Wednesday

கலைஞர் குடும்பத்திற்காக தற்கொலை செய்யும் அடிமைகள்

உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராஜாவின் பினாமியும் நண்பனுமான சாதிக் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பையும் பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது . பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில் இந்த ஊழல் கலைஞரின் குடும்பம் தான் சம்மந்த பட்டிருப்பதாக எல்லோருக்கும் தெரிந்து விட்ட நிலையில் சாதிக் பாட்சாவின் தற்கொலை மேலும் பல உண்மைகளை வெளிபடுத்த இருக்கிறது . 

இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முக . ஸ்டாலினின் நண்பர் என அறியப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதும் பிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . அரசியல் கொலைகளை கேள்வி பட்டிருப்போம் . ஆனால் இந்த மாதிரியான திமுக அரசியல் கொலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் . 

தேர்தல் நெருங்கி விட்டதால் எதிர்கட்சிகள் இதையே தேர்தல் பிரச்சாரமாக செய்வார்கள் என்பதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .  மாநில அரசு உத்தரவிடாவிட்டாலும் சிபிஐ விசாரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான் . சாதிக் பாட்சா சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ளவர் . ஏற்கனவே சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்திருக்கிறது . 

உலகையே வியக்க வைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த ராஜாவின் நெருங்கிய நண்பர் தான் சாதிக் பாட்சா . இவர் ராஜா மந்திரி ஆனா பின்னர் கிரீன் கவுஸ் ப்ரோமொடேர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிறுவனமே ராஜாவிற்கு உள்ளது என்று தான் செய்திகள் தெருவிக்கின்றன . திகார் ஜெயிலில் இருக்கும் ராஜா யாருக்காக இந்த ஊழலை செய்தார் என்பது சமீபத்தில் சிபிஐ - ஆல் விசாரணை செய்ய பட்ட கலைஞரின் ஒரு மனைவியும் இன்னொரு மனைவியின் மகளுக்கும் தான் வெளிச்சம் . 

இன்று காலை டில்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்ததாகவும் , சாதிக் பாட்ச அப்ரூவர் ஆக முடிவெடுத்த நிலையில் இந்த தற்கொலை நடந்திருப்பது மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது . ஏற்கனவே ஸ்டாலினின் பினாமியாக கருதப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார் . அதே போல் கனிமொழிக்காக ஊழல் செய்த ராஜாவின் பினாமியாக கருதப்பட்ட சாதிக்கும் இப்போது தற்கொலை செய்துள்ளார் . 

யாரை காப்பாற்ற இந்த தற்கொலைகள் என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும் . நல்ல வேளை ராஜா ஏற்கனவே ஜெயிலுக்கு போய் விட்டார் அதனால் தப்பித்தார் .......... முட்டாள் தனமாக நம்பியிருக்கும் தொண்டர்களை எப்போது தற்கொலை செய்ய வைப்பார்களோ என்ற அச்சம் தான் இப்போது மிச்சம் .

5 கருத்துக்கள்:

Prakash said...

It seems Sadiq Basha’s death is a pure suicide, it’s too mentioned in his suicide note. Also from TV visuals taken during CBI raids in December, he seems to be of very low motivated person and not like Raja or Bawla. Hope he can’t handle the pressure put by CBI and media etc..

How can DMK be related to his suicide, DMK is a party of more than 60 years. Can’t they know the consequences of this during critical election period? Are they dump..

If it’s a murder, Why can’t the DMK opponent parties done that to put the blame on DMK and take political mileage.

Why can’t DMK opponent parties done this to bring back 2G spectrum issue to lime light as it was pushed back due to election news and Japan Tsunami.

CBI need to do complete probe in this angle also.

Anonymous said...

ALL TAMIL FOOLS .LOOK AT THE TIMING OF JEYA'S CANDIDATE LIST WITHOUT GIVING BERTH TO M. D. M. K. AND PASHA'S DEATH. THIS DEATH NEWS SUPPRESSED SENSATIONAL NEWS OF V.GOPALSAMY.

மதுரை சரவணன் said...

good post. ithuve therthal pirachaara uththikku valivakukkum...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தற்கொலை செய்துள்ளார் என்பதிலும், தற்கொலை செய்யத் தூண்டப்பட்டுள்ளார் என்பதே பொருத்தம்.
கட்டாயம் இந்தக் கோணத்தில் விசாரிக்கவேண்டும்.

Anonymous said...

திமுக அல்லக்கைகள் அனைவரும் கருணாநிதி செத்தபின்னர் தற்கொலை செய்வார்கள்..

Post a Comment

Send your Status to your Facebook