Tuesday

கேப்டனின் அசத்தல் பிரச்சாரத்தால் அதிமுக கூட்டணிக்கு பலமா ?

தேர்தல் பிரச்சாரங்கள் விறு விறுப்பாக நடந்து வரும் சூழலில் திமுக கூட்டணியினர் விஜயகாந்தை போட்டு தாக்குவதில் குறியாக செயல் பட்டு வருகின்றனர்.  விஜயகாந்த் பெயரை எவ்வளவு நாறடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நாறடித்து கொண்டிருக்கின்றனர் . இந்த நிலையில் விஜயகாந்த் பேச்சை கேட்க வேண்டும் என நானும் தக்கலை சென்றிருந்தேன் . பத்மநாபபுரம் வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் . 

கேப்டனின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் அந்த வழியாக எந்த பேருந்து சென்றாலும் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்க மறக்க வில்லை. இதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சொல்லி கேப்டனும் வந்து விட்டார் . 

விஜயகாந்த் வந்தவுடன் தொண்டர்களின் கோசங்கள் விஜயாகந்துக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . மேலும் விஜயகாந்தை பார்க்கவும் பேச்சை கேட்கவும் கட்சி சார்பற்ற மக்கள் பலரும் வந்திருந்தார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை அதிமுக கட்சியினர் மிக குறைவானவர்களே வந்திருந்தனர் . மார்க்சிய பொதுவுடைமை கட்சி தோழர்களும் ஆஜராகியிருந்தனர் . சிந்தியுங்க மக்களே என பேச்சை ஆரம்பித்த கேப்டன் வாயிலிருது வரும் வார்த்தைகளின் தடுமாற்றம் தெரிந்தது . ஏற்கனவே ஆப் அடித்து விட்டு தான் கேப்டன் பேசுவார் என ஊர் முழுக்க தெரிந்திருக்கும் நேரத்தில் கேப்டனின் பேச்சுக்களை பார்க்கும் போது அது உண்மை என்று தான் தெரிகிறது . 

ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து துவங்கும் கேப்டன் மக்களுக்கு புரியும் படியாக சொல்லாமல் பாதியில் விட்டு விட்டு சிந்தியுங்க மக்களே என்று தன் பாணியில் பேசுகிறார்கள். எந்தவொரு கருத்தையும் முழுமையாக சொல்ல முடியவில்லை. விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்பதை கேட்காமலே கைதட்டும் தொண்டர்கள் தான் விஜயகாந்த் வாகனத்தின் முன்னர் அதிகமாக நின்றனர் . விஜயகாந்தால் தொண்டர்களின் சத்தத்தை மீறி பேச முடியவில்லை. ஒவ்வெரு முறையும் நான் சொல்றத கேளுங்க சத்தம் போடாதீங்க என்று சொல்லி பார்த்தார் . ஒரு கட்டத்தில் யோ நீங்க ஏதாவது பண்ணி என வாயிலிருந்து ஏதாவது வந்து அதை டிவில காட்டிட போறான். அதனால கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொல்லும் போது அவருடைய ஸ்டைல பார்த்தே மக்களுக்கு சிரிப்பு அடங்க வில்லை . 

சிவப்பு கொடி பிடித்து கொண்டிருந்த தோழர்கள் அவர்களுக்குள் நல்ல நேரம் நம்ம தொகுதியில பேச வரல . இப்படி பேசினால் ஓட்டு போடணும்னு நினைக்கிறவனும் ஓட்டு போடமாட்டான் . நடுநிலையாளர்களாக வந்த அனைவருடைய கருத்தும் அதுவாக தான் இருந்தது.

 கருணாநிதியின் குடும்ப ஆட்சி அதன் மூலம் தமிழகத்திற்கு ஏற்பட போகும் கேடுகள் , அலைவரிசை ஊழல் , மின் பற்றாகுறை , விலைவாசி உயர்வு போன்ற போன்ற பல பிரச்சனைகள் இருந்த போதும் அதிமுக கூட்டணியை பொறுத்த வரையில் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை . பிரச்சாரங்களை பொறுத்த வரையில் திமுகவே முன்னிலையில் நிற்கிறது . ஜெயலலிதா குமரி மாவட்டத்திற்கு வந்து சென்றதே பலருக்கு தெரியவில்லை .

மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்தால் மக்கள் மனதை மாற்ற முடியும் என்கிற அளவில் பிரச்சாரத்தில் அதிமுக மிகவும் பின் தங்கியிருக்கிறது . ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதை மக்கள் மத்தியில் கேட்டால் ஜெயலலிதா செய்யாத ஊழலா என்று தான் கேட்கிறார்களே தவிர அதனால் ஏற்பட போகும் விளைவுகள் தெரியவில்லை இது தான் நிலவரம் .

அதிமுக கூட்டணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற நிலை மாறி திமுக கூட்டணி வெற்றி பெற்று விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது . திமுகவிற்கு மாற்றாக ஜெயலலிதாவை மக்கள் நம்ப தயாரில்லை என்பது மட்டும் தெரிகிறது . கருணாநிதிக்கு மாற்றாக தன்னை நிருபிக்காததும் ஜெயலலிதாவின் தவறு . அதே போல் விஜயகாந்தின் பிரச்சாரம் என்பது நடுநிலை வாக்காளர்களை கவரும் விதமாகவும் இல்லை . 

8 கருத்துக்கள்:

Asari said...

கேப்டன் வெற்றி பெற்று விடுவார் என்ற பொறாமை தான் காரணம்

Anonymous said...

பிரச்சினைகள்:
ஊழல் - அம்மா வந்தால் இன்னும் அதிகரிக்கும்.
குடும்ப அரசியல்- திருமணமான குடும்ம்பம்.ஜாலி மற்றும் வளர்ப்புக் குடும்பம்
.கொள்ளை- கொட நாடு, இரண்டு கோடி செக். அடித்து வாங்கிய சொத்துக்கள், சிறுதாவூர் இதெல்லாம் பகல் கொள்ளையில்லையா?
இலவசங்கள்- ஏழைகள் பெருவதில் என்ன தவறு? பெரிய வெளி நாட்டு நிறுவனங்களுக்குத் தரும் வரிச்சலுகையில் நூற்றில் ஒரு பங்கு கூடக் கிடையாது. பகல் கொள்ளையடிக்கும் சினிமா மற்ற கருப்புப் பணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது
.மக்கள் - அரிசி, உறைவிடம், மருத்துவம் முக்கியமானவை கிடைக்கின்றது.
விலைவாசி- உலகெங்கும் விலைவாசி ஏறித்தான் உள்ளது. கலைஞர்- மரியாதை, மக்கள் அனுகலாம்.
நடிகை- மைசூர் மஹாராணி என்ற நினைப்பும்,மமதையும். காலில் விழவைத்து ரசிக்கும் ஆணவம்.
விஜயகாந்த்- பாவம், பரிதாபம்.
இடது சாரி- நடிகையிடம் மாட்டிக் கொண்ட மூளைகள்.
ம திமு க- மானம் மரியாதை போன திராவிடர்கள். இனி மலர்ச்சியே கிடையாது.அ தி மு க வும் இல்லை, காங்கிரசும் இல்லை. விJஅய காந்தா,தி மு க வா? கட்டாயம் விடுதலை சிறுத்தைகளை ஆதரிக்கலாம். பா ம க் தொல்லையுது போடுவோம். தி மு க வேறு வழியின்றிப் போடுவோம்.

வாழ்க நடிகையும், விஜயகாந்தும், தி மு க வெற்றி பெறும்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஸ்டின் நல்ல பசையுள்ள பார்ட்டி ஆச்சே மக்கா...ஜெயிச்சுருவாருன்னுதான் சொல்றாங்க நண்பனுங்க...

Suresh Kumar said...

MANO நாஞ்சில் மனோ said...
ஆஸ்டின் நல்ல பசையுள்ள பார்ட்டி ஆச்சே மக்கா...ஜெயிச்சுருவாருன்னுதான் சொல்றாங்க நண்பனுங்க...///////////

போட்டி பலமாக இருக்கிறது எதிர் வேட்பாளரை விட ஆஸ்டின் தகுதியானவர் தான்.

ராஜ நடராஜன் said...

இரு கழகங்களில் எது வந்தாலும் தமிழனுக்கு விடிவு இல்லை.வேடிக்கை பார்க்கிறேன்.

VJR said...

சிரிப்பை அடக்க முடியவில்லை.

Suresh Kumar said...

ராஜ நடராஜன் said...
இரு கழகங்களில் எது வந்தாலும் தமிழனுக்கு விடிவு இல்லை.வேடிக்கை பார்க்கிறேன்.////////////

தமிழனுக்கு விடிவற்ற தேர்தல் தான் நடைபெற இருக்கிறது. வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை. நன்றி

vetri said...

dei சுரேஷ் நீ நக்கீரன பத்தி command பண்ற ஆனா இன்னைக்கு கேப்டன் ஜெயிசிடாறு உன்னோட முஜில கரிய புசிடாறு இப்ப என்ன சொல்ற நாய நாய நாய

Post a Comment

Send your Status to your Facebook