Friday

கடவுளிடம் கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களில்  மக்கள் முன் பல பரீட்சைக்கு  தயாராகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்ட தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தினர். இதில் எதிர் கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் சட்ட சபைக்கு வந்து தங்கள் எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.    தமிழகத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிற இந்த வேளையில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை கூட்டுவதற்கு எந்தவொரு தொலை நோக்கு திட்டமும் இல்லாமல் இந்த அரசு நான்கரை ஆண்டுகளை கடந்து ஓடி விட்டது.டீசல் வாங்க காசு இல்லாமல் அரசு பேருந்துகள் ஓடவில்லை என்ற அதிர்ச்சி கரமான செய்திகள் மக்களை சிந்திக்க வைக்கிறது. எந்தவொரு தொலை நோக்கு திட்டமும் இல்லாமல் செயல் பட்டால் இந்த நிலை ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.  மத்திய அரசின் தவறான திட்டங்களால் கடந்த ஆண்டு மட்டும் ஆறு முறை பெட்ரோல் விலை ஏறியுள்ளது. இதே போல் டீசல் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கடும் விலையேறியுள்ளது . 

பெட்ரொலிய பொருட்களின் விலையுயர்வால் தமிழக அரசுக்கு மட்டும் நடப்பு ஆண்டில் 3000 கோடி ருபாய் அதிக வருமானம் வரும் என் கணக்கிட பட்டது. ஆனால் இந்த விலையுயர்வினால் போக்குவரத்து  கழகத்திற்கு 500  கோடி ருபாய் நட்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்க பட்டது . ஒரு பக்கம் அதிக அளவு லாபம் ஒரு பக்கம் குறைந்த அளவு நட்டம் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தை அரசு பெட்ரொலிய பொருட்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் சரி செய்திருக்கலாம். அது மட்டுமல்லாது பேருந்துகளில் புதிய புதிய ஆங்கில எழுத்துக்களை போட்டு பயண கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். அதிகார பூர்வமாக அறிவித்து பயண கட்டணத்தை உயர்த்தாமல் மறைமுகமாக மக்களை ஏமாற்றி விடலாம் என் நினைத்து மக்களை ஏமாற்றி வருகிறது .
நான்கரை ஆண்டு கால அரசு இதுவரை வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் தீட்ட வில்லை . நான்கரை ஆண்டில் மின்வெட்டு மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தினமும் அறிவித்து இரண்டு மணிநேரம் அறிவிக்காமல் மூன்று மணி நேரம் அப்படி குறைந்தது தினமும் ஐந்து மணி நேரம் மின்சார தடை ஏற்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக எந்த உள்கட்டமைப்பும் இந்த அரசால்     ஏற்படுத்த படவில்லை . நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை தவிர எந்தவொரு மாநில சாலையோ , மாவட்ட சாலையோ இந்த அரசால் போட படவில்லை. சாலைகள்  இன்று மரண  குழிகளாக மாறி விட்டன.  பயணங்கள் பொது மக்களுக்கு சலிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கட்டுமான பொருட்களோ இன்று நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத அளவிற்கு மாறி விட்டது. சொத்துக்கள் வாங்குவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. ஒவ்வெரு பக்கமும் பொது மக்களுக்கு அடியோடு அடியாக தான் இருக்கிறது . கலைஞரின் குடும்பம் மட்டும் தான் தமிழகத்தையே ஆட்சி செய்கிறது. குடும்ப பிரச்சனைகளால் மதுரையில் எரிக்க பட்ட மூன்று உயிர்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் ஊழல்கள் மலிந்து விட்டன. உலகையே வியக்க வைத்த மிக பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்ததும் இந்த குடும்பம்  தான்  . தமிழக துறைகள் அனைத்திலும் லஞ்சம் பெருகி சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களில் சென்று நியாயமான கோரிக்கைகளை செயல் பட முடியாதவாறு எல்லாவற்றிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
அனைத்து துறைகளையும் ஒரு குடும்பம் ஆக்கிரமித்து தமிழக மக்கள் இன்று அடிமையாக காணப்படுகின்றனர். மக்கள் வாழ்வாதாரங்களை பெருக்காமல் சில இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைகாரர்களை போல் அரசு அலுவலகங்களுக்கு முன்னால் வரிசையாக நிற்க வைக்கிறது இந்த அரசு. முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்டாமல் பேரம் நடத்து தொலைக்காட்சி சேனலுக்கு எந்த பாதிப்பு வர கூடாது என்பதற்காக கேரளாவிற்கு சாதகமாக நடந்து தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடு பட்டு வருகிறது . மழையால் பாதிக்க பட்ட மக்களுக்கு இன்னும் ன்சரியான நிவாரணங்கள் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் தான் இன்று ஆளுநர் உரை வாசிக்க பட்டது .
வெங்காய விலையுயர்வுக்கு பதிலளித்த முதல்வர் பெரியாரிடம் கேளுங்கள் என்று சொன்னது போல் தமிழகம் நாளை வாழ்விழந்து , வாழ்வாதாரம் இழந்து நிற்கும் போது கடவுளிடம்  கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் . மக்கள் தான் விழிப்புணர்வு அடைந்து வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர போராட வேண்டும்  . ஓன்று படுவோம் தமிழகத்தை காப்போம் .      

4 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//ஓன்று படுவோம் தமிழகத்தை காப்போம் .
//

உண்மைதாங்க நண்பா

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//ஓன்று படுவோம் தமிழகத்தை காப்போம் .
//

உண்மைதாங்க நண்பா
////////////////////////


ஆமாம் நண்பா இது தான் சரியான நேரமும் கூட மக்கள் இன்னும் அதிகமாக தொலை நோக்கு பார்வையில் சிந்திக்க வேண்டும் .நன்றி நண்பா

ராவணன் said...

கடவுளிடம் கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் .//////////////

இனி ஒன்னும் பண்ண முடியாது எல்லாம் கைவிட்டு போச்சி

shibi said...

நம்ம மக்கள் நிறையபேர் இன்னும் குறிப்பாக காங்கிரஸ் மக்கள் தி.மு.க.. வுக்கே சாதகமாக வாக்களிக்க காத்து கொண்டிருக்கிறார்கள் ......... இது உங்களுக்கும் தெரியும் ...... திருடனாய் பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது....... வருகின்ற தேர்தலில் வெற்றியை பெறுவதற்கு கருணாநிதியும் காங்கிரஸ்யும் ஸ்பெக்ட்ரம் என்ற மாபெரும் கொள்ளை பணத்தை தாயார் செய்து விட்டது...... தீர்ப்பு எழுத வேண்டியது நாம் ........இந்த தேர்தலிலாவது சிந்திப்போம் ...... நமது தலை எழுத்தை எப்படி எழுத போகிறோம் என்று////////

Post a Comment

Send your Status to your Facebook