• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label திமுக கூட்டணி. Show all posts
Showing posts with label திமுக கூட்டணி. Show all posts

Friday

கருத்து கணிப்புகள் திட்டமிட்டு வெளியிடபடுகிறதா ?

தேர்தல் வந்தாலே கருத்து கணிப்புகள் வருவது சகஜம். அதே போல் வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது வருகின்ற பெரும்பாலான கருத்து கணிப்புகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடுகள் முடிவடையாமல் தொடர்ந்து இழுபரியிலேயே காணப்படுகிறது. 

ஓரளவிற்கு கூட்டணி முடிவானாலும் இன்னும் முழுமை பெறவில்லை. திமுக கூட்டணி பெரிய இழுபறிக்கு பின்னர் முடிவடைந்திருக்கிறது. போட்டியிடும் தொகுதிகள் இனம் காணுவதில் மட்டும் தான் இழுபறி நீடிக்கிறது . அதுவும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது. இந்நிலையில் இப்போது வெளிவரும் கருத்து கணிப்புகள் பற்றி நாம் பார்த்தாக வேண்டும் . 

ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு என்பது கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டது . கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது கூட்டணிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் அந்த கணிப்புகள் இந்த தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கருத்து கணிப்புகளால் பயனும்  உண்டு அதே நேரம் பாதிப்புகளும் உண்டு . ஒருபுறம் கட்சியினரை சுருசுறுப்பாக்கவும் நடுநிலையாக இருக்கும் வாக்காளர்கள் ஒருப்பகமாக மாறவும் கருத்து கணிப்புகள் பயன் படலாம் . 

அதே நேரம் வெற்றி மிதப்பில் சோம்பல் உருவாக்கவும் செய்யும் . கருத்து கணிப்புகள் நமக்கு சாதகமாக வருகிறதே என்ற ஆணவமும் திமிர் தனமும் கூடவும் வாய்ப்புகள் இருக்கிறது . இப்படி ஆணவம் திமிரதம் கூடும் போது விவேகம் இழந்து வெற்றிக்கான திட்டமிடலில் தோற்று போகவும் வாய்ப்புகள் இருக்கிறது . அந்த வகையில் வெளிவரும் கருத்து கணிப்புகள் ஒருவித ஆணவ போக்கை உருவாக்குவதற்காக வெளியிடபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . அதற்கு வலுவூட்டும் வகையில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அதிமுக 200  இடங்களில் வெற்றிபெறும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது . 

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வேயில் அதிமுக 150  க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என  கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது . இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக தலைமைக்கு வெற்றி பெற்று விடலாம் என்ற மிதப்பை காட்டி கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்வதும் ஒரு வித தந்திரமாக கூட இருக்கலாம். ஒரு சில கட்சிகள் இல்லாமலே வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவ போக்கில் அதிமுக தலைமையை மிதக்க வைத்து  கூட்டணி கட்சிகளை அவர்கள் மூலமாகவே பிரித்து விடலாம் என்ற நோக்கோடு இப்படி பட்ட கணிப்புகள் வெளியிடப்படலாம் . அதை உறுதி படுத்தும் விதமாக அதிமுக தேமுதிக மற்றும் ஒரு சில ஜாதி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டது .   
ஒரு வேலை அதிமுக தலைமை மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகள் இல்லாமலே தேர்தலை சந்தித்தால் கூட வெற்றி பெற்று விடலாம் என்ற நினைப்பில் கூட இருக்கலாம் . அதனால் கூட இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் தொகுதிகளை குறைத்து ஒதுக்குவதிலும் நோக்கமாக இருத்தே தகுதி பங்கீடுகளை காலம் தாழ்த்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . 

எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்றால் முதலில் நமது பலவீனத்தை உணர வேண்டும் . எப்போது எதிரி நம்மை விட பலம் குறைந்தவன் என்ற நினைப்பு மனதில் வருகிறதோ அப்போதே நாம் தோல்வி பெற்று விட்டோம் . எதிரி நம்மை விட பலம் வாய்ந்தவன் என நினைத்து அதற்குரிய வேலைகளை நாம் செய்ய வேண்டும் .  வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவத்தில் மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற காட்சிகளில் ஒரு கட்சி பிரிந்தாலும் அது வெற்றிக்கு பாதிப்பாக முடியும் . 

தொகுதி பங்கீடுகளில் எதாவது பிரச்னை ஏற்பட்டு மூன்றாவது அணி என்று ஓன்று உருவாகினால் அது அதிமுகவிற்கே பாதிப்பை உருவாக்கும் . திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறும். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லை , மாறாக திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதற்காகவே அதிமுகவிற்கு வாக்களிக்க பலர் தயாராக உள்ளனர் . இந்த நிலையில் மூன்றாவது அணி வந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிய வாய்ப்பு இருக்கிறது . கடந்த தேர்தல்களில் தேமுதிகாவால் எப்படி அதிமுக வெற்றி பாதிக்க பட்டதோ அதே போல் மூன்றாவது அணி ஏற்பட்டால் இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பாதிக்க படும் . 


அதற்காகவே உளவு துறையால் இப்படி கருத்து கணிப்புகள் திட்டமிட்டு உருவாக்க படுவதாக தெரிகிறது .    வீரத்தோடு விவேகம் முக்கியம் ........... நாட்கள் போக போக தான் சரியான கணிப்புகள் சொல்ல முடியும் .
Read More

கனிமொழிய கைது செய்ய போறாங்களா?


திடீர்னு நேற்று டுவிட்டர்ல இந்திய அளவில் கனிமொழி டிரெண்டில் இடம் பிடித்திருந்தார்.  இன்று பார்த்தால் பேஸ்புக் டிரெண்டில் இடம் பிடிக்கிற மாதிரி இருக்கு. நேற்று வடஇந்திய ஊடகங்களில் மார்ச் 31  க்கு முன்னதாக கனிமொழியிடம் சிபிஐ விசாரிக்க போவதாக செய்திகள் வந்தன இதனால் டுவிட்டர்  டிரெண்டில் இடம் பிடித்தார் கனிமொழி. மார்ச் 31  வரை கால அவகாசம் கொடுத்திருக்கிரத்தை பார்த்தால் விசாரிக்க கேள்விகள் தயார் செய்ய சிபிஐ க்கு அவகாசம் தேவை படுவதாக நினைத்து இதை நாம் பெருசாக எடுத்து கொள்ளவில்லை. 

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கைது செய்ய படுகிறார் என்ற செய்திகள் வருகிறது . அதை உறுதி படுத்தும் விதமாக வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கருப்பு கலர் காரில் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்தாராம்.  படத்திற்கு கிளைமாக்ஸ் சீன் எடுக்குறாங்களா இல்ல தொகுதிகள் அடையாளம் கண்டு முடித்தவுடன் இடைவேளை போட்டு விட்டு விட போறாங்களா ? ஒண்ணுமே புரியல ...........  


திமுக காங்கிரஸ் தொகுதிக்ள அடையாளம் காணுவதில் மீண்டும் இழுபறி என்ற செய்தியோடு சேர்த்து கனிமொழி கைது செய்ய போகிறாரா என்ற செய்தியையும் படித்து பாருங்கள் . 

