Saturday

கலாச்சாரத்தின் அடையாளமா தாலி ?

திருமணத்தின் போது மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது நம்மிடையே இருந்து வருகிற மரபு . அவரவர் வழக்கப்படி தாலி கட்டுவது நடந்து வருகிறது . பெரும்பான்மையானோர் தாலியை புனிதமாக கருதி வருகின்றனர் . திருமணம் ஆனதற்கு அடையாளமாக தாலி பெண்ணின் கழுத்தில் தாலி இருக்கிறது . சில வாரங்களுக்கு முன்னால் விஜய் டிவியில் நீயா? நானா ?நிகழ்ச்சிகள் இந்த தலைப்பில் விவாதித்திருந்தார்கள் அதனுடைய தாக்கம் தான் இந்த பதிவு .

தாலி கட்டும் பழக்கம் தவிர்க்க முடியாத ஓன்று என்று இருந்த் கால கட்டம் மாறி இன்று மிக பெரிய விவாத களம் திறக்க பட்டிருக்கிறது . தந்தை பெரியார் காலத்திலேயே தாலி மீதான விவாதம் துவங்கி தந்தை பெரியார் தாலியை எதிர்த்து , இது பெண்ணடிமை தனத்திற்காக கொண்டு வரப்பட்டது . பெண்ணுக்கு தாலி கட்டுவதில் ஆணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது என்று தாலி இல்லாத சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார் .

தந்தை பெரியார் உட்பட பலரும் சமூக மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றாலும் அந்த காலங்களை விட இன்று மூட நம்பிக்கைகள் அதிகமாகி விட்டன . இன்றைய காலகட்டங்களில் மனிதர்களின் பேராசைகளால் மூட நம்பிக்கைகள் அங்கீகாரம் பெற தொடங்குகின்றன . வீடு கட்டுவது முதல் பெயர் வைப்பது வரை .


தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தால் பெண்களுக்குள் திணிக்க பட்ட ஒரு மூட நம்பிக்கை தான் . திருமணம் ஆனவர்கள் அந்த தாலி பெண்ணின் கழுத்தில் இருக்கும் வரை கணவன் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகிறார்கள் . கடந்த பல நூற்றாண்டுகளாக தாலி விவகாரத்தில் மக்களை வேறு எதையும் சிந்திக்காத வண்ணம் மூடர்களாகவே வைத்திருக்கிறார்கள் .

தாலி வந்ததன் காரணமே ஆண்களின் சுயநலமே இன்று வழக்கத்தில் உள்ள மொழி " தாலி பெண்ணின் வேலி" என்ன வேலி அந்த வேலி ஏன் ஆணுக்கு இல்லை . நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நமக்கு அமைய பேகும் பெண் என்றுமே நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தாலி .

தாலி மீதான புனிதம் , சாஸ்திரங்கள் ஏழைகளுக்கு இல்லாமல் போய் விடுகிறது . திருமணத்தின் போது தங்கத்தில் தாலி செய்து போட்டு கொள்கிறார்கள் . பின்னர் பண தேவைகள் வரும் போது அந்த தாலியை கழற்றி அடகு வைக்கவும் தயங்கவில்லை . அப்படிப்பட்ட மக்களுக்கு தாலி என்றால் கஷ்டத்தை தேவைக்கு பயன் பட்டதே என்று தான் இருக்கும் . இன்றைய சினிமாக்கள் அனைத்துமே தாலிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது . மறைந்திருந்தோ , மயக்கத்தில்ருக்கும் போதோ அந்த பெண்ணுக்கு தெரியாமலோ , விருப்பம் இல்லாமலோ தாலி கட்டி விட்டால் அந்த பெண் அவனோடு வாழ வேண்டும் என்ற கேவலமான காட்சிகளை சினிமாக்கள் காட்டுகின்றன .

இன்று மக்கள் கலாச்சாரம் எது என்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் . ஆனால் அதை தான் கலாசாரம் என்றும் சொல்லி வருகிறார்கள் . ஆண்களும் மனைவியின் கழுத்தில் கிடக்கும் தாலி மீது வைக்கும் நம்பிக்கையை மனைவியின் மீது வைக்கவில்லை .பெண் எப்போது சமூகத்தில் தனக்கு வரும் பிரச்சனைகளையும் தானே எதிர் கொள்கிறாளே அன்றும் , சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமைகள் வரும் போதும் தாலி என்பதே காணாமல் போய்விடும் .

7 கருத்துக்கள்:

sweet said...
This comment has been removed by a blog administrator.
ஆ.ஞானசேகரன் said...

ஹெலோ.... sweet நண்பர் சுரேஷ் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்தை முன்வைக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம். அதுவே அத்துமீறி சொல்லப்படும் கருத்தாக இருந்தால் நல்லாயிருக்காது. இது உங்களின் வளர்ப்பு முறையை காட்டுகின்றது. அதற்காக உங்கள் அப்பனை அடிக்கனும் என்று சொல்லவில்லை. பின்னூட்டட்தை எடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்கின்றேன். தாலிகட்டிய பின்னும் மேட்டருக்கு போனா??????? யோசிப்பா.

Suresh Kumar said...
This comment has been removed by the author.
Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

ஹெலோ.... sweet நண்பர் சுரேஷ் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்தை முன்வைக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம். அதுவே அத்துமீறி சொல்லப்படும் கருத்தாக இருந்தால் நல்லாயிருக்காது. இது உங்களின் வளர்ப்பு முறையை காட்டுகின்றது. அதற்காக உங்கள் அப்பனை அடிக்கனும் என்று சொல்லவில்லை. பின்னூட்டட்தை எடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்கின்றேன். தாலிகட்டிய பின்னும் மேட்டருக்கு போனா??????? யோசிப்பா. ///////////////////


சரி நண்பா விடுங்க அவங்க வளர்ப்பு அப்படி

பித்தன் said...

அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.....

பித்தன் said...

sweet பேசியது நாராசமா இருக்கு.....

vasu balaji said...

நல்ல பதிவு சுரேஷ்குமார். சாஸ்திரத்தில் தாலி இல்லை. அது நடைமுறையில் வந்தது என்பதே உண்மை. மெட்டிதான் திருமணத்தில் சாஸ்திரப்படியானது.

Post a Comment

Send your Status to your Facebook