Sunday

மெய் சிலிர்க்க வைத்த மதிமுகவின் முடிவு

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அனைவரையும் சிந்திக்க வைத்து அரசியலில் ஒரு  வித்தியாசத்தை காட்டி இன்று அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது மதிமுகவின் தேர்தல் புறகணிப்பு. இது பற்றிய ஒரு ஆய்வு.   


கடந்த மூன்று நான்கு நாட்களாக மதிமுகவின் முடிவு என்ன என்று தெரிவதிலேயே அனைத்து கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த முடிவு இன்று காலை அறிவிக்க பட்டது . நேற்று காலை துவங்கிய மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் வருகின்ற சட்ட சபை தேர்தல் பற்றியும் கூட்டணி தொகுதி இழுபறி பற்றியும் மதிமுக எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் பல கட்ட விவாதங்கள் நடந்து பின்னர் மாவட்ட செயலார்கள் கூட்டத்திலும் இது பற்றி விவாதித்து எடுக்க பட்ட முடிவு . நேற்று காலை துவங்கிய விவாத களம் இன்று அதிகாலை 4  மணிக்கு முடிந்திருக்கிறது .

மதிமுகவிற்கு கூட்டணியில் குழப்பம் என்ற செய்திகள் வந்தவுடன் மதிமுக தனித்து போட்டியிடும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தவர்களின் நினைப்புகளுக்கு கிடைத்த முதல் அடி. கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து அதிமுகவோடு கூட்டணியாக இருந்து வரும் மதிமுகவை அதிமுக தலைமை அவமான படுத்தியது. தன்னுடைய ஆணவத்தையும் தன்னுடைய திமிர் தனத்தையும் மதிமுகவோடு காட்டி மதிமுக கூட்டணியிலிருந்து தானாக விலக வேண்டிய எல்லா காரியங்களையும் செய்தது. 

திமுக தரப்போ மதிமுக உணர்ச்சிவசப்பட்டு தனித்து போட்டியிடும் அதிமுக தங்களை அவமான படுத்தியதையடுத்து அதிமுக தோற்க வேண்டும் என்று மதிமுகவினர் வேலை செய்வார்கள் அப்போது நாமும் எளிதில் வென்று விடலாம் அதே நேரம் மதிமுகவும் காணாமல் போயிருக்கும் என நினைத்து இரண்டு மூன்று நாட்கள் மகிழ்ந்தது என்னவோ உண்மை.     

ஒரு தலைவன் உணர்ச்சி வசப்பட கூடாது என்பது வைகோவின் முடிவில் தெரிகிறது . மதிமுகவின் ஒவ்வெரு தொண்டர்களும் திமுகவினர் நினைத்ததை போல் உணர்ச்சிவசப்பட்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். மதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என தான் நினைத்தார்கள்.  ஆனால் வைகோ எதையுமே சிந்தித்து உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அதே நேரம் சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படாமல் அனைவரது புருவங்களும் உயரும் விதமாக முடிவெடுத்திருக்கிறார். 

வைகோவின் இந்த முடிவு கட்டாயம் திமுக தரப்புக்கு மகிழ்ச்சியை தராது . அதே நேரம் அதிமுக தரப்புக்கு தலைவலியை கொடுக்காது. மக்கள் மத்தியில் அதிமுக மீதான நன்மதிப்பு வைகோவின் மோனத்தால் கேட்டு போனது என்னவோ உண்மை .

மதிமுக தீர்மானத்தில் குறிப்பிட பட்டுள்ள படி "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை" "தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது" என தீர்மானத்தில் தெரிவிக்க பட்டுள்ளது .   மதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட்வர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் ஏற்கனவே எதிர் முகாமிற்கு சென்று காணாமல் போய் விட்டார்கள் . ஆனால் இப்போது இருப்பவர்களோ ஒரு லட்சியத்தோடு வைகோ பின்னால் அணி வகுத்திருப்பவர்கள் .  

தனித்து போட்டியிட வேண்டும் என உணர்ச்சிவசப்பட்ட மதிமுக தொண்டர்கள் வைகோவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் ஏற்பட்டுள்ள நன்மதிப்பால் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பதவிக்காக கட்சி விட்டு கட்சி மாறும் கட்சிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காக பதவியே வேண்டாம் என துறந்த மதிமுகவின் முடிவு நிச்சயம் மதிமுகவிற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் . 

அதிமுக திமுகவிற்கு எதிராக ஒரு கட்சி அரசியலை முன்னெடுக்க வில்லை என்ற குறைபாடு மதிமுகவின் இந்த நிலைப்பாட்டால் போய் விட்டது . தேர்தல் கமிசனின் அங்கீகாரத்திற்காக தான் ஒவ்வெரு கட்சிகளும் கூட்டணி வைத்து சில தொகுதிகளை பெற்று கொள்கின்றன . இந்த தேர்தலில் மதிமுக போட்டியிடாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற முடியாமல் போகலாம் . ஆனால் மதிமுகவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் . மக்கள் அங்கீகாரம் பெற்று விட்ட பின்னர் தேர்தல் ஆணைய அங்கீகாரம் என்பது ஒரு பொருட்டே அல்ல .  