கிளைமாக்ஸ் முடியும் என்று நினைக்கும் மக்களுக்கும் தொடரும்னு போட்டு விட்டுடுவாங்க ராஜாவுக்கும் சேர்த்து கம்பி எண்ணுவது தொடரும் என வந்தாலும் வரலாம் . சூது வாது தெரியாத ராஜா பாவம் மாட்டிகிட்டாரு ............

கலைஞர்  டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா !  ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது.
 
Read More

Wednesday

அதிமுக கூட்டணி திமுக கூட்டணி வடம் இழுத்தல்

கிராமங்களில் திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் வடம் இழுத்தல் போட்டி நடைபெறும் அதே போல் யானையும் 30 பெரும் என்றும் வடம் இழுத்தல் போட்டிகள் நடைபெறும். 

தமிழ் நாட்டிலேயும் ஏற தாள வடம் இழுத்தல் போட்டி போல தான் இரண்டு அணிகள் தேர்தலில் களம் காண இருக்கின்றனர். ஏப்ரல் 13  ஆம் தேதி போட்டி நடத்தி முடிவுகளை மே 13  இல் தெரிவிக்க இருக்கிறார்கள் . அதுவரை யாருக்கு தான் பொறுமை இருக்கும் இப்பவே முடுவு தெரிஞ்சிக்கணும் போல இருக்கும் . ஆனால் தெரிஞ்சாலும் நல்லா இருக்காது . ஆளாளுக்கு கணிப்பு போடுறாங்க . நானும் என் பங்குக்கு கணிப்பு போடலனா வரலாறு மன்னிக்காது . 

ஆனந்த விகடன் கருத்து கணிப்பை துவங்கியது முதல் காங்கிரஸ் கட்சியின் உளவு தகவல் மூலம் வெளிவந்த கருத்து கணிப்பு வரை வந்து விட்டது . அதை தொடர்ந்து பதிவாளர் வட்டங்களில் கருத்து கணிப்புகள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது . இந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணிக்க வேண்டும் என்றால் கடந்த சட்ட மன்ற தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றை அலசி பார்க்க வேண்டும் . தேவை பட்டால் அதற்கு முந்திய நாடாளுமன்ற தேர்தலையும் பார்க்கலாம் . 

கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்து திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை அமைத்து . அதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக ,காங்கிரஸ் ,மதிமுக , கம்யூனிஸ்ட்கள் , பாமக போன்ற கட்சிகள் போட்டியிட்டு எதிரணியில் இருந்த அதிமுக பிஜேபி கூட்டணியை பூஜ்ஜியம் வாங்க வைத்து . இது ஒருவகையில் அதிமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அலை . அதே அலையில் தான் கடந்த சட்ட மன்ற தேர்தலை திமுக எதிர் கொண்டது . அப்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக பிரிந்து அதிமுகவோடு கூட்டணி அமைத்து . அதுவரை திமுக மிக பெரிய வெற்றி பெரும் 200  க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெரும் என இருந்தது . மதிமுக கூட்டணி மாறிய பின்னர் அதிமுக பக்கம் வெற்றி காற்று வீசுவது போல் இருந்தது . பின்னர் திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை தமிழக வரலாற்றில்  முதன் முறையாக அமைத்து . 

மிக பெரிய கூட்டணி என்று சொன்னவர்கள் எல்லாம் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஆடி போனது என்னவோ உண்மை . இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3  சதவீதம் தான் . பாதிக்கு மேல் தொகுதிகளில் 1000 வாக்கு வித்தியாசத்தில் திமுக அணி வெற்றி பெற்றது . பெரும்பாலான தொகுதிகளில் திமுக அணிக்கு போஸ்டல் ஓட்டுகளே கைகொடுத்து . 

அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அந்த நேரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் இருந்தாலும் இப்போது மக்களுக்கு தெரிந்த அளவில் பிரபலம் ஆகவில்லை . நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மக்கள் தேசிய அளவில் அணிகளை மதிப்பீடு செய்வார்கள் அதன் படி காங்கிரஸ் அணிக்கு எதிரான அணி எல்லா மாநிலங்களிலும் உருவாக வில்லை . தமிழகத்தில் போட்டியிட்ட அணி தேசிய அளவில் மூன்றாவது அணியாக இருந்தது . மூன்றாவது அணி ஆட்சிக்கு வராது என்பது பாமரனுக்கும் தெரியும் . அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது . இருந்தும் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை . 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது திமுகவிற்கு எதிரான வாக்குகளை தேமுதிக கணிசமாக பெற்றது அதிமுகவிற்கு தோல்வியில் முடிந்தது . இப்போது திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாத வண்ணம் தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது .  இப்போது நடைபெறுவது சட்டமன்ற தேர்தல் எனவே இரண்டு அணிகள் தான் எனபது முடிவாகி விட்டது . ஸ்பெக்ட்ரம் ஊழல் , விலைவாசி உயர்வு , மின் வெட்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு திமுக அணி முகம் கொடுக்க வேண்டியது இருக்கிறது . 

திமுகவுடன் எவ்வளவு கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் திமுக 40  சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்க முடியாது. அப்படிஎன்றால் எதிர்ப்பு வாக்குகள் 60  சதவீதம் இருக்கிறது இதில் 10 சதவீத வாக்குகள் பிற கட்சிகளுக்கு சென்றாலும் அதிமுகாவே முன்னணியில் இருக்கிறது . அது மட்டுமல்லாது கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவோடு மதிமுக மட்டும் கூட்டணி வைத்தே 3  சதவீத வாக்குகள் தான் வித்தியாசம் . இப்போது கூடுதலாக தேமுதிக கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகள் மற்றும் சில கட்சிகள் வந்துள்ளன . 

இவ்வாறு பல விதத்திலும் அலசும் போது அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது . ..................
Read More

Tuesday

திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு

ஒரு வழியாக ராஜினமா செய்வேன் என மிரட்டிய திமுகவிற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளாக 121  தொகுதிகளை கொடுத்து திமுகவின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் பார்த்து கொண்ட சோனியாவிற்கு திமுக தொண்டர்கள் சார்பாகவும் , கலைஞரின் குடும்பம் சார்பாகவும் பாராட்டுகளை கலைஞர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது குட்ட குட்ட குனிய கூடாது என சொல்லி உறங்கி கிடந்த திமுகவின்  சுயமரியாதையை தட்டி எழுப்பி 121  தொகுதிகள் கிடைக்க காரணமான திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ . வீரமணியும் சோனியாவை பாராட்டி சுயமரியாதை காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்திருக்கிறார் .

