Sunday

கடைசி கட்ட கருத்து கணிப்பு


அன்பார்ந்த தமிழக மக்களே இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவு பெறுகிறது. 13 தேதி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுக்கான தமிழகத்தின் தலைவிதியை மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். இது குறித்து ஜூனியர் விகடனின் வந்த கருத்து கணிப்பு உங்களுக்காக. 

திமுக கூட்டணி - 92 
  
திமுக - 67

காங்கிரஸ் - 15  
பாமக - 7    
விடுதலை சிறுத்தைகள்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்

அதிமுக கூட்டணி - 141 

அதிமுக - 105

தேமுதிக - 17
சிபிஎம் - 11
சிபிஐ - 4
மனித நேய மக்கள் கட்சி - 3
கொங்கு இளைஞர் பேரவை -

மேலும் கடைசி நேரத்தில் இந்த நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாக மூன்று காரணங்களை ஜூனியர் விகடன் கணித்துள்ளது . 

1.     தேர்தல் கமிசனின் கெடுபிடிகளையும் மீறி (அல்லது அவர்கள் தங்களை தாங்களே இறுக்கம் தளர்த்தி கொண்டால் ) நினைத்த தொகுதிகளில் எண்ணி வைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ 
2.     மன சாட்சி படி வாக்களியுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மதிமுகவிற்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்த கட்சிக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய் தான். ஆனால் சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மனவேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ ...
3.     கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்த போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ ..   

இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும் . 

டிஸ்கி : இனி நீங்க முடிவு பண்ணுங்க யார் ஆட்சிக்கு வருவாங்கன்னு ....     

7 கருத்துக்கள்:

Unknown said...

தே.மு.தி.க.வின் 17 சீட்டுகள் அதிமுகவுக்கு எக்காலத்திலும் உதவாது. சில்லரைக் கட்சிகளின் சிற்சில சீட்டுகள் 118க்குக் கொண்டு வராது. அதனால் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் விரல் விட்டு ஆட்டிப் பார்ப்பார்கள். பா.ம.க மற்றும் காங்கிரசுக்குத் தூண்டில் போடுவார். பதவி சபலத்தில் காங்கிரஸ் வந்து ஒட்டிக் கொள்ளும். அன்புமணிக்காக அய்யாவும் காங்கிரசின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடோடி வருவார். காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாங்களா! எங்கள் சுயமரியாதை அதற்கு இடம் கொடாது, என்று திமுக கூட்டணிக்கு சோத்துக்கை மற்றும் பீச்சகை கம்யூணிஸ்டுகல் ஒரே தாவு தாவுவார்கள். தமிழகம் இதையும் பார்க்கத்தான் போகிறது.

பொன் மாலை பொழுது said...

Well said Vijay Gopalsaamy.

Anonymous said...

தமிழக மக்கள் கட்டாயம் ஆட்சி அமைக்கும் படி வாக்களித்து விடுவார்கள். கோமாளி விகடனே இறங்கி வந்துள்ளது தி மு க வின் வெற்றியைத்தான் குறிக்கின்றது. அவாள் அனைவரும் ஒரேயடியாக ஸ்ரீரங்கத்துக்குக் காவடி தூக்கியுள்ளதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். சங்கராச்சாரி கைதையே மன்னித்து, மறக்குமளவிற்கு அவாள் பாசம் மத்தவா கண்களைத் திறந்து விட்டுள்ளது.

Suresh Kumar said...

@Vijay gobal samy //////

நீங்கள் நினைக்கிறது போல் இருக்க வாய்ப்பு இல்லை எனக்கு தெரிந்து அதிமுக கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுகவே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது . இது ஜெயலலிதாவே திமுகவை ஆட்சியில் வைக்க போவது தான் .

ராஜேஷ், திருச்சி said...

2009 ல் ஜூ வி கணிப்பு - தி மு க 7 , அதிமுக 32
உண்மை நிலவரம் திமுக 30, அதிமுக 9
இட்லிவடை கூட இதை டிஸ்க்ளைமர் போல் போட்டிருந்தது ..

இது நடந்த உண்மை.. இப்போவும் அப்படியே தான் ஆகும்..

திமுக 130௦ , அதிமுக 100௦௦ .. பாருங்கள்.. நடக்கும்

ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு இப்போ விகடனில் குறைந்திருப்பதை கவனிதிர்களா.. ?

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகள் வெளிவந்து விட்டது

ராஜ நடராஜன் said...

நக்கீரன் என்ன சொல்லுதாம்:)

Post a Comment

Send your Status to your Facebook