Tuesday

யார் ராஜ தந்திரி ? ஜெயலலிதாவா ? கருணாநிதியா ?

ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறக்கும் விதமாக கடந்த பதினைந்து நாட்களாக இரு கூட்டணி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட தொகுதி பங்கீடு இழுபறிகள் தினசரி பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை கவர்ந்தது . ஒவ்வெரு பத்திரிக்கைகளும் ஆளாளுக்கு தொகுதி பங்கீடை பல ரவுண்டுகள் முடித்த பின்னரும் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவடையவில்லை . இதனால் பத்திரிக்கைகள் மீண்டும் தொகுதி பங்கீடு பற்றிய ஆருடங்களை வெளியிட துவங்கியுள்ளனர் . 

கடந்த நாடாளுமன்ற தேர்தல் துவங்கும் நேரத்தில் வெளிவந்த கணிப்புகள் அனைத்தும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று வந்தது . தேர்தல்   முடிந்த பின்னர் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது . அப்போது அதிமுக கூட்டணி தோற்க இருந்த சில காரணங்களில் குறிப்பிடும் படியான காரணம் தொகுதி பங்கீடு இழுபறி . கடைசிவரை கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதது . அதை தான் தேர்தல் முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தமிழ் நாட்டில் மூன்றாவது அணி தோற்க காரணம் அதிமுக தான் என்றார் . 


அந்த தேர்தலில் அதுவரை திமுக கூட்டணியில் இருந்து வந்த பாமகவிற்கு 7  தொகுதிகளை ஒதுக்கி எல்லோரையும் ஆச்சரிய படுத்தி மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறியை ஏற்படுத்தினார் . அதே போல் இந்த முறையும் இதுவரை திமுக அதிமுக கட்சிகளை விரும்பாத வாக்களர்களின் வாக்குகளின் மூலம் எட்டு சதவீதம் வாக்குகள் பெற்ற தேமுதிகவிற்கு முதலிலேயே 41  தொகுதிகளை ஒதுக்கி விட்டு மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இழுபறியை ஏற்படுத்தினார் . ஒரு வழியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தகுதிகள் ஒதுக்க பட்ட நிலையில் . தொடர்ந்து மதிமுகவிற்கு இழுபறியிலேயே இருக்கிறது. 

மதிமுக தொண்டர்கள் மத்தியில் மிக பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது . மதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பின்னர் போய் விடும் . ஆனால் வைகோவையும் மதிமுகாவையும் அலட்சிய படுத்தும் அதிமுக தலைமை மீது பொது மக்களுக்கே ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடுவது போல் இருக்கிறது . கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக மட்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வில்லையென்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே சிதறியிருக்கும் . 


அதிமுக வெற்றி பெற்ற 60  தொகுதிகளில் 40  தொகுதிக்கு மேல் மதிமுகவின் தயவில் தான் ஜெயிக்க முடிந்தது . அதே போல் மதிமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிமுக மீது இருந்த வெறுப்பு மாற வழி கோலியது . தமிழக தேர்தல் பிரசாரங்களில் வைகோவிற்கு என்று ஒரு தனி இடம் உண்டு .  திமுகவும் அதிமுகவும் பல விசயங்களில் ஒற்றுமையாக இருப்பது போல் மதிமுகவை வளர விட கூடாது என்பதிலும் ஒற்றுமையாக இருக்கின்றது . 


இவ்வளவு நாட்கள் மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்காமல் இருப்பதே மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியிருக்கிறது . ஜெயாவின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்றே மக்கள் பேசும் வண்ணம் ஆகி விட்டது . தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் துரோகம் இளைத்த திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மதிமுக அமைதியாக  இருக்கிறது . அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்துகிறார் ஜெயலலிதா . 

ஆனால் யாருக்கு சாதகம் என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும் . கடந்த முறையும் இதே போல் இழுபறி ஏற்பட்ட போது தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக தான்  வைகோவை ஓரம் கட்டுகிறார் என்ற செய்திகள் வந்தது . அதே போல் இப்போதும் வருகிறது . கடந்த தேர்தல்களில் இதையே திமுகவினர் இணையம் வாயிலாக தெரிவித்தனர் . அது கூட திமுக மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை காங்கிரஸ் மீது மட்டும் காட்டவும் அதிமுக மீது ஆதரவு அலை ஏற்படாமல் இருக்க திமுகவே திட்டமிட்டு செய்யும் சதியாக தான் இருக்கிறது . 


இதில் யார் ராஜ தந்திரி ? ஜெயலலிதாவா ? கருணாநிதியா ?  மதிமுக இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் அதிமுகவால் இன்னொரு முறை தோல்வியை தாங்கி கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை . மதிமுக தனித்து போட்டியிட்டாலோ இந்த இழுபறி நீடித்தாலோ மதிமுகவிற்கு கவுரவமான தொகுதிகள் கிடைக்காமல் இருந்தாலோ அதிமுக தோல்வி பெறுவது உறுதி . 


 

4 கருத்துக்கள்:

Anonymous said...

A.I.A.D.M.K. MUST BE WIPEDOUT FROM TAMILNADU.

ramalingam said...

எல்லாம் இந்த சோ பண்ணுகிற வேலை. அவர் ரஜினியிடம் போய் பேசுவது போல, இந்த பிரச்னையையும் சமரசம் செய்ய வேண்டியதுதானே.

நிலவன் said...

அதிமுக தலைவிக்கு இன்னும் ஆணவம் குறையவில்லை

Rasukutty said...

ஜெயாவின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்றே மக்கள் பேசும் வண்ணம் ஆகி விட்டது//

மதிமுக காரர்கள் மட்டும்தான் மக்கள் என்பது இந்த மங்குனி அமைச்சருக்கு தெரியாமல் போய்விட்டதே மன்னா?

கடந்த முறை , கலைஞரை வெறும் இரண்டு சீட்டுக்களுக்காக கழட்டி விட்டுவிட்டு வந்த பாவம் துரத்துகிறதோ என்னவோ அமைச்சரே.

Post a Comment

Send your Status to your Facebook