Tuesday

மதுரையில கழிவறை கட்டியிருக்கிறார் அழகிரி வாங்க பாராட்டலாம்

நல்லது செய்தா பாராட்ட வேண்டும் இது தான் மரபு அப்படி பாராட்டாமல் இருப்பது மிக பெரிய குற்றம் . ஒரு மக்கு பையன் படிக்கும் போது சரியாக படிப்பதேயில்லை ஆசிரியர் சொல்லும் எதுவுமே அவனுக்கு புரிவதும் இல்லை இப்படியே பல நாட்கள் ஓடி போனது ஒரு முறை தேர்வில்  குறைந்த பட்ச வெற்றி மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றான் . ஆசிரியர் அவனை பாராட்டினார் ஆசிரியருக்கும் மிக பெரிய மகிழ்ச்சி இவ்வளவு நாட்கள் தேராமல் இருந்த ஒருவன் தேறியிருக்கிறான் பாராட்டாமல் இருக்க முடியுமா? 

இது தாங்க பாராட்டு இப்படி ஒரு பாராட்டு வேண்டுமென்றால் அழகிரிக்கு கொடுக்கலாம் . என்ன பாராட்டு எல்லாம் எதுக்கு அப்படி தானே கேட்கிறீங்க? சொல்றேன் மதுரைக்கு சென்ற வேளையில் எதேச்சியாக ஒரு படத்தை பார்த்தேன் அதை  புகைப்படமாக்கி அது பற்றிய ஒரு பதிவும் போட்டேன் அதை பார்க்கணுமா அப்போ இந்த பக்கமா போங்க   . பார்த்துட்டீங்க தானே இப்போ சம்பவத்துக்கு வருகிறேன். இந்த புகைப்படம் பற்றிய விவாதம் http://www.facebook.com/home.php#!/photo.php?fbid=1693166976473&set=a.1134458769117.21317.1456758830  இந்த பக்கத்தில போகிட்டிருக்கு. இதை பற்றி நண்பர் பிரின்ஸ் அவர்கள்  இலவசக் கழிவறையும், சில கழிவுகளும் அப்படின்னு ஒரு பதிவு போட்டாரு அதில அவரு பாராட்டி ஆக வேண்டும் என்று விரும்பி கேட்டதால் தான் இந்த பாராட்டு மழை.
ஒவ்வெரு பேருந்து நிலையத்திலும் கழிவறைகள் அமைக்க வேண்டும் அதை பராமரிக்க வேண்டும் இது அரசின் கடமை. ஆனால் ஒரு மத்திய அமைச்சர் கழிவறை அமைத்திருக்கிறார் அப்போ பாராட்டாமல் இருக்க முடியுமா?  பல  லட்சம் கோடி  ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது. அது மட்டுமா மந்திரி பதவிக்காக பேரனே பாட்டிக்கு அறுநூறு கோடி கையூட்டு கொடுத்திருக்கிறார்.  கலைஞரின் துணைவியாரின் மகள் கனிமொழியின் சொத்து சேர்ப்பு . மாமன் மருமகன் சண்டையில் தினகரன் அலுவலகம் எரிக்க பட்ட போது பலியான அப்பாவி மூன்று உயிர்கள் , அந்த வழக்கு இப்போ என்ன ஆச்சுனே தெரியல , திமுகவின் மூத்த முன்னணி தலைவர் தா.கிருட்டிணன் தன்னை தானே வெட்டி கொலை செய்தது ( ஆமா கொலை வழக்கிலிருந்து எல்லோரும் விடுவிக்க பட்டால் அப்படி தானே இருக்கும்)  இப்படி பாராட்ட பல நற்செயல்கள் இருக்கும் போது கழிவறை கட்டியதை பாராட்டாமல் இருக்க முடியுமா?   

திமுகவை குறித்து மோசமான குறுந்தகவல்கள் கூட அனுப்புகிறார்களாம் இப்படி வேற கொடுமை படுத்துறாங்களா? இதையெல்லாம் பொறுக்க முடியாது அப்படி சொல்லி விட்டார்கள்  அண்ணனின் தம்பிமார்கள். ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் தமிழ் நாட்டின் பெயரை கலைஞர் நாடு என மாற்றலாம் என்று சொல்லி விட்டார். ஓரளவிற்கு எல்லா இடங்களையும் அவங்க பேரிலும் பினாமி பெயரிலும் வாங்கிட்டாங்க அப்புறம் அவங்க நாடு அதுக்கு அவங்க பெயர் தானே வைப்பாங்க . அப்படி இப்படியுமா அங்கங்கே ஓட்டிகிட்டு இருக்கிற அடிமை மக்களுக்கு ஏற்கனவே ஒரு ருபாய் அரிசி கொடுத்தாச்சு , இலவச வண்ண தொலைகாட்சி கொடுத்தாச்சு இனி இலவச அரிசி வரும் அப்போ எல்லோரும் ஜாமீன் சொல்றத கேட்டு தானே ஆகணும். அதனால் பெயர் மாத்துறதில பிரச்னை இருக்காது . 

இப்படியெல்லாம் நல்ல காரியங்கள் செய்யும் போது பாராட்ட வேண்டும் . தம்பிகள் ஏதோ அண்ணன் மேல உள்ள பாசத்தில கழிவறை கூட விட்டு வைக்காமல் படத்த போட்டுட்டாங்க. ஆனால் அந்த படம் என்னை கேட்டால் அந்த இடத்தில் வைக்க மட்டும் தான் தகுதி இருக்கு என்பேன் ஏன்னா அவரு தானே கட்டினாரு ..... சரிங்க நண்பரின் விருப்பத்திற்கு இணங்க அண்ணன் அழகிரியை அனைவரும் பாராட்டுவோம் ........... அண்ணே பாராட்டுகள் இதே போல எல்லா பேருந்து நிலையங்களிலும் கழிவறைகள் இருக்கிறது முடிந்தால் தம்பிகள் மூலமாக முயற்சித்து பாருங்கள் அப்போ மேலும் மேலும் பல பாராட்டுகள் கிடைக்கும் ....................         


3 கருத்துக்கள்:

Anonymous said...

Anne Parattukal

ஜெரின் said...

கிடைக்கும் லஞ்ச பணங்களில் புதிய வீடுகளை கட்டி அழகு பார்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில்,இவர் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார்...


வாழ்த்துக்கள்... வாழ்த்துகள்...

Anonymous said...

இவருக்கு சின்ன சின்ன லஞ்ச பணம் எல்லாம் தேவை இல்லை இவங்க ஓட்டு மொத்த குடும்பமு பல லட்சம் கோடிகள் தானே கொள்ளையடிக்கிறாங்க............ அப்புறம் என்ன அது போதாதுன்னு ஹோர்லிக்ஸ் குப்பி கூடு திருடுராங்களாம்

Post a Comment

Send your Status to your Facebook