தெருவெங்கும் திமுக தொண்டர்கள் கூடி தலைவரின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் 121  தொகுதிகள் என தலைவர் கருணாநிதியை பாராட்டி இனிப்பு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் வெற்றியை கொண்டாடி வருகின்றானர் . தமிழகம் முழுவதும் விழாகோலம் பூண்டிருக்கிறது . விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவாலயத்திற்கே சென்று கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . இவர் தான் காங்கிரஸ் கட்சியை விளக்கியவுடன் ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து கலைஞரின் சுயமரியாதை காக்க உதவி செய்தவர் . 
இதில் முக்கியமாக கலைஞரின் சுயமரியாதை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழரின் சுயமரியாதையை இத்தாலி சோனியா காந்தி காத்திருப்பதை நினைத்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கின்றனர் . திமுக தொண்டர்கள் அனைவரும் சட்டை காலரை தொக்கி விட்டு இத்தாலி ராஜதந்திரம் எங்ககிட்ட பலிக்க நாங்க என்ன  டீனா.........  டூனாவா என கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதே நேரம் காங்கிரஸ் தொண்டர்கள் கருணாநிதியிடம் இத்தாலி ராஜதந்திரம் பலிக்கவில்லையே என சோகத்தில் ட்ஸாமாக் கடையிலிருந்து குவார்டர் போட்டு குப்புற படுத்து விட்டார்கள் . 

நாமும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டாமா ? ................ திமுகாவின் சுயமரியாதையை காத்த சோனியா வாழ்க!
தமிழகத்தின் சுயமரியாதையை ராஜதந்திர ராஜினாமாவால் காத்த கலைஞர் வாழ்க!

இத கூட சொல்லலைனா நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது 
Read More

Monday

பேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே

காங்கிரஸ் திமுக உறவு முறிந்து போனது என ஜால்ரா மணி ,தொல் திருமா எல்லோரும் சேர்ந்து கூவி கொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடரும்னு தயாநிதி மாறன் தெருவித்திருக்கிறார்.  
சுயமரியாதை என்ன விலை என கேட்கும் வீரமணி திமுக இனி இதற்கு மேல் சுயமரியாதை இழக்க கூடாது என அறிக்கை விட , திமுக தலைவர் உயர்நிலை கூட்டத்தை கூட்டி திமுக மந்திரிகள் ராஜினமா செய்வார்கள் என சொல்ல ரண்டு நாளா இவங்க நாடகத்திற்கு கிளைமாக்ஸ் எப்ப வரும் எப்பப வரும்னு மக்கள் எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் . 

ராஜினமா செய்யணும்னு முடிவெடுத்தால் அனற்றைக்கே கடிதம் அனுப்பியிருக்கலாம் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் கடிதம் கிடைக்க நேரமாகாது . முக்கியமான பிரச்சனைகள் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்டாலும் . ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொள்ளப்பட்டாலும் கடிதம் எழுதும் கருணாநிதி மந்திரிகள் ராஜினமா செய்யும் போதும் கடிதம் அனுப்பியிருக்கலாம் . அல்லது அன்றைக்கே விமானம் மூலம் சென்று ராஜினமா கடிதம் கொடுத்திருக்கலாம் . அதையெல்லாம் விட்டு திங்கள் ராஜினமா கடிதம் கொடுக்க படும் என அறிவித்தார்கள் .  சரி ஓகே அப்படி ராஜினமா கடிதம் கொடுக்க போனா கொடுத்து விட்டு வர வேண்டியது தானே . அதை விட்டு விட்டு அவங்க கிட்ட போய் கெஞ்சி இருக்காங்க . இப்போ ஒரு வழியா பேச்சுவார்த்தை நாளை தொடரும் என அறிவித்தும் விட்டார்கள் . அப்போ ராஜினமா கிடையாது . 

ஆட்சிய விட்டு பிடிச்சி தள்ளினாலே அதில ஏதாவது கேப் கிடைக்குமான்னு பார்க்கிற இந்த பதவி வெறியர்களாவது ராஜினமா செய்யவது என்பது நடக்காத காரியம் .  காங்கிரஸ் கட்சியை கருணாநிதி எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு. கருணாநிதியை காங்கிரஸ் கட்சியால் எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு . இதுக்கு மேல இவங்க  துணிய உருவி விட்டு அம்மணமா நடக்க விடுறதுக்கு எதுவும் இல்ல . இப்பவும் ஏதாவது வாய்ப்பு உண்டானு தான் பார்கிறாங்க. இப்படி ஒரு அதிசய பிறவிகளை தமிழர்கள் எங்கேயும் காண முடியாது . இவன் ரெம்ப நல்லவன்ட எவ்வளவு அடிச்சாலும் தான்கிகிறான் என்ற விடிவேலுவின் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது . 


இவர்களால் பதவி இல்லாமல் ஒரு நாள் இல்லி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . இவர்கள் செய்த கொடுமைகள் ஏராளம் ஒவ்வெரு கொடுமைகளும் இவர்களை காவு வாங்கும் .     கனிமொழிக்கு மட்டுமல்லாது தயாளு அம்மாவுக்கு சேர்த்து ஏற்கனவே ஜெயிலில் இடம் புக் பண்ணி விட்டதாக செய்திகள் வருகின்றன .   அப்படியிருக்கும் போது எப்படி இவர்களால் ராஜினமா செய்ய முடியும் ......? ஏற்கனவே ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என அறிவித்த பின்னர் அனைத்து எம்பிக்களும் கருணாநிதியிடம் ராஜினமா கொடுத்து நாடகமாடியது  ஊரறிந்த கதை ......^^^^^^^^^

சரி அத விடுவோம் இந்த ஜால்ரா மணி ஸாரி வீரமணி திருமாவளவன் எல்லாம் என்ன அறிக்கை எழுதி வச்சிருக்காங்களோ ? ............ ஏதாவது வச்சிருப்பாங்க இவனுங்களுக்கும் வெட்கம், மானம், சூடு ,சொரணை இதில எதுவும் இல்லையே ...........  பாவம் திமுக தொணடர்கள்
Read More

Friday

திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகம் புதுச்சேரியில் படுதோல்வி அடைய போகிறது -காங்கிரஸ் சர்வே

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற போவதாக காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

தமிழ் நாடு , புதுச்சேரி , அஸ்ஸாம் , கேரளா , மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை பற்றி காங்கிரஸ் கட்சி தனியாக ஒரு சர்வே நடத்தியது அந்த சர்வே இப்போது வெளியாகியுள்ளது. அதன் மூலம் கேரளம் , மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இடது சாரிகளிடமிருந்து பிடிக்கிறது.  

தமிழ் நாடு , புதுச்சேரியில் ஆட்சியை அதிமுக கூட்டணியிடம் இழக்கிறது என்ற சர்வே முடிவால் திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. இதில் திமுக , காங்கிரஸ் , பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் அடங்கிய கூட்டணி 234  தொகுதிகளில் வெறும் 77  தொகுதிகளை கைப்பற்றவுள்ளது. இந்த சர்வே காங்கிரஸ் கட்சியால் எடுக்கபட்ட சர்வே  . இந்த சர்வேயிலே 77  என்றால் உண்மையில் இன்னும் அதிக தொகுதிகளை திமுக கூட்டணி இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிக பெரிய படுதோல்வியாக வாய்ப்பு இருக்கிறது.   
அதனால் தான் திமுக தலைவர் கருணாநிதி தொகுதி மாறுவதாக செய்திகள் வருகிறதோ ? ...............

