விடுதலை புலிகளின் நிர்வாக தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் நேற்று கைப்பற்றியுள்ளது. உலக தமிழர்கள் மத்தியில் ஒரு பெருத்த இடி என்பதை நம்மால் ஒத்துகொள்ளாமல் இருக்கமுடியாது.
விடுதலை புலிகள் தனி நாடு கேட்கிறார்கள் இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்றெல்லாம் சிங்கள அரசியல் வாதிகளும் சில இந்திய அரசியல் வாதிகளும் பேசி வந்தன. மற்றும் விடுதலை புலிகள் பயங்கர வாதிகள் என்று கூட பேசி வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை என்ன கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு தமிழ் ஈழ நாட்டை நிர்வகித்து வந்திருக்கிறார்கள். இன்னொரு இனம் நம் மீது அடிமை படுத்துவதை பொறுத்து கொள்ளாமல் தமிழ் ஈழ மக்களாலே அமைக்க பட்ட அரசின் தலை நகரம் தான் கிளிநொச்சி.
கிளி நொச்சியில் தான் தமிழ் ஈழ காவல் துறை அலுவலகம், தமிழ் ஈழ தேசிய வங்கி, தமிழ் ஈழ நீதி துறை, வரி வசூலிப்பு துறை, போன்ற ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்தையும் வைத்து நிர்வகித்து வந்திருக்கிறார்கள் . உலக நாடுகளின் ஒரு தலை பட்சமான முடிவுகளால் தமிழ் ஈழ நாட்டை அங்கிகரிக்காமல் விட்டு விட்டார்கள்.
இத்தனை அழகான நகரம் இன்று எப்படி இருக்கிறது . இடிந்த மருத்துவமனைகள், இடிந்த வீடுகள், இடிந்த கடைகள், இடிந்த அலுவலகங்கள் மொத்தத்தில் ஒரு மயான பூமியாக காட்சியளிக்கிறது . சரி கிளிநொச்சியை இராணுவம் பிடித்தது இருக்கட்டும் அந்த நகரில் வசித்து கொண்டிருந்த மக்கள் அங்கு தானே இருக்க வேண்டும். அது தான் இல்லை அந்த அழகான நகரத்திலிருந்து மக்கள் எப்பவோ இடம் பெயர்ந்து விட்டார்கள் . வெறுமனே நிலத்தை பிடிப்பதில் தான் சிங்கள இராணுவம் மகிழ்கிறது . தமிழ் மக்கள் தன் சொந்த இடங்களில் வசிக்க கூடாது என தமிழ் மக்களுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது.
இராணுவம் கிளிநொச்சி காலி பூமியாக இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு பின்னால் அங்கு கால் வைத்த மகிழ்ச்சியில் அடுத்து முல்லை தீவு என அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் உலக தமிழர்கள் விடுதலை புலிகளை தான் எதி நோக்கி காத்திருக்கிறார்கள் அவர்களின் பதில் என்ன. ஏனெனில் முல்லை தீவையும் விடுதலை புலிகள் இழந்தால் எங்கே செல்வார்கள் ? கிளிநொச்சியில் கால் வைத்த ராணுவத்திற்கு பதிலடி கொடுக்குமா ? இல்லை இன்னும் பின் வாங்குமா ? பின் வாங்க எங்கே இடம் இருக்கிறது ?
............................ விடுதலை புலிகளின் பதில் நடவடிக்கையை பொறுத்து
தெரியும் தமிழ் ஈழம் மலருமா ? ஓயாத அலைகளை நினைத்து இன்னும் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவார்களா ? இது தான் இன்றிய கேள்வி ?
17 கருத்துக்கள்:
என்னங்க படிச்சிட்டு எதுவுமே எழுதாம போறீங்க ?
very super
புலிகள் பரவலாக சகலரது நல்ல எண்ணங்களையும் இழந்து நிற்கின்றனர்.
உண்மைக்கு புறம்பான அரசியல் செய்தால் இந்த நிற்கதியே மிஞ்சும்.
அவர்களது கொலை கொள்ளை களுக்கு பதில் சொல்லும் காலம்
அண்மித்துவிட்டது >>>
இனி முல்லைதீவில் ஒழித்தால் என்ன கடலில் பஞ்சால் என்ன பிடிபட்டால்
Hauge பயணம் உறுதி >>>
அது தான் சைனைட் குப்பி இருக்குதே கழுத்தில் >>> கடிக்க வேண்டியது தானே !
இன்றிய --> spelling mistake!
***இன்னும் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவார்களா ? ***
உலகத் தமிழர்களின் பால் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளனர். உலகத்தமிழர்கள் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவார்களா?
புலிகள் பரவலாக சகலரது நல்ல எண்ணங்களையும் இழந்து நிற்கின்றனர்///////////
நீங்கள் யாருடைய என்னத்தை புலிகள் இழந்ததாக சொல்லுகிறீர்கள்? உங்கள் எண்ணதையா ? இல்லை காங்கிரஸ் கட்சியின் எண்ணதையா ? இல்லை ராஜ பக்ஷேவின் எண்ணதையா ? கொஞ்சம் புரியும் படி சொன்னால் வசதியாக இருக்கும். நான் மேலே சொன்ன எல்லோரும் தமிழ் மக்களின் எண்ணத்தை இழந்தவர்கள் என்பது தெரியுமா ?
இன்றிய --> spelling mistake!
////////
சொன்னதற்கு நன்றி வருக .....
ஐயா! ஈழத்திலிருந்து ஓரு பின்னூட்டம். யார் யார் எப்படித்தான் என்னத்தை சொன்னாலும் புலிகள்தான் எங்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண்போகாமலிருக்க தயவுசெய்து இறைவனை மன்றாடுங்கள்.
இலங்கை அரசு தமிழர்களுடன் நேரடியாக மோதுகிறது.ஆனால் இந்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்து தமிழீழ தமிழர்கள் மற்றும் இந்திய தமிழர்களின் முதுகில் குத்தி விட்டது.மானங்கெட்ட நாட்டை நினைத்தலே வெறுப்பாக இருக்கிறது. இந்த மானங்கெட்ட பி்றந்ததிற்கு பதில் மானமும் வீரமும் உடைய தமிழீழ நாட்டில் பி்றந்ததிற்க வேண்டும்.மானங்கெட்ட நாட்டிற்கு தமிழன் என்ற முறையில் எதையும் செய்ய கூடாது என நான் முடிவெடுத்துள்ளேன்.ஒவ்வொரு மானம் உள்ள தமிழனும் இதை செய்ய வேண்டும்.கட்சி வேறுபாடு மறந்து தமிழன் என்ற அடிப்படையில் நாம் இணையவேண்டும். அப்போதுதான் முதுகில் குத்த முற்படும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும்.இதை தமி்ழ் உணர்வோடு புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.வாழ்க தமிழ் வளர்க தமிழன் ஓங்குக தமிழீழம்.
ஈழத்தவர் போராடுவது கிளிநொச்சிக்காகவோ முல்லைத்தீவுக்காகவோ அல்ல...
கடந்தமுறை மாவீரர்நாள் உரையில் தலைவர் சொன்னதும் அதுதான்... மாமலையான இந்திய படைகளை எதிர் கொண்டவர்கள் நாங்கள், எங்களுக்கு இலங்கை படைகள் ஒரு பொருட்டு அல்ல. என்பதுதான் அது..
இந்திய படைகளை புலிகள் எதிர் கொண்ட வளியில் இலங்கை படைகளை புலிகள் எதிர் கொண்டால் இலங்கை படைகளால் தாங்க முடியுமா..?
உலக தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் உள்ள தமிழர்கள் அழியலாமா? உலக தமிழர்களுக்கு என்ன பிரச்சனை. அங்கு வசிக்கும் மக்கள் தானே யுத்தத்தின் கொடுரத்தை சந்திப்பார்கள்.
கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும், கடைசி ஒரு புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை போராட்டத்திற்கான பங்களிப்பு தொடரும். அந்த கடைசி இருவரின் பின்தான் போராட்டம் நிறைவு பெறும் அது வரை போராட்டம் தொடரும், போராட்டவழிமுறைகள் மாறுமே ஒழிய போராட்டம் என் றும் மாறாது.
கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும், கடைசி ஒரு புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை போராட்டத்திற்கான பங்களிப்பு தொடரும். அந்த கடைசி இருவரின் பின்தான் போராட்டம் நிறைவு பெறும் அது வரை போராட்டம் தொடரும், போராட்டவழிமுறைகள் மாறுமே ஒழிய போராட்டம் என் றும் மாறாது.
i think 150000 diaspora tamil youths are leaving their countries to join ltte to fight and accheive Eelam by next week :) :)
நம்புவோம்
நண்பரே
நல்லது
நடக்கும் என்று
ஈழம் மலரும்
இன்னல் தீரும் என்று
ஈழம் மலரும்
இன்னல் தீரும்...
பின்னூட்டம் வழங்கிய தோழர்களுக்கு நன்றி
tozhvi yendrume vedrikke muthal padi
we are not lot anything we can get back d kilenechi
Post a Comment