Saturday

கலை உலக போராளி மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்

பிரபல இயக்குனரும் குணசித்திர நடிகருமான மணிவண்ணன் அவர்கள் இன்று (15-06-2013) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 

59 வயதான மணிவண்ணன் அவர்கள் கோவை மாவட்டத்தை சார்ந்தவர். இவர் 400 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 
vetern film director actor manivannan passed away
இவரது இயக்கத்தில் 45 படங்கள் வெளிவந்துள்ளன. இயக்குனராகவும், நடிகராகவும் தெரிந்த மணிவண்ணன் பெரியாரிய கொள்கைகளை கடை பிடித்து வந்தவர். நல்ல தமிழ் உணர்வாளர். தமிழ் இன விடுதலைக்கு குரல் கொடுக்கும் சினிமா துறையை சார்ந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

மணிவண்ணனின் இழப்பு சினிமா துறைக்கு மட்டுமல்லாது தமிழுக்கே இழப்பு என்று கூறலாம். 

மணிவண்ணனை இழந்து வாழும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

மணிவண்ணன் இறப்பு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கலையுலக பகுத்தறிவு போராளி மறைந்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?

அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.
                                                                                                          -வைகோ  

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook