Monday

ஏன் அதிமுகவினர் சோர்வடைகிறார்கள் ?

கடந்த இரண்டு நாட்களாக வெற்றிக்கான கடைசி கட்ட பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய ஜெயலலிதா தொண்டர்கள் சோர்வடைய கூடாது என சொல்லவேண்டிய நிலைக்கு தள்ள பட்டதன் காரணம் என்ன? உண்மையில் தொண்டர்கள் சோர்வடைந்து விட்டார்களா? ஏன் சோர்வடைந்தார்கள் ?

எங்கேயோ சென்ற தேர்தல் இப்போது எங்கேயோ வந்து நிற்கிறது. சோர்வடைய வேண்டிய திமுகவினர் சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய அதிமுகவினர் சோர்வடைந்தும் காணப்படுகின்றனர்.

கடந்த முறை அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என இருந்த நிலையில் கடைசி நேரத்தில் மதிமுகவோடு கூட்டணி வைத்து கொண்டதால் தமிழக வரலாற்றிலேயே ஒரு மைனாரிட்டி திமுக ஆட்சியையும் அதிக சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட எதிர் கட்சியும் அமைந்தது. மதிமுகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் இன்றுவரை அதிமுக நிலைத்து நிற்க காரணமானது. அந்த தேர்தல் முடிந்து திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றவுடன் தன தொண்டர்களை தக்க வைக்க வேண்டி பேசிய ஜெயலலிதா " நாம் இன்று அறுபதுக்கு மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம் எனவே பயப்பட வேண்டியது நாம் அல்ல திமுக தான் " என்றார். 

அந்த ஜெயலலிதா இப்போது எங்கே ? தேர்தல் பிரச்சாரம் துவங்கிய போது இதே தெம்போடு பேசிய ஜெயா இப்போது சோர்வடைந்து விடாதீர்கள் என செல்லும் இடம் எல்லாம் பேச வேண்டிய நிலைக்கு மாற காரணம் என்ன ?   கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றி கனியை  ஈட்டலாம் என காத்திருந்த அதிமுகவினர் ஏன் சோர்வடைந்தார்கள்? 

தேர்தல் அறிவிப்பு வெளியான போது அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்ற சூழ்நிலை தான் இருந்தது. திமுக ஆட்சிக்கு எதிரான அலை தமிழகமெங்கும் இருந்தது. திமுகவிற்கு எதிரான அலையை வாக்குகளாக ஜெயலலிதா மாற்றுகிறார் என தான் நினைத்தார்கள் விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்த போது. ராஜ தந்திரத்தில் ஜெயலலிதாவே முன்னிலையில் இருந்தததாக தான் நினைத்தார்கள்.  ஆனால் அடுத்தடுத்து ஜெயலலிதாவின் ஆணவத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் தான் இன்று அதிமுகவினர் சோர்வுக்கு காரணம். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுகவோடு மதிமுக கூட்டணி அமைத்து ஒரு கூட்டணி கட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தோடு இருந்தது. ஆனால் யார் இல்லைஎன்றாலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிதப்பில் இருந்த ஜெயலலிதாவால் வைகோவும் மதிமுகவும் அலட்சிய படுத்த பட்டது தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1 .5  சதவீத வாக்குகளே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 22  தொகுதிகளும் 6  சதவீத வாக்குகள் பெற்ற மதிமுகவிற்கு 6  தொகுதிகளிலிருந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை துவங்க காரணம் என்ன? ஆனால் இத்தனை தூரம் அவமான படுத்த பட்டரும் வைகோ மவுனமாகவே இருந்து எல்லோர் மனதையும் வென்று விட்டார்.     அவர்களாகவே கூட்டணியை  விட்டு வெளியேற்றியது ஜெயலலிதா இன்னும் திருந்த வில்லை என்பதை தமிழகத்திற்கு எடுத்து காட்டியது. அப்போதே அதிமுகவின் தோல்வி குறிக்க பட்டுள்ளது. அதுவரை அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த கருத்து கணிப்புகள் எல்லாம் தலை கீழாகி விட்டது.

மேலும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த போதும் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் தன் பணியில் தொடர்ந்து, நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் முழு மூச்சோடு போராடி வந்த வைகோவை வெளியேற்ற ஆயிரம் கோடி வரை கைமாற பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை அதிபரிடமிருந்து. அடுத்து விடுதலை புலிகள் மீதாணை தடையை நீக்க வேண்டும் என நீதி மன்றம் வரை சென்று போராடி வருகிறார் வைகோ. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கூடாது என்பது ராஜ பக்ஷேவின் ஆசை அதுவும் வைகோ கூட்டணியிலிருந்து வெளியேற்ற காரணமாகி விட்டது.

எந்த காரணங்களுக்காக மக்கள் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என நினைத்தார்களோ அத்தனை காரணங்களும் மதிமுக வெளியேற்ற பட்ட நாளே உடைத்து விட்டார் ஜெயலலிதா. இப்படி திருந்தாத ஜெயலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தவறான பாதையில் செல்லும் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால் திமுக வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாக்கி வருகிறது.         மக்கள் மத்தியில் ஜெயலலிதா நம்பிக்கை இழந்த காரணத்தால் தான் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர் . இந்நிலையில் தான் சோர்வடைந்து விடாதீர்கள் என்று செல்லுமிடமெல்லாம் ஜெயலலிதா சொல்லி வருகிறார்.

 யார் வெற்றி பெற்றாலும் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்திற்கு தான் செல்லும் என்பது மட்டும் தெரிகிறது. 

9 கருத்துக்கள்:

ராஜ நடராஜன் said...

இன்றையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.இனிமேல் தேர்தல் ஆணையம் பாடு!மக்கள் பாடு.

அரசியல் பதிவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்தால் யார் யார் ஜோஸ்யம் பலிச்சுதுன்னு மே 13க்கு அப்புறமா மதிப்பீடு செய்ய இயலும்:)

Suresh Kumar said...

ஆம் ஒப்பிட்டு பார்ப்பது தான் நல்லது என் பதிவுகளை பொறுத்த வரையில் தேர்தல்2011 என்ற குறிச் சொல்லோடு இருக்கும் நன்றி .

Vimalan said...

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்

அருள் said...

பல ஊடகங்கள் தமிழ்நாட்டில் ஜெ. ஆதரவு அலை வீசுவது போன்று எழுதிவருகின்றன. எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை. மக்கள் எதற்காக ஜெ'வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும் என்னால் கண்டறியமுடியவில்லை.

Unknown said...

//பல ஊடகங்கள் தமிழ்நாட்டில் ஜெ. ஆதரவு அலை வீசுவது போன்று எழுதிவருகின்றன. எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை. மக்கள் எதற்காக ஜெ'வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும் என்னால் கண்டறியமுடியவில்லை.//

ஆனால் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டே அருளண்ணே

ராம கிருஷ்ணன் said...

அ இ அ தி மு க வுக்கு வைகோ மாபெரும் இழப்பு என்று வைத்து கொண்டாலும், வைகோ தரப்பு ஸ்டெர்லைட் மூலம் ஆயிரம் கோடிகள் வந்ததாக சொல்வது ரொம்ப ரொம்ப ஓவராக படவில்லையா?

ஜெவால் தி மு க வை எதிர்த்து கடைசி வரை தாக்கு பிடித்து வெற்றி பெறமுடியுமா, கலைஞரின் அதிகார பலத்துக்கு முன் ஜெயிக்க முடியுமா என்ற ஐயம் ஒவ்வொரு வாக்காளனுக்கும் உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, இப்படி ஒரு அபாண்ட குற்றசாட்டு ஏன்? இதனால் என்ன சாதிக்க முடியும்?

இதே பணத்தை கருணாநிதிக்கு கூட வைகோவுடன் சேர்த்தே அ இ அ தி மு க வும் வரக்கூடாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்திருக்கலாமே?

அப்படி வைகோவுக்கு ஸ்டெர்லைட் தான் பிரதான எதிரியாக கருதினால் தூத்துக்குடியில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கலாமே...ஏன் செய்யவில்லை?

அப்படியும் இல்லாவிட்டால் இன்று நீலி கண்ணீர் வடிக்கும் வீரமணி, ராமதாஸ், திருமாவளவன், நக்கீரன் கோபால் மூலம் திராவிட இயக்கங்களை ஒன்றின்னைக்க முற்படுவதாக முகாரி பாடும் கருணாவின் ஆதரவைப்பெற்று களம் கண்டு சட்டமன்றத்துக்கு வந்து ஜெ..முதல்வராவும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக முழங்க முயற்சித்திருக்கலாமே...?ஏன் செய்ய வில்லை?

அறுபத்தி மூன்று சீட்களை தானமாக இத்துப்போனவர்களுக்கு தந்த கருணாநிதியால் தன அன்பு தம்பிக்கு ஒரு சீட் தரமுடியாதா ..?

கடந்த எம்பி, எம்மெல்யே எலேச்ஷங்களில் தொடர்ந்து தோற்பது மட்டுமல்ல... வெற்றிபெற்று உடன் இருந்தவர்களையும் இழந்தது யார் தப்பு..?

நாஞ்சில் சம்பத் போன்றோர்களை நம்பினால் கட்சி கரை சேராது...வைகோவும் அவரது புதிய ஆதரவார்களுமான முன்னாள் வசவாளர்களும் புரிந்துகொள்ளட்டும்....!

Kandumany Veluppillai Rudra said...

"யார் வெற்றி பெற்றாலும் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்திற்கு தான் செல்லும் என்பது மட்டும் தெரிகிறது."
இதுதான் உண்மை.

Suresh Kumar said...

@ ராமகிருஷ்ணன் //////////

ஸ்டெர்லைட் மட்டும் எதிரி அல்ல மதிமுக எந்த கூட்டணியில் இருந்தாலும் சமரசமில்லாமல் கொள்கைகளை முன்னேடுப்பும் தான்.

மதிமுக மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலில் இருக்கிறதே தவிர ஒரு சீட் இரண்டு சீட் அல்ல. அதே நேரம் சுயமரியாதையை இழந்து பதவி பெற வேண்டிய நிலையிலும் இல்லை.

இந்த தேர்தல் புறகணிப்பு என்பது அடுத்த தேர்தலில் மாற்று சக்தியாக உருவாக ஒரு ஆயத்தம் தான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//யார் வெற்றி பெற்றாலும் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்திற்கு தான் செல்லும் என்பது மட்டும் தெரிகிறது. //

சத்திய வாக்கு!

Post a Comment

Send your Status to your Facebook