Read More

உலக ஆளுங்கட்சி தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

கலைஞர் டிவி அலுவலகத்தில் நேற்று இரவு முதலே சிபிஐ சோதனை நடந்து வருகிறது.  2 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்   ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளது நூறு கோடி மக்கள் மத்தியிலும் மிக பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் பட்ஜெட் போடகூடிய பணம் ஊழல் செய்ய பட்டுள்ளது என்றால் யாருக்கு தான் அதிர்ச்சி உருவாகாது. 

தமிழ் தொலை காட்சிகள் பொதுவாகவே உலக வரலாற்றில் முதன் முறையாக  என்ற வார்த்தைகளை புதிய படங்கள் ஒளிபரப்பும் பொது பயன்   படுத்தும். அதே போல இந்த ஊழலும் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழனால் செய்யபட்டிருக்கு என்னும் போது வெட்க படாமல் வேறு என்ன செய்ய. மிக பெரிய கோடீஸ்வரர்களால் கூட இரண்டு மாதங்களில்  உருவாக்க முடியாத தொலைக்காட்சி சேனலை இருபது நாட்களில் கருணாநிதி கலைஞர் டிவி என்று உருவாக்கிய போது எல்லோரும் ஆச்சரிய பட்டார்கள்.  அதை தொடர்ந்து பல சேனல்கள் உருவாக்க பட்டு அனைவரையையும் ஆச்சச்சரியத்தில் ஆழ்த்தியது கலைஞர் டிவி நிர்வாகம் . 
வேறு எந்த வித வருமானமும் இல்லாத கருணாநிதி , கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரால் இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? இப்போது தான் ஒவ்வென்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தியாவை கொள்ளையடித்து மிக பெரிய ஊழலுக்கு எல்லாம் சவால் விட்டு இமாலய ஊழல் செய்து கலைஞர் டிவி உருவாக்க பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இன்னும் பல கோடி ஊழல் பணம் இந்த குடுமத்தில் அங்காங்கே இருக்கும்.  

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004  பதவி ஏற்றது முதலே இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் வழியை ஒவ்வெரு அமைச்சராக தேடி பிடித்தனர். ராஜா ஊழல் செய்துள்ள இதே துறையில் முதலில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மகனும் கருணாநிதியின் பேரனுமாகிய தயாநிதி மாறன் செய்த ஊழல்கள் இன்னும் விசாரிக்க படவில்லை . காங்கிரஸ் கட்சியும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஆதர்ஷ் ஊழல் , காமன் வெல்த் ஊழல் , இஸ்ரோ ஊழல் என்று பல ஊழல்களை செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த வலக்கை எப்படியெல்லாம் மூடிவிடலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் நெருக்குதலாலும் , உச்சநீதிமனற்றத்தின் உத்தரவுகளாலும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு சிபிஐ தள்ள பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சி தொலை காட்சி சிபிஐ    விசாரணைக்கு உள்ளாவது இதுவே முதன் முறை என்றே நினைக்கிறேன். இத்தனை கேவலங்களை தாண்டி எந்த முகத்தில் திமுக மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் . காங்கிரஸ் கட்சியும் ஊழல் கட்சி தான். திருவாளர் பரிசுத்தம் என்று தன்னை காட்டி கொண்ட சோனியா இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்யும் ஊழலால் தலை குனிந்து நிற்கிறார். இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மக்கள் சாட்டையடி கொடுப்பது நிச்சயம். 

ஊழல் பணத்தில் உருவாக்கிய கலைஞர் டிவியை தடை செய்து அதை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். மக்கள் காறி துப்ப தொடக்கி விட்டார்கள் கலைஞர் அவர்களே உங்கள் முகத்தில் படுவதற்குள் நீங்களாகவே பதவியை விட்டு இரங்கி செல்வது நல்லது. 


சோனியா காந்தியால் ஈழத்திலே கொல்ல பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின்  ஆவி தான் அதற்கு துணை நின்ற தமிழின துரோகி கருணாநிதியை ஆட்டுவிக்கின்றதோ ?
Read More

Wednesday

பலி ஆடு தலைய ஆட்டிடிச்சோ ?

ஒரு   படத்தில விஜயும் நண்பனுமாக சேர்ந்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் இடத்தில் ஆட்டை பலி கொடுக்க தயாராகி கொண்டிருப்பார்கள் அவங்க கிட்ட விஜய் ஆட்டை பலி கொடுப்பது தவறு என்பது போல பேசுவார். உடனே அந்த ஊரு நாட்டமை சொல்வார் நீங்க இவ்வளவு சொல்றீங்க அதனால  நாங்க ஆட்டை பலி கொடுக்க விரும்பல அப்படின்னு சொல்லி முடித்ததும் ஒரு குண்டை தூக்கி போடுவார்.   ஒரு தவறும் செய்யாத விஜயையும் நண்பனையும் பலி கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த கம்பின் மீது கட்டுவார்கள். ( அதற்காக இந்த ஆடு ஒரு தவறும் செய்யவில்லை என அவசர பட்டு முடிவெடுத்திடாதீங்க) அதில ஒரு நியாயம் என்னவென்றால் தலை ஆட்டினால் மட்டும் தான் வெட்டுவார்கள். அப்போ இவங்க ரெண்டு பேரும் தலையே ஆட்ட கூடாதுன்னு முடிவெடுப்பாங்க. எவ்வளவோ முயற்சித்தும் தலை ஆட்ட வைக்க முடியாது. வெட்ட அரிவாள் வச்சிருக்கிறவர் ஏதோ சொல்ல இவரும் ஆமா என தலையாட்ட ஆத்தா அனுமதி தந்துட்டானு சொல்லி வெட்ட போவாங்க ................. இது சினிமா 

அதே போல இப்போ இங்க ஒரு பலி ஆடு மாட்டியிருக்கு. இந்த ஆடு கொஞ்சம் வித்தியாசம்.  இது பலி கொடுக்க வேண்டிய ஆடு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இப்போது யாருக்காகவோ பலி ஆடாக்கியிருக்கிரார்கள். அது தாங்க ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா இன்று சிபிஐ அதிகாரிகளால் ஊழல் செய்ததற்காக கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த ஊழல் இன்று நேற்று நடந்தது அல்ல மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து மீடியாக்களால் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசபட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நடந்த இந்த ஊழல் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியே ஆட்சிக்கு வந்ததால் மூடி விடலாம் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்தது. 

இந்த ஊழலை மறைப்பதற்காகவே ஒரு ஊழல் அதிகாரியை ஊழல் ஒழிப்பு துறைக்கே தலைவராக்கியதும் இதே சோனியாவின் வழிகாட்டலில் இருக்கும் காங்கிரஸ் அரசு தான் .  இப்படி பல வழிகளில் மறைக்க முயற்சித்த வேளையில் மத்திய தணிக்கை குழு இந்த ஊழலால் ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டது.   இதை அடுத்து எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும், ராஜா பதவி விலக வேண்டும் , ராஜா கைது செய்ய பட வேண்டும் , இந்த ஊழலில் யார் யாரெல்லாம் பங்கு வகித்திருக்கிரார்களோ அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாடாளுமன்ற கூட்ட தொடர் முழுவதையும் நடை பெறாமல் செய்தன. இருந்தும் காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலைக்க்வோ நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஒத்துழைக்கவோ செய்ய வில்லை . மாறாக    மத்திய அரசின் எடுபிடியான சிபிஐ மூலம் படம் காட்டியது. 

