தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது. ஆட்சி செய்தவர்களால் ஏமாற்ற பட்ட தமிழர்களும் ஆட்சி செய்பவர்களால் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கும் தமிழர்களால் இன்று மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது.
மாணவர்கள் , இளைஞர்கள் , கல்வியாளர்கள் , பாமரர்கள் என்று எங்கும் குறைவில்லாதவாறு சிந்திக்கும் மக்கள் மத்தியில் ஒரு வித விரக்தி தெரிகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் கடமையை செய்யும் விதமாக ஒரு சடங்காக தேர்தல் வந்து முடிகிறது. வாக்களித்து வாக்குகள் எண்ணி முடிந்து தாங்கள் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் ஒரு வித ஏமாற்றம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது . இந்த நிலை கடந்த மூன்று நான்கு தேர்தல்களில் தொடர்கிறது.
இரண்டு தாசாப்தங்களாக ஜெயலலிதா , கருணாநிதி இருவரும் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றான, இதனால் தமிழகத்தில் ஏற்பட்ட ஆக்கபூர்வ வளர்ச்சிகள் தான் என்ன ? இவர்களை தவிர்த்து வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாதா ? ஒரு தமிழக முதல்வரால் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்ட முடியாதா ? என்று பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் என் அறிவுக்கும் என சிந்தனைக்கும் எட்டிய அளவில் இந்த தொடர் கட்டுரையை எழுதலாம் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் நடுநிலையான ஊடகங்கள் இல்லாதது கூட மக்களின் சிந்தனைகளை தூண்டாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் . ஒவ்வெரு ஊடகங்களும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாகவும் , பாதகமாகவும் நடந்து கொள்கின்றன . மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை மறைத்தும், மக்களுக்கு தேவையற்ற செய்திகளை எழுதியும், தங்கள் ஆதரவு கட்சிகளின் கருத்துக்களை திணித்தும் வருகின்றன .
இதுவரை நடந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் மக்களின் நன்மதிப்பை பெற்றதில்லை. ஒவ்வெரு முறை தேர்தலின் போதும் ஆட்சி செய்யும் கட்சிகள் செய்யும் தவறுகளால் இன்னொரு கட்சி தேர்ந்தெடுக்கப் படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.
இந்த இருவரில் யாருமே இதுவரை தோல்வியிலிருந்து பாடம் கற்பித்ததாக தெரியவில்லை . எதற்காக கடந்த முறை தோற்கடிக்கப் பட்டார்களோ அதே தவறை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் செய்கின்றனர். குற்றம் செய்யும் ஒருவருக்கு கொடுக்கிற தண்டனை காலம் என்பது "திருந்தி வாழ்வதற்காகவே அன்றி தவறு செய்வதற்கான இடைவெளி அல்ல".
தமிழக அரசியலில் நாகரிகம் என்பது இல்லமால் போய் விட்டது . ஆக்கபூர்வ அரசியல் மலையேறி பல காலம் ஆகி விட்டது. "அரசியல்" என்பது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் புனிதமாக கருத வேண்டிய வார்த்தை. ஆனால் இன்று அரசியல் என்றாலே அலறி அடித்து ஓடும அளவிற்கு தரம் கேட்டு காணப்படுகிறது. அரசியலின் புனித தன்மையையும் தரத்தையும் மீட்க இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும்.
அரசியல் பற்றி ஆழ்ந்த சிந்தனை இளைய சமுதாயத்தில் உருவாக வேண்டும். அரசியலை ஆக்க பூர்வமாக மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இக்காலகட்டம் என்பது மாற்றம் உருவாக வேண்டிய காலகட்டம். மனதில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை இப்போதே உருவாகி செயல் படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் .
அடுத்து வரும் நாட்களில் "ஏன் மாற்றம் வேண்டும்" என்பதை மேலும் பல செய்திகளோடு தொடருகிறேன் மாற்றம் குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது.
2 கருத்துக்கள்:
நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் மாற்றம் நம் கையில்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295
Read this.
Post a Comment