நேற்றும் இன்றும் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை அய்யர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் என்ன மாற்றங்கள் நடைபெற போகிறதோ?
இன்னும் ஓரிரு நாளில் கட்சி மாறும் காட்சிகள் கூட நடைபெறலாம். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என சரியாக கணிக்க முடிந்தவர்கள் வெற்றி பெறும் கட்சிக்கு மாறி முன்னுரிமை பெற வாய்ப்பிருக்கிறது.
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 77 .4 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் பதிவான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. அதே போல் ஒரு மாதம் காத்திருந்து தேர்தல் முடிவுகளை அறிவது என்பதும் புதிதாக தான் இருக்கிறது.
இந்நிலையில் அய்யர்கள் ஜெயலிதாவை சந்தித்து பூஜை செய்தும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பல பூசாரிகள் அதிமுகவில் இணைத்திருக்கிறார்கள். பூசாரிகள் மூலம் யாகம் எதாவது நடத்தி விழுந்த வாக்குகளை மாற்ற போகிறாரா ? இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பாப்பனர்களும் சேர்ந்து வாக்குகளை மாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்து ஜெயலலிதாவை முதல்வராக்க பார்கிறார்களா ? ........
இடைத்தேர்தல்கள் தான் நினைவுக்கு வருகிறது ........
3 கருத்துக்கள்:
என்ன அநியாயம் பண்ணிட்டேள் ! நீரெல்லாம் எங்கேருந்து வந்தேள், எழுதிக் கிழிக்க. நாங்க போய் பாத்தவா எல்லாம் சுத்தமான அய்யங்கார், நாமத்தை நன்னா பாத்துத் தொலையும்.இத்தோ பெரிசா போட்டிருக்கோமில்லே, தெரியவேணாம். அய்யர் வாளெல்லாம் இன்னும் சங்கராச்சாரி கைது கோபத்திலே முனகிண்டு இருக்கா. போய்ப் பாரும். ஸ்ரீரங்கத்துக்கே சேகர் அய்யர் வேறே வந்து எதுத்துப் பேசிட்டானாக்கும்.
புராணங்களில் அரக்கர்கள் தோற்பதாகவும் தேவர்கள்
வெல்வதாகவுமே எழுதியிருப்பதை அப்போது நம்பவில்லை
இப்போது நம்புகிறேன் கலைஞரின் வாழ்க்கைமுறையைப்
பார்த்து, நாம் எப்போதும் அர்க்கர்கள்தான். இதற்கு கலைஞரின்
பலதார வாரிசுகளே சான்று.
arunmullai ////////////
ஐயா கலைஞரை அரக்கர் என்று சொல்லுகிறீர்கள் ஓகே அப்போ ஜெயலலிதா தேவர்களா ? இதெல்லாம் ஓவரா இல்ல. கலைஞர் அரக்கர் என்றால் ஜெயலலிதா அரக்கி அல்லவா ? இரண்டு பேருமே மக்கள் இனத்திற்கு வேண்ட படாதவர்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
எல்லோரும் மனிதர்கள் தானே தவிர யாரும் தேவர்களாக இருக்க முடியாது.
Post a Comment