இந்த நிலையில் நீரா ராடியாவிடம் தமிழக அரசியல் வாதிகள் குறிப்பாக கனி மொழி பேசிய உரையாடல் வெளியானது. அந்த உரையாடல்கள் மூலம் ராஜா மட்டும் குற்றவாளி அல்ல என்பது உறுதியாகிறது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதியின் மனைவியின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே பல இடங்களில் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுத்து இன்று அவர்கள் மிக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் துணைவியின் பிள்ளைக்கு பல கோடிகள் இருந்தாலும் இவர்களை போல் இல்லாத காரணத்தால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுத்தார் கருணாநிதி. அதற்கு எதுவாக ராஜாவை அந்த துறைக்கும் மந்திரி ஆக்கினார். ராஜாவின் மூலமாக கொள்ளை துவங்கியது. இதில் ராஜாவும் பல கொடிகளை சுருட்டி இருக்கிறார்.  

இன்னும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ராஜா ஒருவரால் இத்தனை கொடிகளை அடிக்க முடியாது என கருணாநிதி சொன்னது. அப்படி பார்க்கும் போது இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் மிக பெரிய பங்கு உண்டு. அதனால் தான் இந்த ஊழலை பல வழிகளில் காங்கிரஸ் கட்சி மறைக்க பார்த்தது. அதற்காக தான் விசாரணை நடக்கும் போதே கபில் சிபில் இதில் அரசுக்கு எந்த இழப்பும் வரவில்லை என அறிக்கை விட்டார். இப்போது கபில் சிபிலால் அமைக்க பட்ட விசாரணை கமிட்டியே ராஜா குற்றவாளி என சொல்லி விட்டது. இதற்கு மேல் விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் சொல்லி விட்டது. 


தலித் அரசியலை கொண்டு வந்து ராஜாவையும் தன்னையும் காப்பாற்றி கொள்ளலாம் என கருணாநிதி திட்டம் போட்டு பார்த்தார் அது நிறை வேற வில்லை. எதிர் கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.  சட்ட மன்ற தேர்தல் வரும் நிலையில் ராஜா ஏன் கைது செய்ய பட்டார் என சந்தேகம் எழுகிறது. ஊடகங்கள் இது தொகுதி பங்கீட்டுக்காக திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக இந்த கைது என ஊகங்கள் வெளியிடுகின்றன ஆனால்  உண்மை அதுவல்ல. பட்ஜெட் கூட்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மீண்டும் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் என போராட தயாராகி கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு சம்மதிக்க வில்லை என்றால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முடக்கவும் தயாராக இருக்கின்றனர். அப்படி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வந்தால் கருணாநிதி, சோனியா , கனிமொழி  மன்மோகன் சிங் , கபில் சிபில் மற்றும் சிபிஐ முதல் அனைவரும் விசாரிக்க படுவார்கள் . அப்படி விசாரிக்கும் பட்சத்தில் இந்த ஊழலில் பங்கு கொண்ட மேற்சொன்ன அனைத்து தலைகளும் ஆட்டம் காணும். அப்படி ஒரு நிலை வரகூடாது என்பதற்காகவும் ,  எதிர்கட்சிகளை  சமாதன படுத்துவதற்காகவும் ராஜா பலி ஆக்க பட்டிருக்கிறார். உண்மையை சொல்ல போனால் கருனாநிதிக்ககவும், கருணாநிதி குடும்பத்திற்காகவும், சோனியாவுக்ககவும் ராஜா இரண்டு கட்சிகளாலும் பேசி ராஜா கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த நாடகம் நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை தொடரும் பின்னர் ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என விடுவிக்க படலாம் இல்லை ராஜா தான் குற்றவாளி என மீண்டும் ஒரு முறை பலி ஆடு ஆக்கி ஊழலை மறைத்து விடலாம்.  
             


    
Read More

Monday

கடைசி கட்ட கணிப்பு அதிமுக கூட்டணி 37 திமுக கூட்டணி 3

ஒரு வழியா தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த நிலையில் மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் . அரசியல் கட்சிகளுக்குள் கலக்கம் ஏற்பட்டு விட்டது நாம் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற சிந்தனைகளே மேலோங்கி காணப்படுகின்றன .

தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நிலையில் கூட்டணி பலத்தில் அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் உள்ள வித்தியாசம் .5 சதவீதமே . தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன் மின்னி கொண்டிருந்த விஜய காந்த் அதிமுக திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் துவங்கியவுடன் மறைந்து போய் விட்டது . பாரதிய ஜனதா கட்சி இரண்டு மூன்று தொகுதிகளில் கணிசமாக வாக்குகள் இருக்கிறது . ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெற முடியாத வாக்குகளாக இருக்கிறது .

இந்த தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் தான் நேரடி போட்டிகள் நிலவுகிறது . இந்த தேர்தலில் முதன்மை பிரச்சனையாக ஈழ தமிழர்கள் பிரச்சனையே காணப்படுகிறது . ஈழ தமிழர்கள் பிரச்சனை இருந்த காரணத்தால் திமுகவால் சாதனைகளை சொல்ல முடியாமல் போய் விட்டது .

காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு அலையே உருவாகியிருக்கிறது .அதுமட்டுமல்லாது விலைவாசி உயர்வுகள் , மின் தட்டுபாடு போன்ற பல பிரச்சனைகள் திமுகவிற்கு எதிராகவே இருக்கிறது . ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுகள் நடத்தும் இன படுகொலையை இந்திய காங்கிரஸ் அரசு முன்நின்று நடத்துவதாலும் அதை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்

கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான எதிர்ப்பு அலையை விட இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது . அது மட்ட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 4o தொகுதிகளிலும் வென்றது . ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக மட்டுமே வெளியில் வந்தும் திமுகவால் தனி பெரும்பான்மை பெற முடியவில்லை . அந்த தேர்தலில் திமுக , அதிமுக கூட்டணிக்கு உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 4 சதவீதம் தான் . கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமகவால் அதிமுக கூட்டணிக்கு ஆறு சதவீத வாக்குகள் உயர்ந்துள்ளது . இந்த ஆறு சதவீத வாக்குகளும் திமுக கூட்டணிக்கு குறைந்திருக்கிறது .

அது மட்டுமல்லாது நடுநிலை வாக்காளர்கள் இந்த முறை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் . கடந்த முறை தேமுதிகவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்குகளை புறக்கணித்தவர்கள் வாக்குகள் சிதறாமல் இருக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் .

