Wednesday

பயமா பக்தியா ?

தினமும் காலையில் சரியாக 9 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு விடுவான் ராஜன் . அன்று சனிக்கிழமை வழக்கம் போல் அன்றும் வேலைக்கு மணிக்கே கிளம்பி விட்டான் .

ஓரிடத்தில் வேலை பார்த்து கொண்டே இன்னொரு இடத்தில் வேலை தேடும் சாதாரண இளைஞன் தான்  ராஜன் . தினமும் பத்திரிக்கைகளை பார்த்து வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தான் .

காலையில் 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகிற ராஜன் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான் . அதே போலவே அன்றும் 9 மணிக்கே வீட்டிற்கு வந்தான் வீட்டில் பத்திரிக்கைகையில் இருந்த வேலை வாய்ப்பு செய்தி கண்ணில் பட்டது .

படித்திருந்தும் ஒரு மாதம் வேலை செய்தால் 1500 ருபாய் தான் மாத சம்பளமாக கிடைக்கிறது .  ஆனால் இந்த கம்பெனியிலோ குறைந்த பட்சம் 10,000 ருபாய் தருவதாக போட்டிருக்கிறார்கள் . இவனும் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கும் இங்குமாக நடந்து அதை பற்றிய சிந்தனையில் மூழ்கினான் .

நேர்முக தேர்வோ நாளை அதுவும் ஞாயிற்று கிழமை

தன்னுடைய மதிப்பெண் பட்டியல் அனைத்தையும் சரி பார்த்தான் எல்லாம் சரியாக இருந்தது ஆனால் பயோ டேட்டா மட்டும் இல்லை அலுவலகத்தில் மாட்டி கொண்டது . நேரமும் கடந்து விட்டது

காலையில் 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் தான் நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு 10 மணிக்கு போய் சேர முடியும் . பயோ டேட்டா வேறு இல்லை இருந்தாலும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது . கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளை கொடுக்கும் ஜோ  கடையில் காலையில் சென்று அந்த வேலையை முடிக்கலாம் என நினைத்தான் .

காலையில் 5.30 மணிக்கே எழுந்து ஜோவின் வீட்டிற்கு சென்றான் . கதவோரத்தில் நின்று ஜோ  ........ ஜோ  என்று அழைத்தான் . ஜோவும் வெளியே வந்தான் .

இன்று எனக்கு ஒரு இன்டர்வியு இருக்கிறது என்னுடைய பயோ டேட்டா  தயார் செய்ய வேண்டும் . இது எனக்கு முக்கியமான இன்டர்வியு என்று விளக்கினான் .
எல்லாவற்றையும் கேட்ட ஜோ சொன்னான் என்னால் சர்ச் போகாமல் கடையை திறக்க முடியாது என்றான் . இதை கேட்டு  அதிர்ந்த   ராஜன் நானும் உன்னை போல் சார்சிக்கு போகிறவன் தான்  இன்று எனக்கு இந்த இன்டர்வியு மிக முக்கியம் என்றான் நீ தான் எப்படியாவது எனக்கு உதவ வேண்டும் என அழாத குறையாய் கேட்டான் .

மீண்டும் முடியாது  என்றே சொல்லி விட்டான்  . மனமுடைந்து இனி என்ன செய்வது இன்று ஞாயிற்றுகிழமையாக இருப்பதால் கடைகள் திறக்காதே இவனுக்கு நான் எவ்வளவு வேலை கொடுத்திருப்பேன் இருந்தாலும் இவன் இப்படி சொல்லி விட்டானே  என்று மனதிற்குள் வருந்தி விட்டு  ஜோவை பார்த்து உன்னுடைய ரத்த உறவுகளுக்கு இன்று திடீரென ஏதாவது நேர்ந்தால் சார்சிக்கு போன பின்னர் தான் பார்ப்பாயா?  என்று கேட்டு விட்டு ஓய்வு நாளில் நன்மை செய்வதா ? தீமை செய்வதா என்ற பைபிளில் இருக்கும் வாசகத்தையும் நினைத்து   நடக்க ஆரம்பித்தான் ..................................................
இது என்னுடைய சிறு முயற்சி மனதில் பாதித்த செயல்களை சிறு கதையாக்கி உள்ளேன் உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள் .

15 கருத்துக்கள்:

winner said...

சுரேஷ் நல்ல கருத்தை சிறுகதையாய் சொல்லியிருக்கிறாய்

winner said...

சுரேஷ் நல்ல கருத்தை சிறுகதையாய் சொல்லியிருக்கிறாய்

Suresh Kumar said...

நன்றி winner

மதிபாலா said...

நல்ல கருத்து நண்பரே...

அதற்கு கதை வடிவம் கொடுத்தது இன்னும் சிறப்பு.

Suresh Kumar said...

மதிபாலா on July 15, 2009 12:22 PM said...

நல்ல கருத்து நண்பரே...

அதற்கு கதை வடிவம் கொடுத்தது இன்னும் சிறப்பு. //////////////////////////

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

சூரியன் said...

சுள்னு சுடுறீங்களே ..

Suresh Kumar said...

சூரியன் said...

சுள்னு சுடுறீங்களே ..////////////////

நன்றி சூரியன்

sakthi said...

அருமையான சிறுகதை

நல்ல கருத்து

கலையரசன் said...

கதை கூட எழுதுவீங்களா சுரேஷ்.. சூப்பர்

Suresh Kumar said...

sakthi said...

அருமையான சிறுகதை

நல்ல கருத்து ///////////////////////

நன்றி சக்தி

Suresh Kumar said...

கலையரசன் said...

கதை கூட எழுதுவீங்களா சுரேஷ்.. சூப்பர் /////////////

கதையெல்லாம் ரெம்ப வராது தான் சும்மா ஒரு முயற்சி தான் பார்த்து நன்றி கலை

குடிகாரன் said...

நல்லா இருக்கு

Suresh Kumar said...

குடிகாரன் on July 16, 2009 10:44 AM said...

நல்லா இருக்கு ////////////////////

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

sathya said...

nie one..kandippa udhavum karangalil than kadavulai kaana mudiyum.naan mudhalil padiththa bayama? bakthiya? ve nanraga irukirathu.....innum neraiya ezhuthungal.

unmaiyana ennagalai solirukeenga..

good one.....

Suresh Kumar said...

sathya on July 21, 2009 7:43 AM said...
nie one..kandippa udhavum karangalil than kadavulai kaana mudiyum.naan mudhalil padiththa bayama? bakthiya? ve nanraga irukirathu.....innum neraiya ezhuthungal.

unmaiyana ennagalai solirukeenga..

good one...../////////////

Thanks Madam

Post a Comment

Send your Status to your Facebook