• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label உலக நாடுகள். Show all posts
Showing posts with label உலக நாடுகள். Show all posts

Tuesday

ஐநாவும் டீக்கடை பெஞ்சும்

இரண்டாம் உலக போரையடுத்து 1945 ஆம் ஆண்டு  உலக நாடுகள் சேர்ந்து உலக நாடுகளை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை . இதில் உலகின் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன . ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமே சர்வதேச சட்ட திட்டங்கள் , சர்வதேச பாதுகாப்பு , சர்வதேச பொருளாதார மேம்பாடு , சமூக சேவைகள் , மனித உரிமைகளை நிலை நாட்டுவது , மனித உரிமை மீறல்களை தடுப்பது , உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .

இதில் பொதுச்சபை( General Assembly  ) , பாதுகாப்பு சபை(Security Council), பொருளாதார மற்றும் சமூக சபை( Economic and Social council) ,அனைத்துலக நீதிமன்றம்(International Court of Justice ) போன்ற உள்  அமைப்புகள் காணபடுகின்றன . பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க படுகின்றன ஆனால் அமெரிக்க , சைனா , ரசியா , இங்கிலாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன . அது மட்டுமல்லாது இந்த ஐந்து நாடுகளுக்கும் பாதுகாப்பு சபையில் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .

உலகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெற்று முடிவுகள் எடுக்க படும் . ஒரு சிறுபான்மை இனம் தாக்கபட்டாலோ அத்துமீறி இன்னொரு நாட்டின் மீது ஒரு நாடு படைஎடுத்தாலோ விவாதங்கள் நடத்தி குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படும் . ஆனால் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் நினைத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கலாம் மனித பேரவலம் ஏற்படுத்தலாம் .

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையை பார்த்தால் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஒவ்வெரு மனிதன் ஒவ்வெரு இனம் இவைகளின் உரிமைகள் நிலை நாட்ட படும் என்று மேலோட்டமாக இருக்கும் . ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஒரு டீக்கடை பெஞ்சு ரேஞ்சிக்கு தான் இருக்கிறது . உலகத்தின் கண்களுக்கு முன்னாலே லட்சகணக்கான மக்கள் இனவெறி அரசால் கொல்ல   பட்ட போது  ஐக்கிய நாடுகளும் அதன் செயலாளரும் அறிக்கை மட்டுமே கொடுத்து கொண்டிருந்தனர் . ஆனால் கண் முன்னே இறந்து கொண்டிருக்கும் உயிர்களை காப்ப்பாற்ற காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வில்லை .

இலங்கையில் பெரும்பான்மை மக்களால் பறிக்க பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கவும் இல்லை . உலகத்திலே மிக பெரிய மனித பேரவலம் இலங்கை தீவிலே நடைபெற்ற போதும் , நடைபெற்றிருக்கின்ற போதும் ஐக்கியி நாடுகள் சபையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை . ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் இலங்கை பேரவலத்தை நீங்கள் ஏன் தடுக்க வில்லை என்பதற்கு நான் இருபதுக்கு மேற்பட்ட கண்டன அறிக்கையை கொடுத்து விட்டேன் ஒரு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளராக என்னால் இதைதான் செய்ய முடியும் என்கிறார் .( இதைதான் நம்மூரு முதல்வரும் சொல்லுகிறார் )

இப்படி எதுவுமே செய்ய முடியாத ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதர்களுக்கு என்ன பயன் . டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது நடைபெறும் விவாதம் போன்றது தான ஐக்கியாய நாடுகள் சபையா ? உலகத்திற்கு தெரிந்தே ஒரு இனவெறி நாடு இன்னொரு இனத்தின் மீது படுகொலை நடத்தும் போது தடுக்க முடிய வில்லையெனில் ஐக்கிய நாடுகள் சபையே தேவையில்லை தானே .
Read More

Sunday

புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்

புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாம் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்தா கோருகிறார் . ஒரு புறம் தமிழர்கள் பூமியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை அரங்கேற்றிவரும் சிங்கள இனவெறி அரசு இப்போது புத்த நாடுகள் சேர்ந்து இலங்கையை மேற்குலக நாடுகளின் சதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் . 

முதலில்  விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என மேற்குலக நாடுகளின் துணையுடன் சேர்ந்து போர் நடத்திய சிங்கள இனவெறி அரசு 50,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலை செய்தது . மற்ற தமிழர்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து சொந்த நிலத்திலே அகதியாகவும் ராணுவத்தின் கண் காணிப்பிலும் சிறை வைக்க பட்டனர் . போர் முடிவடைந்தது என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிங்கள அரசு மக்களை தங்கள் சொந்த நிலத்தில் குடியேற்ற தயங்குகிறது . மாறாக சிங்கள மக்களை தமிழர்கள் பூமியில் குடியேற்றி வருகிறது .

யாழ் பாணம் தொன்று தொட்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழர் பூமி . இங்கே சிங்கள இனவெறி அரச தலைவரின் மனைவி மகன் சமீபத்தில் வந்து புத்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டி சென்றது குறிப்பிட தக்கது . கடைசி இரண்டு நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இன படுகொலையை போல் நிகழ் காலத்தில் உலகில் எங்கேயும் நடக்கவில்லை . நம் கண் முன்னே ஆயிர கணக்கான உறவுகளை சிங்கள இன வெறி அரசு கொலை செய்து வெளியுலகத்திற்கு தெரியாதவாறு எரித்து சாம்பலை நந்தி கடலிலே கலந்து விட்டது .

