Sunday

குடியரசு குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்த வைகோ

திமுகவிலிருந்து வைகோவை கொலை பழி  சுமத்தி வெளியேற்றிய போது வைகோவுடன் வெளியேறி மதிமுகவில் இணைந்து கட்சியின் துணை போதுச்செயலாராக இருந்த மறிந்த கவிஞர் குடியரசு அவர்களின் குடும்பத்துக்கும் 50 லட்ச ருபாய் செலவில் வீடுகள் கட்டி இன்று  (12  July  2009) கொடுக்கபட்டிருக்கிறது .

தங்கள் கட்சிக்கு இரத்தமும், வியர்வையும் சிந்தும் தொண்டர்களையே சில அரசியல் தலைவர்கள் மறந்து விடுவார்கள். மரணத்துக்குப் பிறகோ, அவர்களது நினைப்பே இருக்காது. ஆனால், ம.தி.மு.க.வை இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரி இயக்கமாக நிலை நிறுத்தி இருக்கிறார், வைகோ.


ம.தி.மு.க.வில் அங்கம் வகித்தவர் கவிஞர் குடியரசு. இவருக்கு ‘ஜனநாயகம்’ என பெயர் சூட்டியவர், தந்தை பெரியார். அதை அறிஞர் அண்ணா தமிழ்ப்படுத்தி ‘குடியரசு’ என்று ஆக்கினார். நல்ல கவிஞராக வலம் வந்த குடியரசு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். உடல் நலம் குன்றி இறந்தார். ஆனால், அவர் குடிசையில் வாழ்ந்து இருக்கிறார். ‘அவருக்குத்தான் உதவ முடியவில்லை.

அவரது குடும்பத்துக்காவது உதவ வேண்டும்’ என்று வைகோ நினைத்தார். அதன்படி குடியரசுவின் மனைவி, பிள்ளைகள் என 8 பேருக்கு சென்னை அசோக் நகரில் ம.தி.மு.க. சார்பில் வீடுகள் (குடியரசு இல்லம்) கட்டிக் கொடுக்கப்பட்டது .

முன்னர் அடிக்கல் நாட்டும் விழாவில் வைகோ பேசியது .

“வறுமையின் பிடியில் வாடிய கவிஞர்கள் ஏராளம். ‘என் வாழ்நாளில் பொன் மோதிரம் போட்டுக் கொண்டது இல்லை’ என்றானே கவிஞன் பாரதி. அவனும் வறுமையில் போராடி இருக்கிறான். குடியரசு அவர்கள், வடசென்னையில் புறாக்கூடு போன்ற இல்லத்தில் வசித்தபோது, அங்கே பலமுறை சென்று நான் சந்தித்து இருக்கிறேன். அதற்கு உள்ளேயும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். அதை அடுக்கி வைப்பதற்கு இடம் கிடையாது. பாதுகாப்பதற்கு வசதிகள் கிடையாது.

‘இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இருக்கிறாரே?’ என்று நான் நினைத்தேன். அதன்பின்னர் அவர் அசோக் நகரில் இருந்தார் என்பது சில காலம் எனக்குத் தெரியாமலே இருந்தது. ஒருநாள் காலை வேளையில் கடலூரில் நான் இருந்தபோது, ‘குடியரசு மறைந்தார்’ என்ற செய்தி இடியென வந்து தாக்கியது. நாங்கள் ஓடோடி வந்தோம். ஓலைக்குடிசைக்கு முன்னால் அவரது உடல். அப்பொழுது அந்தக் குடிசையின் தோற்றத்தைப் பார்த்து, ‘இந்தக் குடிசையில்தான் கடைசிக் காலத்தில் பல மாதங்களைக் குடியரசு கழித்தாரா?’ என்று நான் அதிர்ச்சி அடைந்தேன். என் மனத்தில் வேதனை நிறைந்தது.

அப்பொழுது குடியரசு அவர்களின் பிள்ளைகள் இசைவாணனும், பாரதிதாசனும் சொன்னார்கள். “ஒருநாள் அப்பாவிடம், ‘குடிசைக்கு உள்ளே மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. கீழே மண் தரை சேறாக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தக் கூரையையாவது மாற்றித் தரச்சொல்லி பொதுச் செயலாளரிடம் நாங்கள் உதவி கேட்கிறோம்’ என்றோம்.

அதற்கு அப்பா ‘அந்தத் தம்பியே ரொம்ப கஷ்டப்படுகிறது இதை எல்லாம் அவரிடம் சொல்லாதே, எங்காவது பழைய ‘பிளா°டிக்’ விரிப்பு கிடைத்தால் அதை வாங்கி வந்து குடிசையின் ஓட்டையை மறைக்குமாறு மேலே போடு. மழைக் காலத்தைக் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம்’ என்று பதில் சொன்னார்” என்று கூறியபோது, மழைத் துளிகளைப் போல எங்கள் விழிகளிலும் மழை பெய்தது.

குடியரசின் உடலை பூமியில் புதைக்கிறபோது “இந்தக் கவிஞரின் பிள்ளைகள் வாழ்வதற்கு ம.தி.மு.க. வீடுகள் கட்டிக் கொடுக்கும்” என்று சொன்னோம். அந்த விதத்தில், குடியரசின் துணைவியாரும், அவரது வாரிசுகளும் வாழ்வதற்கு எட்டு இல்லங்கள் - எளிய சிறிய இல்லங்களை நாங்கள் கட்டிக் கொடுக்க இருக்கிறோம்” என்றார், வைகோ.

குடிசையில் வசித்த ஜீவாவின் மனைவிக்கு அன்று அரசு வேலை கொடுத்தார், காமராஜர். இன்று குடிசையில் வசிக்கும் கட்சி நிர்வாகியின் குடும்பத்துக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறது ம.தி.மு.க. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல முன் உதாரணச் செயல் என்றால் மிகை இல்லை.

8 கருத்துக்கள்:

வின்னர் said...

மரணத்துக்குப் பிறகோ, அவர்களது நினைப்பே இருக்காது. ஆனால், ம.தி.மு.க.வை இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரி இயக்கமாக நிலை நிறுத்தி இருக்கிறார், வைகோ.///////////////////

வைகோ எப்போதுமே தொண்டர்கள் மீது கரிசனை காட்டுவார் என்பதற்கு இது ஒரு எடுத்து கட்டு .

வின்னர் said...
This comment has been removed by the author.
Suresh Kumar said...

நன்றி விண்ணேர் உங்கள் கருத்திற்கு கொஞ்ச நாளா காணவில்லை எங்க போயிருந்தீங்க

Barari said...

AAMAA VAIKO KALINGAPATTI NILATHTHAI VITRU VEEDU KATTI KODUTHTHAAR.ELLAAME VASOOL THAANE.ENNAMO KAIKAASAI POTTATHUMAATHIRI.ADA PONGAPPAA

Suresh Kumar said...

Barari on July 12, 2009 3:53 PM said...

AAMAA VAIKO KALINGAPATTI NILATHTHAI VITRU VEEDU KATTI KODUTHTHAAR.ELLAAME VASOOL THAANE.ENNAMO KAIKAASAI POTTATHUMAATHIRI.ADA PONGAPPAA ///////////////////////////


வைகோ கைகாசை போட மற்றவர்களை போல் கொள்ளையடித்து கோடி கோடியாக சொத்துக்கள் சேர்த்து வைக்கவில்லை . அப்படி கொள்ளையடித்த சொத்துக்களையெல்லாம் தன குடும்பத்திற்க்காக வைக்கும் தலைவர்கள் இருக்கும் போது இறந்த தொண்டனின் குடும்பத்துக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற என்னத்தை கட்சியினருக்கு ஊட்டினாரே அது தான் மனிதாபி மானம் .


கலிங்க பட்டி நிலத்தில் சில பங்குகளை தன் எட்டு வயதிலேயே பூமி தான இயக்கத்திற்கு கொடுத்தவர் தான வைகோ .

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//தங்கள் கட்சிக்கு இரத்தமும், வியர்வையும் சிந்தும் தொண்டர்களையே சில அரசியல் தலைவர்கள் மறந்து விடுவார்கள். மரணத்துக்குப் பிறகோ, அவர்களது நினைப்பே இருக்காது. ஆனால், ம.தி.மு.க.வை இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரி இயக்கமாக நிலை நிறுத்தி இருக்கிறார், வைகோ.//

பராட்டுதலுகுறியது

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//தங்கள் கட்சிக்கு இரத்தமும், வியர்வையும் சிந்தும் தொண்டர்களையே சில அரசியல் தலைவர்கள் மறந்து விடுவார்கள். மரணத்துக்குப் பிறகோ, அவர்களது நினைப்பே இருக்காது. ஆனால், ம.தி.மு.க.வை இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரி இயக்கமாக நிலை நிறுத்தி இருக்கிறார், வைகோ.//

பராட்டுதலுகுறியது /////////////////////

நன்றி ஞானசேகரன்

Anonymous said...

I don’t usually reply to posts but I will in this case. I’ve been experiencing this very same problem with a new WordPress installation of mine. I’ve spent weeks calibrating and getting it ready when all of a sudden… I cannot delete any content. It’s a workaround that, although isn’t perfect, does the trick so thanks! I really hope this problem gets solved properly asap.

rH3uYcBX

Post a Comment

Send your Status to your Facebook