Thursday

சாக்கடையாவது அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் தான்

தமிழகத்தில் அரசியல் காட்சிகளில் இருப்பவர்கள் வெறுமனே 10 சதவீதம் மக்கள் தான். இந்த 10 சதவீதத்தில் தான் அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் அடங்கி இருக்கிறார்கள். அதை தாண்டி 90 சதவீத மக்கள் அரசியல் சார்பற்று இருக்கிறார்கள். இந்த 90 சதவீத மக்களில் பெரும்பான்மையினர் வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களித்தால் தான் நம்முடைய வாக்கு பயனுள்ள வாக்காக இருக்கும் என தப்பு கணக்கு போடுகின்றனர்.

மற்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே பிரதானமாக கொண்டுள்ளார்கள். இப்படி ஒருவர் மீது தீராத பகையை கொண்டிருப்பதால் எளிதாக இன்னொரு வேண்டாத சக்தி திடீர் நல்லவராகி வெற்றி பெற்று விடுகிறார்.

ஒருமுறை இந்த நிலை இருந்தால் ஏற்று கொள்ளலாம் ஆனால் ஒவ்வெரு முறையும் மாறி மாறி இந்த நிலை தானே ஏற்படுகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை வாக்களித்த நாளில் இருந்தே நம் ஏண்டா வாக்களித்தோம் என கேட்கும் நிலை..

நம் வாழ்வின் ஒவ்வெரு அசைவையும் இன்று அரசியல் தான் தீர்மானிக்கிறது. இது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சரியான புரிதல் இல்லை. பெரும்பாண்மை மக்களிடம் அந்த புரிதல் இல்லாத காரணத்தால் தான் சில ஊழல்கள் நடைபெற்றால் கூட பொதுமக்களே இதெல்லாம் சகஜம் என்று சொல்லி கடந்து போகின்றனர்.

இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்று நம்மிடமே திருப்பு கேட்பார்கள்.. இப்படி திருப்பி கேட்பதால் தானே அதிமுகவும், திமுகவும் ஒருமுறை செய்த அதே தவறை மீண்டும் செய்ய துணிகிறது.

90 சதவீத மக்களின் வாழ்க்கை நிலையை மீதி 10 சதவீதத்தினர் தீர்மானிப்பதை நாம் எப்படி ஏற்று கொள்வது? ஒரு நாடு வளமான நாடாகவும், மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அரசாகவும் அமைய வேண்டும் என்றால் நல்லவர் ஆட்சி நடை பெற வேண்டும்.

மாற்றத்தை தட்டி கழிக்கும் வேறு சிலர் சொல்வது எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் வரை தான் நல்லவர்களாக இருப்பார்கள் என்று. ஏன் காமராஜர் வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா? அறிஞர் அண்ணா வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா ?

கொள்கை ரீதியான ராஜதந்திரம் மாறி குறுக்கு வழி ராஜதந்திரம் எப்போது தமிழகத்தில் வந்ததோ அன்றிலிருந்து தானே கொள்கை மாறி கொள்ளை பிரதானமானது.. கொள்கை ரீதியான ஆரோக்கிய அரசியலுக்கு இருந்த வரவேற்பு போய் ஏமாற்று, பித்தலாட்டம், கொள்ளையடித்தல் இவையனைத்திற்கும் ராஜ தந்திரம் என்று பெயர் போட்டது ஏன்?

ஆட்சி இருக்கும் போது பணம், அதிகாரம் மூலம்   யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஆணவத்தில் ஒரு தலைமையும், ஆட்சி இல்லாத போது தன் வாரிசுக்கு பதவி வாங்க யார் காலிலும் விழலாம் என்ற ஆரோக்கியமற்ற அரசியல் தமிழகத்தில் நிலவி வருவர்தகு காரணம் அதிமுகவோ, திமுகவோ அல்ல. அவற்றிற்கு தேர்தல் தோறும் அங்கீகாரம் கொடுக்கும் வாக்காளர்களாகிய நாம் தான்.

அரசியல் வேண்டாம் என்கிற நாம் வாக்களிக்காமலா இருக்கிறோம். அரசியல் கட்சிகளால் நடத்த படும் காட்சி ஊடகங்களையும், தினசரிகளையும் நம்பி அவர்கள் வெளியிடும் செய்திகள் மூலம் யாரோ ஒருவருக்கு வாக்களிக்கிறோம். இதனால் சாக்கடையாவது   அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் கூட.

 அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்யும் புனிதமான பணி தானே தவிர தன் குடும்பத்தையும், தன்னையும் வளபடுத்தி கொள்ள கூடிய இடமல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களை புரிய வைக்க வேண்டிய பொறுப்பு மக்களாகிய நமக்கு அல்லவா இருக்கிறது..

அரசியல் அறிவோம்! மாற்றம் உருவாக்குவோம்!

2 கருத்துக்கள்:

Anonymous said...

அருமையான கட்டுரை

Anonymous said...

Cant Possible

Post a Comment

Send your Status to your Facebook