கடைசி கட்ட கணிப்பின் மூலம் அதிமுக கூட்டணி 36 தொகுதிகளிளுருந்து 38 தொகுதி வரை வெற்றி பெறும் திமுக கூட்டணி 4 முதல் 2 தொகுதிகள் வெற்றி பெறலாம் . வாக்களிக்கும் நாளில் சில வேளை அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது .காங்கிரஸ் கட்சியானது புதுச்சேரியில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது .
Read More

Friday

உயிரினும் மேலான உடன் பிறப்பே

பதிவுலகத்தில் கருணாநிதியால் ஏமாற்றப்பட்ட தமிழுனர்வுள்ள உடன்பிறப்புகள் தங்களுக்கு தமிழின உணர்வு இருக்கிறது என்பதை காட்ட நடுநிலையாளர்கள் போல் தமிழின படுகொலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் பங்கு உண்டு திமுகவிற்கு பங்கில்லை என்பது போல் எழுதி வருகின்றனர் .

இத்தனை நாளும் உடன்பிறப்பாய் இருந்து விட்டோம் ஈழ தமிழர்களுக்காக மட்டும் எப்படி அதிமுகவை ஆதரிப்பது என்பது போல எழுதியும் பேசியும் வருகின்றனர் . அப்படி அவர்கள் எழுதுவதால் இன அழிப்பை ஊக்குவிக்கிறோம் என்பது ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை . (தெரியவில்லை என்பதை விட தெரியாததை போல் நடிக்கிறார்கள் )

ஜெயலலிதா பல ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கு எதிராகவே இருந்தார் உண்மை தான் . ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு ஒரு இனபடுகொலையை இந்தியாவும் சரி காங்கிரஸ் கட்சியும் நடத்தவில்லை . ஆனால் இப்போது நடப்பது என்ன ? தமிழின அழிப்பில் காங்கிரஸ் கட்சி படு வேகமாக செயல் படுகிறது . திமுகவின் சம்மதம் பெறாமல் இந்த அளவிற்கு துணிந்து காங்கிரஸ் கட்சி செயல் படாது .

நீங்கள் சொல்வதை போல் திமுகவின் சம்மதம் பெறாமல்  தான் காங்கிரஸ் கட்சி இன அழிப்பில் ஈடுபடுகிறது என்றால் அதை தடுக்க கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சி என்ன ?  கலைஞருக்கு தெரியும் ஈழ தமிழர்களுக்காக பதவி போனால் மக்கள் மீண்டும் பதவியை தருவார்கள் என்பது  . அப்படி இருந்தும் ஏன் செய்யவில்லை செய்ய  மனமில்லை   . விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உண்டு திமுகவிற்கு (கருணாநிதி மற்றும் கண்மூடித்தனமாக கருணாநிதியை இப்போதும் பின்பற்றுபவர்கள் ) இல்லை என்று நினைப்பீர்களானால் அவர்களை போல் முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது .

கருணாநிதி மற்றும் சோனியாவின் திட்டமிடலில் தான் இந்த இன அழிப்பே நடக்கிறது . கருணாநிதியின் எண்ணம் நாம் மீண்டும் கவிதை கடிதம் எழுதி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான் . ஜெயலலிதா இன்று தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக மட்டும் ஜெயலலிதாவை தமிழுணர்வாளர்கள் ஆதரிக்கவில்லை . இந்த முடிவை ஜெயலலிதா எடுக்கும் முன்னரே திமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுகவை ஆதரிக்க தமிழுணர்வாளர்கள் முடிவெடுத்து விட்டனர் . ஜெயலலிதா தமிழ் ஈழம் தான் தீர்வு எம்று சொன்னது தமிழுணர்வாளர்களுக்கு ஒரு ஆறுதலும் மக்கள் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியும் தான் .

இன்றைய திமுக அண்ணா துவங்கிய திமுக அல்ல . அந்த நிலை மாறி பல ஆண்டுகள் கடந்து போயிற்று . திமுக துவங்கிய நோக்கம் சிதைந்து போய் பல நாட்களாயிற்று . அது ஒரு உணர்வற்ற கட்சியாக தான் இப்போது இருக்கிறது . அண்ணா துவங்கிய திமுகவையும் கொள்கைகளையும் இப்போதும் கட்டி காத்து வருவது வைகோவும் மதிமுகவும் தான் . இத்தனை நாளும் தமிழை சொல்லி ஏமாற்றி வந்தார் கருணாநிதி . ஆனால் அடுத்த கட்டத்தில் தமிழ் என்ற வார்த்தை சொன்னாலே என்ன விலை என்று கேட்கும் தலைவர்கள் தான் இருக்கிறார்கள் (மகனாக இருந்தால் கூட ) கருணாநிதியின் திமுகவில் .

இன்றைய ஈழ மக்களின் இத்தனை அவலங்களுக்கு காரணம் திமுகவே . இந்த தேர்தல் தமிழர்களுக்கு எதிராக நாளை எந்த ஒரு அரசியல் கட்சியும் முடிவெடுக்காமல் இருக்க நாம் திமுக கூட்டணியை ஒட்டு மொத்தமாக தோற்கடித்தாக வேண்டும் . சிலர் இப்போதும் கேட்கிறார்கள் திமுக தோற்றால் வெற்றி  பெறுவது அதிமுக அல்லவா . ஆம் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் . இது காலத்தின் கட்டாயம் .

தேர்தல் தேதி நெருங்கும் வேளையிலும் வைகோ , ராமதாஸ் ஆகியோர் மாற்று கூட்டணி காணாமல் விட்டது தவறு என்று பேசும் உடன்பிறப்புகளும் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் . அப்படி ஒரு கூட்டணி வந்திருந்தால் கூட அது தமிழர் விரோத கூட்டணிக்கு தான் சாதகமாக போயிருக்கும் . அப்படி ஒரு நிலை ஏற்படவில்லையே என்ற ஆதங்கமும் நடுநிலையான உடன்பிறப்புகளிடம் காணப்படுகிறது .

குழப்பமின்றி வாக்களிப்போம் திமுக காங்கிரஸ் கூட்டணியை வேரறுப்போம் . தமிழினத்தின் வலிமையை காட்டுவோம் .
Read More

Wednesday

காங்கிரஸின் தோல்வி முடிவு தெரிந்து விட்டது கலக்கத்தில் சோனியா

15-வது மக்களவைக்கு முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை நான்காவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது . கடைசியாக மே 13- ம் தேதி  ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது .

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்காது என ஏஜன்சி செய்திகள் சோனியாவிடம் தெரிவித்ததையடுத்து சோனியா கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது . சோனியா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர் . அந்த நிலையில் தான் ராகுல் காந்தி போகிற இடமெல்லாம் ஆள் பிடிக்கும் வேலையில்   இறங்கியுள்ளார் .

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாநில கட்சிகளே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது . தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய்ந்த சோனியா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட காரணாத்தால் தான் திடீரென பிரச்சார கூட்டத்தையே ரத்து செய்தார் . தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் .

கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என பிராச்சாரத்தை முடுக்கி விட்டும் பயனற்று போனதை போல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரமும் பயனற்று போய் மக்கள் பிரச்சனைகளே முன்னிலை பெற்று நிற்கிறது . சி பி ஐ சுதந்திரமாக செயல் படும் அமைப்பு அந்த அமைப்பையே காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதை  ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றியது , விலைவாசி உயர்வுகள் , சுதந்திரமாக செயல் படும் பிரதமர் இல்லாதது , தமிழின படுகொலையை நடத்தும் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பது . போன்ற  பல செயல்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்து விட்டது .

காங்கிரஸ் கட்சி இந்த முறை கடந்த முறை பெற்ற 145 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேறுவது கூட கடினம் என தெரிகிறது . கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான பகுதி . கடந்த முறை நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பெற்றது ஆனால் இந்த முறை ஒரு தொகுதி கூட தேறுவது கடினம் என தெரிகிறது . ஈழ தமிழர் எழுச்சி என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் எழும்பியிருக்கிறது . காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் .

மொத்தத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி மாநில காட்சிகளால். அதே போல் வடமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பல தொகுதிகளை இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணிகள் கைப்பற்றும் என தெரிகிறது . ஆட்சி மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டு விட்டது . அப்படியென்றால் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் தோற்க போவது உறுதி படுத்தப்பட்டுள்ளது  அது தானே சொல்றீங்க .இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!
Read More

Thursday

கருணாநிதிக்கு தொற்றிக்கொண்ட தேர்தல் வியாதி


திடீர் பஸ் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றன . ஒவ்வெரு கட்சிகளும் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்றும் முன்னர் என்ன செய்தேன் என்றும் மக்கள் மத்தியில் விளக்கி பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றன .

எல்லா தேர்தலையும் விட இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக ஈழ தமிழர்களின் பிரச்னை மாறியுள்ளது இதை கொஞ்சமும் எதிர் பார்த்திராத திமுக ஈழ தமிழர்கள் விசயத்தில் கண்டு கொள்ளாமலே இருந்து வந்தது . ஈழ தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியும் மத்திய காங்கிரஸ் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக சிங்கள அரசுக்கு ஆய்தம் மற்றும் ஆளணி உதவிகளை வழங்கியது . இது தமிழக மக்கள் மத்தியிலே மிக பெரிய கோபத்தை உண்டு பண்ணியது .

தமிழகத்தில்  இதுவரை  14 பேர் தங்கள் உடலையே தீயிட்டு ஈழ தமிழர்களுக்காக மடிந்தனர் . முதலில் தீயிட்டு மடிந்த முத்துக்குமார் மாணவர்கள் இளைஞர்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி தமிழகத்தில் ஒரு மிக பெரிய எழுச்சியை உருவாக்கி வீர காவியமானார் . மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் மத்திய மாநில அரசுகளோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதை விட்டு விட்டு போராட்டங்களை சட்டத்தின் மூலம் அடக்க பார்த்து . அதன் மூலம் இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் போன்றோர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது . நீதிமன்றம் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது .

பொதுவாகவே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் தமிழர்கள் என்பது போல் உரிமை கொண்டாடி வருவார்கள் . சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு ஈழ தமிழர் படுகொலையை முன்நின்று நடத்துவதை தடுக்க தவறி விட்டார் கருணாநிதி . இதையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த கோபத்தை தணிக்க அவருக்கே உரித்தான பாணியில் மூன்று மணி நேர உண்ணாவிரதம் அரை மணி நேர போர் நிறுத்தம் என்று பல நாடகங்கள் நடித்து பார்த்தார் ஆனால் எந்த நாடகமும் பலிக்காமல் போனது . இந்த நிலையில் ஈழ தமிழர்களின் வாழ் நாள் லட்சியமான தமிழ் ஈழத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது கருணாநிதிக்கு அடுத்த சாக்.

கடந்த முறை திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல் இந்த முறை அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சூழ்நிலை உருவாகியுள்ளது . தேர்தலில் இலங்கை பிரச்னை முக்கியமான பிரச்னை என்றாலும் மற்றும் விலை வாசி உயர்வு , மின்சார தட்டுபாடு போன்ற பல பிரச்சனைகள் திமுக கூட்டணக்கு எதிராகவே நிற்கிறது .

திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணத்தை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி உயர்த்தியது . முன்னர் இரண்டு ருபாய் என்றால் ஏழு ருபாய் அளவிற்கு உயர்த்தியது . இப்போது தேர்தலும் நெருங்கி விட்டது திமுக கூட்டணியின் தோல்வியும் உறுதி செய்யபட்டிருக்கும் இவ்வேளையில் என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது .

பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த சலுகைகளும் கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி . அதையும் மீறி கருனாநித்தி பேருந்து கட்டணித்தை குறைத்திருக்கிறது . இதை போல தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தினகரன் பத்திரிகை ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்கள் மாறன் குடும்பத்தினர் . தேர்தலும் முடிந்தது பத்திரிகை விலையும் கூடியது .

இந்த பேருந்து கட்டணம் கூட அதிகார பூர்வ குறைப்பு இல்லை . இந்த பதிமூன்று நாட்களுக்கும் கட்டண குறைப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிகிறது . ஆனால் இதையும் கருணாநிதி மக்கள் சிரிக்க வேண்டிய அளவிற்கு தான் செய்கிறார் . பொதுவாகவே நாம் தோற்க போகிறோம் என்று தெரிந்தால் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாது . அதே போல தான் கருணாநிதி தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் திகைக்கிறார் என்ன செய்வது என்று தெரியாமல் அலைகிறார் .

இது தான் தேர்தல் வியாதியோ ?
Read More

Monday

இந்தியா தான் போரை நடத்தியது என மக்களுக்கு புரிய வைத்த கருணாநிதி

திருத்தம்

இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை இன்னும் விடுதலை புலிகள் கட்டு பாட்டில் ஆறு கிலோ மீட்டர் பரப்பளவே இருப்பதால் கனரக ஆயுதம் பயன் படுத்த மாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இன்று காலை முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினார் . ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு எதிரான  ஒரு  இனவெறி போரை நடத்தி வந்தது .

ஈழத்திலே நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரை இந்தியா தான் முன்நின்று நடத்தி வருவதாக பல தலைவர்கள் குற்றம் சாட்டினர் . அது இப்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது . கருணாநிதி உண்ணாவிரத நாடகம் துவங்கிய சில மணி நரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக சிதம்பரம் கருணாநிதியிடம் சொன்னதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது .

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வந்த போர் நிறுத்தத்திற்கு காங்கிரஸ் அரசும் திமுக அரசும் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்காமல் இருந்து வந்தது . மாறாக ஆயதங்களை கொடுத்ததும் ஆலோசனைகளை கொடுத்ததும் இலங்கை ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தது காங்கிரஸ் அரசு .

இப்போதாவது போர் நிறுத்தம் முழுமையாக  கடைபிடிக்கப்பட்டால் நமக்கு சந்தோசம் தான் . ஆனால் இதை பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்கள் சாகும் முன்னால் செய்திருக்கலாமே . இன்று நடந்தவைகளை பார்க்கும் போது இந்தியா தான் போரை நடத்தியது என நிரூபணம் ஆகி விட்டது . பின்னர் ஏன் இத்தனை தமிழ் மக்கள் செத்தார்கள்  .

