Wednesday

அலைபேசி வாடிக்கையாளர் சேவைகளை தொடர்பு கொள்ளும்பெண் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

அலைபேசி பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க அலைபேசிகளின் மூலம் ஏற்படும் பயன்கள் ஏராளம் இருந்தாலும் சில பிரச்சனைகள் தொந்தரவுகள் ஏற்பட்டும் வருகின்றது.  அலைபேசியில் எதாவது பிரச்சனை என்றால் நாம் அந்த நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவே பிரச்சனைகள் வருகிறது என்றால் நாம் யாரை தொடர்பு கொள்வது . 


ஒவ்வெரு நிறுவனங்களும் தங்களுக்கென வாடிக்கையாளர் சேவை மையம் வைத்திருக்கின்றன . இதில் ஒவ்வெரு நாட்களும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சேவை மையத்தை தொடர்பு கொள்கின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளும் அழகான குரலை கொண்ட பெண்கள் அவர்களின் வயது இவற்றை இந்த ஊழியர்கள் தெரிந்து கொண்டு குறிப்பிட்ட பெண்களின் அலைபேசி எண்களை தேர்ந்தெடுத்து தனியாக அந்த பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதும், அல்லது நண்பர்களுக்கு அந்த எண்களை கொடுப்பதுமாக நடந்து வருகின்றது. 


எனக்கு தெரிந்த ஒரு தோழிக்கு அவர் அலைபேசி எண் எடுத்து சிறிது நாட்களிலேயே பலரிடமிருந்து தவறான அழைப்புகள் வந்து கொண்டிருந்தன . இதை பற்றி விசாரித்த போது தான் மேற்கொண்ட தகவல் தெரிய வந்தது . அவர் ஏர்டல் இணைப்பை பயன்படுத்துகிறார். திடீரென ஒரு நாள் நீங்கள் டயலர் டோன் தேர்வு செய்துள்ளீர்கள் என ஒரு குறுச் செய்தி வந்திருக்கிறது . கூடவே அதற்கான தொகையையும் எடுத்திருக்கிறார்கள். உடனே இவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார் . முதலில் சொல்லியிருக்கிறார்கள் உங்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்க பட்டுள்ளது என்று. பின்னர் நான் அப்படி எதுவும் விருப்பம் தெரிவிக்க வில்லை என்று சொன்ன பின்னர் அவர்களாகேவே செய்து கொண்டதை ஒத்து கொண்டிருக்கிறார்கள். காசை திருப்பி தருகிறோம் என வாக்கு கொடுத்து 24 மணிநேரம் ஆன பின்னரும் காசு வரவில்லை . இவர் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் . 


இதே போல் மூன்று நான்கு தடவை வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் தாண்டிய பின்னர் தவறான அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. இதை பற்றி ஏர்டல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரியும் நண்பரை கேட்டால் , இதெல்லாம் சர்வ சாதாரணம் எங்களுக்கு பேசுகிறவர்களும் முழு விபரமும் தெரியும். எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்து தவறாக பயன் படுத்த வாய்ப்புகள் இருக்கிறது . மேலும் ஒரு நாள் குறைந்தது ஆயிரம் பேருக்காவது மதிப்பு கூட்டு சேவைகளை ஆக்டிவேட் நாங்களாகவே செய்வோம் அதில் இரண்டு மூன்று பேர் தான் ஏன் செய்தீர்கள் என கேட்பார்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு திருப்பி அவர்கள் பணத்தை கொடுத்து விடுவோம் என சர்வ சாதாரணமாக சொல்லுகிறார்.  

இந்த பிரச்சனைகள் சாதாரண பிரச்சனைகள் என்று ஒதுங்கி விட முடியாது. ஒவ்வெரு நிறுவனமும் இதே போன்ற பிரச்சனைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றன . இன்று அலைபேசி பயன் படுத்துபவர்களில் பாதிக்கு மேலானோர் குறுஞ்செய்திகளை(SMS) படிப்பதில்லை அல்லது படிக்க தெரியாது. இவர்கள் தான் இந்த மாதிரி நிறுவனங்களில் பெரும்பாலும் ஏமாறுகிறார்கள். இதற்கு மாற்று வழி தான் என்ன ?   

4 கருத்துக்கள்:

bandhu said...

இதில் இரண்டு பிரச்சனைகளை எழுதி இருக்கிறீர்கள்.

வேண்டும் என்றே ஒரு 'சேவையை' கொடுத்து காசு பறிக்கும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் கோர்ட் மூலம் வழக்கு பதிவு செய்வது ஒரு பிரச்சனைக்கு வழி. இரண்டாவது பிரச்சனைக்கு போலிஸ் மூலம் அணுகலாம். இதெல்லாம் ஒரு மேம்போக்கான வழிகளாக தெரிகிறது. ஆனால் வேறு எதுவும் தோன்றவில்லை!

ம.தி.சுதா said...

அட புதுமையாயிருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

Suresh Kumar said...

நுகர்வோர் கோர்ட் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நினைக்கும் மக்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. நுகர்வோர் கோர்ட் சமந்தமான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. அப்படியே தெரிந்திருந்தால் கூட 10 ரூபாய்க்காக கோர்ட் போய் காலத்தை விரயம் ஆக்க வேண்டுமா என நினைக்கும் மக்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி தான் நிறுவனங்கள் மக்கள் பணங்களை கொள்ளையடிக்கின்றன.

வான்முகிலன் said...

இதற்கெல்லாம் ஒரே வழி, நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, புகார் மனு கொடுங்கள். வேறு எங்கு புகார் கொடுத்தாலும் எந்தப் பயனுமில்லை. தைரியாமாக சென்று புகார் கொடுத்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும்.

Post a Comment

Send your Status to your Facebook