Monday

மதிமுக தனித்து போட்டியா ?நாளை முடிவு

அதிமுக கூட்டணியில் ஒரு வாரத்திற்கும் மேல் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழுபறியில் இன்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இதுவரை மதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் மதிமுக தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிகிறது. 
இதை உறுதி படுத்தும் வகையில் மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்க பட்ட தொகுதிகளில் மதிமுக சார்பில் எந்தவொரு கூட்டணி கட்சிகளின் பெயர்கள் இல்லாமல் தனியாக மதிமுக சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்ய மதிமுகவினர் துவங்கி விட்டனர் . எல்லா தேர்தலிலும் கூட்டணி கட்சிகளால் மதிமுக வஞ்சிக்க படுவது வாடிக்கையாகி விட்டது.


இந்நிலையில் நாளை மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில்  நாளை நடைபெறுகிறது . இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.  இதை பற்றி மதிமுகவினரிடம் கேட்ட போது குறைந்தது 23  தொகுதிகள் தந்தால் அதிமுக கூட்டணியில் தொடருவோம் இல்லைஎன்றால் தனியாக களம் காணுவோம் என்ற மனநிலையே பெரும்பாலான தொண்டர்களிடம் காணப்படுகிறது. 

2001  ஆம் ஆண்டில் திமுகவால் மதிமுகவிற்கு ஏற்பட்ட நிலைமை இப்போது அதிமுகவால் ஏற்பட்டிருப்பதாக கருதுகின்றனர் . இந்த தேர்தலை பொறுத்த வரையில் அதிமுகவ்ரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்பி வாக்களிக்க போவதில்லை. திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றே வாக்காளர்கள் வாக்களிக்க தயாராகி கொண்டிருக்கின்றனர். கடந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் என்பது திமுக , அதிமுக கட்சிகளை  பிடிக்காத வாக்காளர்களின் வாக்குகள் தான் . அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு வர போவதில்லை.  


மக்களை பொறுத்த வரையில் அதிமுக திமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் . மதிமுகவை வளர விட கூடாது என்பதில் இரண்டு கட்சிகளும் ஒரு நோக்கம் கொண்டவை தான் . இந்த நிலையில் நாளைய முடிவு  பெரும்பாலும் மதிமுக தனித்து போட்டியிடுவதாக இருக்கலாம்  என எதிர்பார்க்க படுகிறது.


அவ்வாறு மதிமுக தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதற வாய்ப்புகள் இருக்கிறது . நடுநிலை வாக்காளர்கள் மதிமுகவிற்கு ஆதரவளிப்பார்கள் . அது மட்டுமல்லாது திமுக அதிமுக வை விரும்பாத வாக்குகள் மதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது .  சில தொகுதிகளில் மதிமுக தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது . பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய பலமும் இருக்கிறது .அப்படி மதிமுக தனித்து போட்டியிடும் பட்சத்தில், இதுவரை எளிதாக வெற்றி பெற்று விடலாம் என இருந்த அதிமுக கூட்டணியின் வெற்றி கேள்வி குறியாகலாம்.    


அதிமுக வெற்றியை உறுதி செய்து கொள்ளுமா ? இல்லை மதிமுக தனித்து போட்டியிடுமா? நாளை தெரியும் ......


4 கருத்துக்கள்:

Mathan said...

மதிமுக தனித்து போட்டியிட்டால் அதிமுக பிரசாராம் பலவீனமடையும்.

Anonymous said...

in 2006 election DMK ready to give 27 seats but MDMK tied with ADMK and won 6 seats, now what happened ??? if MDMK contest with DMK in 2006 then they could won more than 15 seats.

தடம் மாறிய யாத்ரீகன் said...

வைகோ போன்ற நேர்மையான, நல்ல திறமையுள்ள அரசியல்வாதிகளை மக்கள் கண்டுகொள்வது எப்போது என தெரியவில்லை. காலம் நல்ல பதிலை சொல்லட்டும்

Anonymous said...

avar katchiyla selvau panna aal illye boss,ellorum dmk vuku vilai poitangale,avarukuthan election mudichavudan kachiyla pathavi tharnu soltangale admkla

Post a Comment

Send your Status to your Facebook