Monday

தேசிய தலைவர் வீர மரணம் அடைந்தாரா இல்லையா ?

சிங்கள இனவெறி ராணுவத்துடன் தேசிய தலைவர் பிரபாகரன் நேரடியாக போரிட்டு 17 ம் தேதி வீர மரணம் அடைந்தார் என அனைத்துலக விடுதலை புலிகளின் தொடர்பாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார் .

இதே பத்மநாபன் தான் 19 தேதி தலைவர் நலமுடன் உள்ளார் நான் அவருடைய பாதுகாப்பு தளபதிகளிடம் பேசினேன் என்றார் . இந்த செய்தியையடுத்து தமிழர்கள் தங்கள் சோர்வுகளை மாற்றி எம் தலைவன் உயிரோடிருக்கிறார் என்ற மன நிம்மதியோடு இருந்தனர் . இந்த நிலையில் நேற்றைய செய்தி . முதலில் ராணுவம் அறிவித்த போது நாம் மறுத்தோம் , பின்னர் உடலை காட்டினார்கள் அப்போதும் மறுத்தோம் , இப்போது பத்மநாபன் சொல்லுகிறார் இப்போதும் மறுக்கிறோம் .
                                 தேசிய தலைவர் பிரபாகரன்
உண்மையில் தேசிய தலைவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்பது ஒவ்வெரு தமிழர்களுக்கும் தெரிய வேண்டிய ஓன்று . தேசிய தலைவர் அவர்கள் ஒவ்வெரு தமிழர்கள் நெஞ்சிலும் இருக்கும் மாவீரன் . களத்தில் போரிடும் போது வீர மரணம் நடந்தே தீரும் . அது தான் தமிழனுக்கு பெருமை . தலைவரின் வீர மரணத்தை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது தேசிய தலைவர் உயிரோடில்லை என்ற போது சிங்களர்களின் ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை .

தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என பத்மநாபன் அறிக்கையை மறுக்கும் அய்யா பழ. நெடுமாறன் மற்றும் மதிப்பிற்குரிய வைகோ அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என்பது . இல்லை வேறு யாராவது தலைவருடன் தொடபில் இருப்பவர்கள் தகவல்கள் தந்தார்களா உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள் எங்களை போன்ற நம்பிக்கை மட்டும் தான் உங்களுக்கு இருந்தால் நம்புகிறோம் என்று சொல்லி முடியுங்கள் . ஒவ்வெரு தமிழ் ஆதரவு இணைய தளங்கள் ஒவ்வெரு விதமாக செய்திகள் போடுகின்றன .யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பமே மேலோங்கி உள்ளது விடுதலை புலிகளின் அனைத்துலக உளவு துறை தலைவர்  அறிவழகன் தலைவர் உயிரோடிருக்கிறார் என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிக்கை விட்டார் . இப்போது பத்மநாபன் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார் .

மனம் நம்ப மறுத்தாலும் தலைவர் உண்மையிலேயே வீர மரணம் அடைந்தால் நாம் அவருக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் . எதையுமே அந்த காலங்களிலே நிறை வேற்ற வேண்டும் . எம் தலைவனுக்கு வீர வணக்கம் செலுத்த நாதியில்லை என  நினைக்க தோன்றும் .  

கவலையோடு உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒரு தமிழன்

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook