Sunday

.தி.மு.க.வின் தொலைத்தொடர்புத் துறை ஊழல் (ஸ்பெக்ட்ரம்) குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ள தி.மு.க. அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், தொலைத் தொடர்புத் துறையில் அலைபேசி இணைப்பு வழங்க 2 ஜி அலைக்கற்றைகள் ( Spectrum ) ஒதுக்கீடு செய்ததில், இந்திய அரசுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றில் காண முடியாத அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளாமல், தனது கூட்டாளியான தி.மு.க.வை, ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கத் துணைபோன காங்கிரஸ் கூட்டணி அரசைக் கூண்டில் நிறுத்தி, இந்தியாவின் இமாலய ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, ஊழலில் தொடர்பு உடையவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்தியர்களால், சுவிஸ் வங்கியில் போடப்பட்டு உள்ள தொகை 108 இலட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, அந்த வங்கியின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். கோடானுகோடி ஏழை மக்கள் வறுமையில் வாடும் இந்திய நாட்டில் கொள்ளையிடப்பட்ட அந்தக் கறுப்புப் பணத்தை, சுவிஸ் வங்கிகளில் இருந்து கைப்பற்றிக் கொண்டு வர நடுவண் அரசை வற்புறுத்துவோம்.

இவ்வாறு மதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் , தனி தமிழ் ஈழம் , விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் , கல்வி வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு , நதி நீர் இணைப்பு போன்ற பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன .


முழுமையான மதிமுக தேர்தல் அறிக்கை படிக்க இங்கே செல்லவும் 


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை

2 கருத்துக்கள்:

சந்திப்பு said...

இந்திய மீடியாவின் மர்டோக்காக மாறி வருகிறது. கருணாநிதியும் அவரது குடும்பமான சன் தொலைக்காட்சி நிறுவனமும் அதன் வகையறாக்களும். 2ஜீ ஊழல்தான் இந்தியாவிலேய மிகப்பெரிய ஊழல். இதற்காகவே திமுகவையும் அதற்கு துணைபோன காங்கிரசையும் வீட்டுக்கு அனுப்பியே தீரவேண்டும்.

Suresh Kumar said...

அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.

முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.

மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.

ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.

நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.

ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.

Post a Comment

Send your Status to your Facebook