அகதி முகாம்கள் எல்லாம் வதை முகாம்கள் ஆக்க பட்டது . ஒரு இன படுகொலைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு நடத்தியது . புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அவர்கள் வாழும் நாடுகளை அசைக்கிறது . இதையடுத்து சில நாடுகள் மனிதாபி மான அடிப்படையில் போர் குற்றங்கள் விசாரிக்க பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன . ஏற்கனவே ரத்த கறை  படிந்த இந்தியா உட்பட சில நாடுகளின் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற பட விருந்த தீர்மானத்தை தோற்கடிக்க செய்தது . இப்போது அடுத்த கட்டமாக தான் இலங்கை ஒரு சிங்கள நாடு இலங்கை ஒரு புத்த தேசம் என உலகிற்கு உரக்க சொல்வது போல் புத்த நாடுகள் காப்பாற்ற வேண்டும் என அரச தலைவர் வேண்டுகிறார் .

புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .
Read More

Monday

உலகத்திலே கேவலமான இனமா தமிழினம் ?

இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தமிழன் உலகத்திலே கேவலமானவனா என நினைக்க தோன்றுகிறது . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய   மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று நாம் படிக்கும் பாடங்களின் மூலமாகவும் .பெரியோர்களின் மூலமாகவும் நமது பெருமைகளை சொல்லியே நாம் வளர்ந்தோம் .

மிக பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இனம் என்று சொல்லியே வளர்ந்த நாம் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவைகளை பார்க்கும் போது வரலாறு தவறாகஎழுதப்பட்டதா ? என சிந்திக்க தூண்டுகிறது . வீரத்தில் தமிழன் கலாச்சாரத்தில் தமிழன் கண்டுபிடிப்புகளில் தமிழன் இப்படி அதில் தமிழன் இதில் தமிழன் என்று சொல்லி நமக்கு நாமே பெருமையடித்து நிகழ் காலத்தை தவறவிட்டோம் . நிகழ் காலத்தில் தமிழன் என்று சொன்னாலே கேட்க யாருமற்று காணப்படுகிறது . ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுபட்ட நாளிலிருந்து ஈழ தமிழர்கள் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொடுமைபடுத்த பட்டனர்.

இருபது ஆண்டு காலம் சாத்வீக வழியில் சுதந்திரம் பெற்றுவிடலாம் என போராடிய மக்கள் மீது சிங்கள ஆதிக்கம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது .இளைஞர்கள் கொல்லப்பட்டனர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர் .ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு நொடியும் ஆதிக்க வர்க்கத்தினால்  படும் தொல்லைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினர் . ராணுவ அடக்கு முறையைக்கு எதிராக ஆயுத போராட்டங்களை துவக்கினர் . ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவான அமைப்பு தான் பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை புலிகள் .

எத்தனை குழுக்கள் தோன்றினாலும் தான் கொண்ட லட்சியத்திலும் சமரசம் செய்யாமல் இருந்ததால் மக்கள் ஆதரவு பெற்று ஈழ தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் ஆனார்கள் விடுதலை புலிகள் . சிங்கள அரசிற்கு எதிராக மக்களும் விடுதலை புலிகள் பின்னால் அணி திரன்டதின்   விளைவாக தமிழ் ஈழ நில பரப்பில் 85 சதவீத நில பரப்புகள் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் வந்தது . அங்கு வாழும் மக்களுக்கு நல்ல ஒரு நிர்வாகத்தை கொடுத்தனர் விடுதலை புலிகள் .

இலங்கை தீவு என்பது ஒரு நாடு அல்ல இரண்டு நாடுகள் ஓன்று தமிழ் ஈழம் மற்றொன்று சிங்களம் ஆனால் சிங்கள தேசமோ தமிழர்களை சிங்களத்துடன் வைத்து கொண்டு கொத்தடிமை வாழ்க்கையை நடத்த நினைத்து தான் தமிழர் பூமி மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தது . அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற மோசமான முன்னுதாரணம் மூலம் போரை நிகழ்த்தியது . ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருப்புகள் மீது முப்படைகளாலும் தாக்குதலை தொடுத்தனர்  .

முதலில் மக்களின் சாவு எண்ணிக்கை தினம் நூறாக இருந்தது . பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்டது . உலக நாடுகளின்  கண்கள் குருடாகி போயின . காதுகள் செவிடாகி போயின . தமிழன் தினம் தினம்  இறந்து  கொண்டேயிருந்தான் . பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போது  கண்டித்த உலக நாடுகள் தமிழர்கள் சாகும் போது  கண்டிக்க மறந்து விட்டனர் . அதன் உச்ச கட்டமாக முல்லிவைக்கால் பகுதியில் 25000 பேரை ஒரே நாளில் ரசாயன் ஆயுதம் மூலமாகவும் கனரக ஆயுதம் மூலமாகவும் கொன்றொழித்தது சிங்கள இனவெறி அரசு .

நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள்   நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .
Read More

Send your Status to your Facebook