunaanithi does it very inteligently.

Suresh Kumar said...

வானம்பாடிகள் said...
கண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை /////


நன்றி அய்யா

Suresh Kumar said...

S.A. நவாஸுதீன் said...
இதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்////////////


மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசு நினைத்தால் நமது உரிமை பறிபோகாது .............. நன்றி தோழரே

ஆ.ஞானசேகரன் said...

///மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .///

ம்ம்ம்ம் அதுதான் தெரியலங்க சுரேஷ்.....

ஆயினும் தேவையான போராட்டம்தான்

Anonymous said...

added to my rss reader

ராஜ நடராஜன் said...

முல்லை பெரியாறு போன்ற தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் கட்சி சார்புகளை புறந்தள்ளி ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.

இந்திய இறையாண்மை ஒவ்வொன்றிலும் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிப்பது வருத்தமளிக்கிறது.

அவரவர் பிரச்சினையை அவரவர்தான் போராடி தீர்க்க வேண்டும்.நேற்று தொலைக்காட்சி பார்க்கும் போது அரசியல்வாதிகளுக்கு ஊதிய உயர்வு கொடுத்தீங்களே அதே மாதிரி ராணுவ வீரர்களுக்கு பதவி காலத்திற்கு பின்பான பென்ஷன் அனைவருக்கும் ஒரே சமசீரளவில் இருக்கவேண்டும் என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.கலந்து கொண்டவர்கள் அனைவரும் ராணுவ,நிதி சார்ந்தவர்களும் இளைய தலைமுறையும்.

பொதுப்பிரச்சினைகள் கூட அலசப்படாமல் தமிழக தொலைக்காட்சிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

Suresh Kumar said...

@ராஜ நடராஜன் ////////

இன்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் அனைத்து ஊடகங்களும் நம்மை சித்திக்க விடாமல் ஏதோ ஒரு மாற்று பாதைக்கு எதிராக திருப்பி விடுகிறது. மதிமுக மற்றும் தமிழர் நலம் விரும்பும் மற்ற இயக்கங்களோடு கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மே மாதம் 26 ஆம் தேதி மறியல் செய்தனர். அது இதுவரை தமிழகம் சந்தித்த மறியல் போராட்டத்தில் இது மிக பெரிய மறியல் ஆனால் அந்த போராட்டத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஆனால் அதே போராட்டத்தை கேரளா ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பி தமிழகத்திற்கு எதிராக கேரளா மக்களை உசுப்பி விட்டது . அப்படியென்றால் யார் மக்களுக்காக ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள் . ஊடகங்களின் நம்பக தன்மை போய்விட்டது.

Anonymous said...

At night he is AIADMK,In the morning he is MDMK in the afternoon he is elam figther and back to AIADMK....His son
has a huge buisiness in USA which was funded by Jayalalitha...So he is a fool who make us fool...

Our hardwork is the capital which we should be able to cash in nothing matters more than that

Post a Comment

Send your Status to your Facebook