Tuesday

கலைஞர் பேரணி நடத்த முடிவு . ராஜபக்ஷே பாராட்டு

கலைஞர் தன்னுடைய சுகவீனதையும் கருத்தில் கொள்ளாமல் ஈழ தமிழர்களுக்காக கட்சி செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவெடுத்திருக்கிறார் . இவருடைய முடிவை சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்ஷே , தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தும் சோனியா காந்தி , மன்மோகன் சிங்க் , மற்றும் அண்ணா திமுக பொது செயலாளர் ஜெயலலிதா , சுப்ரமணிய சாமி , சோ, காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பாராட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன .

இன்றைய கூட்டத்தின் தீர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.

திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது.

அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.
..............................................................................................................................................


அய்யா கலைஞர் அவர்களே அப்படியே பேரணி நடத்தி உதய சூரியனுக்கு ஓட்டும் கேளுங்க . ஈழ தமிழன் செத்தா நமக்கென்ன . இப்போ எல்லாம் எவன் எவன் கொடிஎல்லாமோ ஈழ தமிழனுக்காக ரோட்டில் பறக்குது அப்போ திமுக கொடி மட்டும் பறக்காதா என்ன . இன்னும் ஒன்ன்னு பண்ணுங்க அந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில உள்ளவங்களையும் , மாணவர்களையும் , அப்படியே போராட்டம் நடத்தும் இலங்கை அகதிகளையும் பிடித்து உள்ள போடுங்க .

அப்போ நீங்க இன்னும் கொஞ்சம் ஜாலியா பேரணி நடத்தலாம் . விளித்து விட்டோம் இனியும் எங்களுக்கு மயக்க மருந்து தர முடியாது கலைஞரே . சரி போய் ஓய்வெடுங்க .

5 கருத்துக்கள்:

Anonymous said...

தமிழினத் தலைவர் என்பது பிடிக்க வில்லை.
காங்கிரசின் அடி வருடி என்பதுதான்
வாழ வழி,பிடித்திருக்கிறது எனக்கு.
உனக்குப் பிடிக்கவில்லையென்றால்

நான் என்ன செய்ய முடியும்?என் உயிருக்கும் மேலான
உடன் பிறப்பே!

ராவணன் said...

"கோமாளி கருணாநிதி"யை உங்களுக்கும் புரிந்துவிட்டதா?

ASSOCIATE said...

"". சரி போய் ஓய்வெடுங்க .""

நல்லா சொன்னீங்க நண்பரே !!

Anonymous said...

Discount RX Pharmacy - Cialis, Viagra, Levitra, Tamiflu. Order Generic Medication In own Pharmacy. Buy Pills Central.
[url=http://buypillscentral.com/about_en-us.htm]Get Top Quality Viagra, Cialis, Levitra, Tamiflu[/url]. prescription generic drugs. Discount pills pharmacy

Anonymous said...

When you position Viagra or some other meds in our betray you may be sure buy Viagra now that this spin-off single of best quality will be delivered to you positively in time.

Post a Comment

Send your Status to your Facebook