Thursday

கருணாநிதிக்கு தொற்றிக்கொண்ட தேர்தல் வியாதி


திடீர் பஸ் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றன . ஒவ்வெரு கட்சிகளும் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்றும் முன்னர் என்ன செய்தேன் என்றும் மக்கள் மத்தியில் விளக்கி பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றன .

எல்லா தேர்தலையும் விட இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக ஈழ தமிழர்களின் பிரச்னை மாறியுள்ளது இதை கொஞ்சமும் எதிர் பார்த்திராத திமுக ஈழ தமிழர்கள் விசயத்தில் கண்டு கொள்ளாமலே இருந்து வந்தது . ஈழ தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியும் மத்திய காங்கிரஸ் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக சிங்கள அரசுக்கு ஆய்தம் மற்றும் ஆளணி உதவிகளை வழங்கியது . இது தமிழக மக்கள் மத்தியிலே மிக பெரிய கோபத்தை உண்டு பண்ணியது .

தமிழகத்தில்  இதுவரை  14 பேர் தங்கள் உடலையே தீயிட்டு ஈழ தமிழர்களுக்காக மடிந்தனர் . முதலில் தீயிட்டு மடிந்த முத்துக்குமார் மாணவர்கள் இளைஞர்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி தமிழகத்தில் ஒரு மிக பெரிய எழுச்சியை உருவாக்கி வீர காவியமானார் . மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் மத்திய மாநில அரசுகளோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதை விட்டு விட்டு போராட்டங்களை சட்டத்தின் மூலம் அடக்க பார்த்து . அதன் மூலம் இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் போன்றோர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது . நீதிமன்றம் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது .

பொதுவாகவே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் தமிழர்கள் என்பது போல் உரிமை கொண்டாடி வருவார்கள் . சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு ஈழ தமிழர் படுகொலையை முன்நின்று நடத்துவதை தடுக்க தவறி விட்டார் கருணாநிதி . இதையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த கோபத்தை தணிக்க அவருக்கே உரித்தான பாணியில் மூன்று மணி நேர உண்ணாவிரதம் அரை மணி நேர போர் நிறுத்தம் என்று பல நாடகங்கள் நடித்து பார்த்தார் ஆனால் எந்த நாடகமும் பலிக்காமல் போனது . இந்த நிலையில் ஈழ தமிழர்களின் வாழ் நாள் லட்சியமான தமிழ் ஈழத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது கருணாநிதிக்கு அடுத்த சாக்.

கடந்த முறை திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல் இந்த முறை அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சூழ்நிலை உருவாகியுள்ளது . தேர்தலில் இலங்கை பிரச்னை முக்கியமான பிரச்னை என்றாலும் மற்றும் விலை வாசி உயர்வு , மின்சார தட்டுபாடு போன்ற பல பிரச்சனைகள் திமுக கூட்டணக்கு எதிராகவே நிற்கிறது .

திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணத்தை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி உயர்த்தியது . முன்னர் இரண்டு ருபாய் என்றால் ஏழு ருபாய் அளவிற்கு உயர்த்தியது . இப்போது தேர்தலும் நெருங்கி விட்டது திமுக கூட்டணியின் தோல்வியும் உறுதி செய்யபட்டிருக்கும் இவ்வேளையில் என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது .

பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த சலுகைகளும் கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி . அதையும் மீறி கருனாநித்தி பேருந்து கட்டணித்தை குறைத்திருக்கிறது . இதை போல தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தினகரன் பத்திரிகை ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்கள் மாறன் குடும்பத்தினர் . தேர்தலும் முடிந்தது பத்திரிகை விலையும் கூடியது .

இந்த பேருந்து கட்டணம் கூட அதிகார பூர்வ குறைப்பு இல்லை . இந்த பதிமூன்று நாட்களுக்கும் கட்டண குறைப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிகிறது . ஆனால் இதையும் கருணாநிதி மக்கள் சிரிக்க வேண்டிய அளவிற்கு தான் செய்கிறார் . பொதுவாகவே நாம் தோற்க போகிறோம் என்று தெரிந்தால் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாது . அதே போல தான் கருணாநிதி தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் திகைக்கிறார் என்ன செய்வது என்று தெரியாமல் அலைகிறார் .

இது தான் தேர்தல் வியாதியோ ?

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook