Sunday

புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்

புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாம் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்தா கோருகிறார் . ஒரு புறம் தமிழர்கள் பூமியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை அரங்கேற்றிவரும் சிங்கள இனவெறி அரசு இப்போது புத்த நாடுகள் சேர்ந்து இலங்கையை மேற்குலக நாடுகளின் சதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் . 

முதலில்  விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என மேற்குலக நாடுகளின் துணையுடன் சேர்ந்து போர் நடத்திய சிங்கள இனவெறி அரசு 50,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலை செய்தது . மற்ற தமிழர்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து சொந்த நிலத்திலே அகதியாகவும் ராணுவத்தின் கண் காணிப்பிலும் சிறை வைக்க பட்டனர் . போர் முடிவடைந்தது என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிங்கள அரசு மக்களை தங்கள் சொந்த நிலத்தில் குடியேற்ற தயங்குகிறது . மாறாக சிங்கள மக்களை தமிழர்கள் பூமியில் குடியேற்றி வருகிறது .

யாழ் பாணம் தொன்று தொட்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழர் பூமி . இங்கே சிங்கள இனவெறி அரச தலைவரின் மனைவி மகன் சமீபத்தில் வந்து புத்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டி சென்றது குறிப்பிட தக்கது . கடைசி இரண்டு நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இன படுகொலையை போல் நிகழ் காலத்தில் உலகில் எங்கேயும் நடக்கவில்லை . நம் கண் முன்னே ஆயிர கணக்கான உறவுகளை சிங்கள இன வெறி அரசு கொலை செய்து வெளியுலகத்திற்கு தெரியாதவாறு எரித்து சாம்பலை நந்தி கடலிலே கலந்து விட்டது .

அகதி முகாம்கள் எல்லாம் வதை முகாம்கள் ஆக்க பட்டது . ஒரு இன படுகொலைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு நடத்தியது . புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அவர்கள் வாழும் நாடுகளை அசைக்கிறது . இதையடுத்து சில நாடுகள் மனிதாபி மான அடிப்படையில் போர் குற்றங்கள் விசாரிக்க பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன . ஏற்கனவே ரத்த கறை  படிந்த இந்தியா உட்பட சில நாடுகளின் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற பட விருந்த தீர்மானத்தை தோற்கடிக்க செய்தது . இப்போது அடுத்த கட்டமாக தான் இலங்கை ஒரு சிங்கள நாடு இலங்கை ஒரு புத்த தேசம் என உலகிற்கு உரக்க சொல்வது போல் புத்த நாடுகள் காப்பாற்ற வேண்டும் என அரச தலைவர் வேண்டுகிறார் .

புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .

10 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .//

நல்ல சிந்தனையுடன் சொல்லியுள்ளீர்கள் சுரெஷ் குமார்

ஆ.ஞானசேகரன் said...

//புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .//

நல்ல சிந்தனையுடன் சொல்லியுள்ளீர்கள் சுரெஷ் குமார்

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .//

நல்ல சிந்தனையுடன் சொல்லியுள்ளீர்கள் சுரெஷ் குமார் ///////////

நன்றி ஆ.ஞானசேகரன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

Sriragavan said...

சிங்களவனுக்கு எம் மக்களை சிறையில் அடித்து துன்புறுத்தி அடைத்து வைத்து அவர்களை மனோ ரிதியில் புலிகள் ஈழம் என்னும் நினைவையே அழிக்க வேண்டும்

Suresh Kumar said...

Sriragavan on June 22, 2009 10:58 AM said...

சிங்களவனுக்கு எம் மக்களை சிறையில் அடித்து துன்புறுத்தி அடைத்து வைத்து அவர்களை மனோ ரிதியில் புலிகள் ஈழம் என்னும் நினைவையே அழிக்க வேண்டும் /////////////

இப்போது சிங்களவனின் நோக்கமே அது தான் மன ரீதியாக துன்புறுத்துவது

Aazhi Mazhai said...

intha kodumaigaluku mudivillayaa endru innaikum poothu kalakama iruku...

புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்

Mutrilum unmai...

Suthan said...

நல்ல சிந்தனையுடன் சொல்லியுள்ளீர்கள் சுரெஷ் குமார்

Suresh Kumar said...

Aazhi Mazhai on June 22, 2009 3:04 PM said...

intha kodumaigaluku mudivillayaa endru innaikum poothu kalakama iruku...

புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்

Mutrilum unmai...////////////


உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

Suresh Kumar said...

Suthan said...

நல்ல சிந்தனையுடன் சொல்லியுள்ளீர்கள் சுரெஷ் குமார் //////////////

நன்றி சுதன்

Anonymous said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Post a Comment

Send your Status to your Facebook