Tuesday

நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை : கொந்தளிக்கும் குமரி காங்கிரசார்

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் இந்தமுறை திமுக போட்டியிடுகிறது . கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைவிட்டு போன குமரி தொகுதி இந்த முறையும் கைவிட்டு போனது . குமரி தொகுதியை கேட்டு பெறாத காங்கிரஸ் தலைமையை கண்டித்து குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .

குமரி மாவட்ட தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக இருந்து வந்தது . கேரள மாநிலத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் சேர்ந்த பின்னர் மார்சல் நேசமணி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் காமராஜர் தன் சொந்த தொகுதியான விருது நகரின் தோற்கடிக்கப்பட்ட போது குமரி மாவட்ட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை குமரி மாவட்டத்திற்கு உண்டு .

காமராஜர் போட்டியிட்ட தொகுதி இன்று காங்கிரஸ் கட்சிக்கு இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது . கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பெல்லார்மின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் . அப்போது இதே போல் காங்கிரஸ் கட்சியினர் பல போராட்டங்களை நடத்தினர் .

இப்போது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை விட்டு மாறிய பின்னர் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தோடு இருந்தனர் . ஆனால் திமுக கட்சி குமரி தொகுதியை தானே வைத்து கொண்டது . இந்த தொகுதியில் திமுக இதுவரை வெற்றி பெற்றதில்லை . குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காததை கண்டித்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்வதாக சொல்லியிருக்கின்றனர் .

அது மட்டுமல்லாமல் திமுக போட்டியிட்டாலும் வெற்றி பெறாது அப்படி இருந்து ஏன் இந்த தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என காங்கிரஸ் கட்சியினர் வியப்புடன் உள்ளனர் . நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை  என கலைஞர் சொன்னதை மக்கள் இப்போதும் மறக்கவில்லை அப்படி இருக்கும் போது திமுக எப்படி வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியினர் பேசி கொள்கின்றனர் .

பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம் அவர்கள் எப்போதும் தலைவர்களுக்காகவே தொகுதி உடன்பாடு செய்து கொள்வார்கள் . குமரி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக தலைவர்கள் இல்லாததும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு குறையாக கருதப்படுகின்றது .

2 கருத்துக்கள்:

Rajaraman said...

தி.மு.க.வும், காங்கிரசும் குமரி தொகுதிக்காக என்னதான் அடித்துக்கொண்டாலும் அங்கு வெற்றி அடைய போகிறவர் பொன்.ராதாகிருஷ்ணன் தான்.

Suresh Kumar said...

தி.மு.க.வும், காங்கிரசும் குமரி தொகுதிக்காக என்னதான் அடித்துக்கொண்டாலும் அங்கு வெற்றி அடைய போகிறவர் பொன்.ராதாகிருஷ்ணன் தான்./////////////////////////


நன்றி ராஜா ராம் உங்கள் கருத்துக்கு

Post a Comment

Send your Status to your Facebook