இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Tuesday
திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011,
நகைச்சுவை,
மொக்கை
எழுதிய நேரம்
Tuesday, March 08, 2011
ஒரு வழியாக ராஜினமா செய்வேன் என மிரட்டிய திமுகவிற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளாக 121 தொகுதிகளை கொடுத்து திமுகவின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் பார்த்து கொண்ட சோனியாவிற்கு திமுக தொண்டர்கள் சார்பாகவும் , கலைஞரின் குடும்பம் சார்பாகவும் பாராட்டுகளை கலைஞர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது குட்ட குட்ட குனிய கூடாது என சொல்லி உறங்கி கிடந்த திமுகவின் சுயமரியாதையை தட்டி எழுப்பி 121 தொகுதிகள் கிடைக்க காரணமான திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ . வீரமணியும் சோனியாவை பாராட்டி சுயமரியாதை காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்திருக்கிறார் .
தெருவெங்கும் திமுக தொண்டர்கள் கூடி தலைவரின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் 121 தொகுதிகள் என தலைவர் கருணாநிதியை பாராட்டி இனிப்பு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் வெற்றியை கொண்டாடி வருகின்றானர் . தமிழகம் முழுவதும் விழாகோலம் பூண்டிருக்கிறது . விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவாலயத்திற்கே சென்று கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . இவர் தான் காங்கிரஸ் கட்சியை விளக்கியவுடன் ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து கலைஞரின் சுயமரியாதை காக்க உதவி செய்தவர் .
இதில் முக்கியமாக கலைஞரின் சுயமரியாதை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழரின் சுயமரியாதையை இத்தாலி சோனியா காந்தி காத்திருப்பதை நினைத்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கின்றனர் . திமுக தொண்டர்கள் அனைவரும் சட்டை காலரை தொக்கி விட்டு இத்தாலி ராஜதந்திரம் எங்ககிட்ட பலிக்க நாங்க என்ன டீனா......... டூனாவா என கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதே நேரம் காங்கிரஸ் தொண்டர்கள் கருணாநிதியிடம் இத்தாலி ராஜதந்திரம் பலிக்கவில்லையே என சோகத்தில் ட்ஸாமாக் கடையிலிருந்து குவார்டர் போட்டு குப்புற படுத்து விட்டார்கள் .
நாமும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டாமா ? ................ திமுகாவின் சுயமரியாதையை காத்த சோனியா வாழ்க!
தமிழகத்தின் சுயமரியாதையை ராஜதந்திர ராஜினாமாவால் காத்த கலைஞர் வாழ்க!
இத கூட சொல்லலைனா நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது
Sunday
Orkut சர்வர் என்னமா காமெடி அடிக்குது
எழுதியது
Suresh Kumar
Labels:
Orkut,
காமெடி,
தொழில்நுட்பம்,
நகைச்சுவை,
மொக்கை,
ஜோக்
எழுதிய நேரம்
Sunday, December 19, 2010
என்னுடைய அலை பேசியில் ஆர்குட் பக்கத்தை திறந்ததும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் எனக்கு கிடைத்து . இப்படியெல்லாம் இருக்குமோ இல்ல என்னோட அலைபேசியில் தான் பிரச்சனையோ என்று யோசித்தேன் . இல்ல அலைபேசி இணையதள உலாவியில் பிரச்னை இருக்குமோ என் நினைத்தேன் . பின்னர் உலாவியை துண்டித்து மீண்டும் திறந்தேன் அதே அதிர்ச்சிகரமான செய்தி தான் .
ரூம் போட்டு யோசிக்கிறது இது தானோ ? சர்வர் தகராறு செய்கிறது பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு வாருங்கள் . அதிர்ச்சி இருக்காதா பின்ன .பின்னர் அப்படியே கீழ் பக்கம் துரதிர்ஷ்டவசமாக orkut.com எதிர்பாராத விதமாக நடந்து கொள்கிறது . சில நிமிடங்கள் கழித்து நீங்கள் முயற்சி செய்தால் உதவிகரமான நிலைக்கு வரலாம் . அப்படின்னு இருக்கு .
முடிவெட்டும் சலூன் கடைக்கு செல்லும் போது வாடிக்கையாளர் அதிகமாக இருந்தால் சலூன் கடை உரிமையாளர் வாடிக்கையாளரை கவரும் விதமாக டீ ஏதாவது சாப்பிட வேண்டியது இருந்தா சாப்பிட்டு வாங்க அதற்குள்ளால உங்க வரிசை வந்து விடும் என சொல்லுகிறமாதிரியே இப்போ ஆர்குட்லேயும் சொல்ல தொடங்கீட்டாங்க .......... ஐயோ சாமி தாங்கல யாருப்பா ஆர்குட் தமிழ் மொழி சர்வர கவனிக்கிறது . உங்களுக்கு எதாவது தரனும் போல இருக்கு சாமியோ ........... உடனே தொடர்பு கொள்ளுங்க .....
Subscribe to:
Posts (Atom)