கொழும்பில் தேர்தல் முடிந்தது மகிந்தா கட்சி வெற்றி பெற்றது போரை நடத்தியதால் . இங்கே தேர்தல் துவங்கியது சோனியா போரை நிறுத்தினார் .
இந்நிலையில்

தரை, கடல் வழியாக பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய படையினர் கடும் முயற்சி: பலமுனை முன்நகர்வை எதிர்த்து புலிகள் கடும் சமர்
Read More

சோனியா காந்தியை கண்டித்து தங்கபாலு உன்ன்னாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கிறார் . இது வரை காலமும் விடுதலை புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி இலங்கைக்கு சென்று அங்கு நடைபெறுகின்ற மனித அவலங்களை சொன்ன பின்னர் தமிழ் ஈழம் ஓன்று தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என சொல்லி நானே போராடி பெற்று தருவேன் என நேற்று அறிவித்தார் .

இதையடுத்து திமுக ஆதரவிலான மத்திய அரசு தான் இலங்கையில் போரை நடத்தி வருகிறது என தமிழ் இன ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர் . எப்போது தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அதை தேசிய பாதுகாப்பு சட்டம் , கைது , நாடகம் போன்றவற்றால் தடுத்து வந்தார் கருணாநிதி . இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக காங்கிரஸ் காட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர் .

இந்த வேளையில் திடீரென கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை எதிர்த்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் துவங்கி விட்டார் . இதையடுத்து தமிழகம் முழுவது உடன்பிறப்புகள் பஸ் மறியல் செய்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .

திடீரென காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு சோனியாவை எதிர்த்து சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் . தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராகவும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
Read More

Thursday

அய்யா கலைஞர் அடுத்து எப்போ எதிர்பார்க்கலாம்

இப்போ எல்லாம் கலைஞர் காமெடி கிங்கா வலம் வந்து கொண்டிருக்கிறார் ( வயசு கோளாறு என்று நீங்க நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது ) தினம் ஒரு காமெடி அடிக்கவில்லை என்றால் அவரால நிம்மதியாவே இருக்க முடியாது .

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் சின்னதா ஒரு காமெடி அடிச்சி அந்த சிரிப்பு அடங்கும் முன்னரே அடுத்த சிரிப்பு . நீங்க முன்னால எல்லாம் பல காமெடி அடிச்சிருந்தாலும் அப்போ உங்க உடன் பிறப்புகள் அத ஒரு சீரியஸ் மேட்டராக்கி கடைசிலா எல்லா படத்துல வடிவேலு அடிவாங்குற நிலைமையில் நீங்க ஆனீங்க அது என்னவோ உண்மை தான் . இப்போ தீடீர்னு  வேலை நிறுத்தம் அறிவிச்சீங்க .

அது எப்படி தல நீங்க தான் தமிழகத்தில முதல்வர் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில ஆட்சி செய்கிறது . உங்ககிட்ட நாங்க போர் நிறுத்தம் கேட்டோம் நீங்க வேலை நிறுத்தம் செய்தீங்க .  நீங்க அறிவிச்ச சில மணி நேரத்தில தங்கபாலுவும் ஆதரவு தந்தாரு . போர் நிறுத்தத்தில நடந்த கூத்த ஏற்கனவே பல பதிவர்கள் பதிந்து விட்டார்கள் .

நீங்க ஈழ தமிழர்களுக்காக வேலை நிறுத்தம் என்கிறீர்கள் உங்க மகன் ஸ்டாலின் சொல்றாரு ஈழ பிரச்னை ஒரு பிரச்சனையே இல்லை என்று .

யாருக்கு கோரிக்கை வச்சீங்க ? சிதம்பரம் வேற சொல்லியிருக்கிறார் இது மத்திய அரசுக்கு எதிராக இல்லை சும்மா வருத்தம் தெரிவிக்க தான் . நீங்களே ஆயுதம் கொடுத்து கொலை செய்து விட்டு வருத்தம் தெரிவிக்க விடுமுறை விட்டீங்களா ? எப்படி உங்களால இதெல்லாம் முடியுது . உங்களா மாதிரி ஒரு தலைவர் எங்களுக்கு கிடைக்க நாங்க பல புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் . வேறு எந்த இனத்திற்கும் இப்படி ஒரு தலைவர் கிடைக்க  மாட்டாரு .

ஆமா இந்த காமெடிய நீங்க அடிக்கிறீங்களா இல்ல உங்கள வச்சி சோனியா காந்தி தான் காமெடி பண்ணுறாங்களா ? உன்ன்னாவிரதம் இருக்கும் பெண்களை மட்டும் அத்துமீறி உங்க காவல் துறைய வச்சி கைது செய்யும் நேரம் எப்படி உங்களுக்கு சுயநினைவிருக்கிறது . ஈழ போராட்டங்களைஎல்லாம் நல்ல விபரமாவே அடக்குறிங்களே    அப்போ எல்லாம் நீங்க நல்லா தானே இருக்கீங்க இப்போ மட்டும் என்ன ஆச்சு .

ஓன்று மட்டும் புரிகிறது நீங்கள் காமெடி அடிக்கவில்லை . ஆனால் துரோகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் அதை நேர்த்தியாக செய்கிறீர்கள் . கட்டபொம்மனுக்கு எட்டப்பன் எப்படியோ அதே போல் நீங்கள் தமிழ் இனத்திற்கும் தமிழ் ஈழ தேசிய தலைவருக்கும் . ஒரே வருத்தம் வரலாற்றில் நீங்கள் துரோகியாய் இடம் பிடிக்க போகிறீர்களே .

எப்படியோ காவல் துறையை வச்சி ஒரு போது வேலை நிறுத்தத்தை நடத்தி விட்டீர்கள் . அடுத்து எப்போ ..................................?

Read More

Sunday

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடு ! கண்ணப்பன் செஞ்சி மாற்று வேட்பாளரா?

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள்ளது .



வேட்பாளர்கள் விவரம் ...


தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
கிருஷ்ணகிரி - சுகவனம்.
தர்மபுரி - தாமரைச்செல்வன்.
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
திருவண்ணாமலை - வேணுகோபால்.
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
கரூர் - கே.சி.பழனிச்சாமி.
பெரம்பலூர் - நெப்போலியன்.
நீலகிரி (தனி) - ராசா.
தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
மதுரை - மு.க.அழகிரி.
ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
தூத்துக்குடி - ஜெயதுரை.
நாமக்கல் - காந்தி செல்வன்.
கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


மற்றும் மதிமுகவிலிருந்து சென்ற கண்ணப்பன் பொள்ளாச்சி தொகுதியில் மாற்று வேட்பாளராகவும் , செஞ்சி ராமசந்திரன் கிரிஷ்ணகிரி தொகுதியில் மாற்று வேட்பாளராக வேட்பு மனு  தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதித்துள்ளது என தெரிகிறது .

எள் கணேசன் ஏகனவே பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

பஞ்சாயத்து தலைவர் என்பது தேர்தல் பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்பவர் .
Read More

Send your Status to your Facebook