சுயமரியாதை இழக்க முடியாது என சொல்லி பின்னர் சுயமரியாதையை இழந்து கேவல பட்டு கட்சி நடத்துகிற தலைவர்கள் மத்தியில் வைகோ உயர்ந்து நிற்கிறார் . ஜெயலலிதாவின் அகங்காரம் மதிமுகவிற்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறது . இனி வரும் காலம் வைகோவின் காலம் .  நேர்மையானவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது தவறான வாதம் வெற்றி தள்ளி போகலாமே தவிர தோல்வி என்பது நிரந்தரம் அல்ல ........................   

18 கருத்துக்கள்:

பொ.முருகன் said...

/சுயமரியாதை இழக்க முடியாது என சொல்லி பின்னர் சுயமரியாதையை இழந்து கேவல பட்டு கட்சி நடத்துகிற தலைவர்கள் மத்தியில் வைகோ உயர்ந்து நிற்கிறார்/

வைகோ கிட்டேயிருக்கிறது கோவனம் மட்டுமே.தேர்தலில் நின்றால் அதுவும் போய்டும். அதான் சுயமரியாதை,அது இது என்று பில்டப்.எது எப்படியோ தாய் கழகமான திகவுக்கு,ஒரு துனை கிடைச்சிடூசி.

Suresh Kumar said...

வைகோ தனித்து போட்டியிட்டு வாக்கை பிரித்தால் அந்த கேப்பில் கிட வெட்டலாம் என நினைத்தவர்களுக்கு இந்த முடிவு மிக பெரிய அடி தான். அந்த வருத்தத்தில் நீங்கள் பேசுவது புரிகிறது . சுயமரியாதையை விட்டு காங்கிரஸ் கட்சி தொகுதிகள கொடுக்க வேண்டிய நிலைமைக்கு அண்ணா உருவாக்கிய திமுகவை கொண்டு சேர்த்த பெருமை தானே கருணாநிதி உருவாக்கினார் .

கோவணம் யாருக்கு அவிழ்கிறது என்பது தேர்தல் முடிந்த பின்னர் தானே தெரியும்.

வின்னர் said...

சற்றும் எதிர்பாராத முடிவு . இந்த முடிவின் மூலம் வைகோவின் நன்மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. இரண்டு ஊழல் கட்சிகளுக்கு எதிரான ஒரு அணியாக வைகோ வளர வேண்டும் . இது ஒரு இடைவேளை என நினைக்கிறேன் . அடுத்த கட்டமாக மாற்று அணியாக மதிமுக வர வேண்டும் . அனைவர் ஒரு நேர்மையான உண்மையான தலைவனாக மீண்டும் தன்னை நிருபித்திருக்கிறார் வைகோ .

Barari said...

தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கவும் அ.தி.மு.க. வினை எதிர்த்து பிரசாரம் செய்யாமல் இருக்கவும் .தங்க தமிழர் வைகோ அவர்களுக்கு எத்தனை பெட்டி கிடைத்ததோ?

ராவணன் said...

நாளைய செய்தி என்னவோ?

Suresh Kumar said...

@வின்னர் /////

சுயமரியாதை என்ன விலை என்று கேட்கும் தமிழகத்தில் சுயமரியாதையோடு ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது வைகோ மட்டும் தான் . நன்றி உங்கள் கருத்திற்கு

Suresh Kumar said...

Barari said...

தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கவும் அ.தி.மு.க. வினை எதிர்த்து பிரசாரம் செய்யாமல் இருக்கவும் .தங்க தமிழர் வைகோ அவர்களுக்கு எத்தனை பெட்டி கிடைத்ததோ?
//////////////////

பணமே வாழ்க்கை என்று இருக்கும் உங்களை போன்றோருக்கு நியாயத்தின் பக்கம் தெரிய வாய்ப்பு இல்லை .

ராஜேஷ், திருச்சி said...

அ தி மு க வின் மேல் கொலை வெறியில் இருக்கும் ம தி மு க செயல் வீரர்கள் லிஸ்ட் இந்நேரம் அழகிரி கையிலிருக்கும்.. பலர் இந்நேரம் வலையில் இருப்பார்கள். அவர்கள் தி மு க விற்கு போவார்கள் என்று சொல்லல ஆனா ஜெ மீது கோவத்தில் , உசுப்பேற்றப்பட்டு அவர்கள் வாக்கு அ தி மு க விற்கு எதிராக போகும்.
என் ம தி மு க நண்பன் கூட ஜெ வெறுப்பில் ஆலந்தூரில் தா மோ அன்பரசுக்கு ஓட்டு போட முடிவு எடுத்துவிட்டான்

ராஜேஷ், திருச்சி said...

FLASH NEWS : தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் இருக்கும்’’ என்று வைகோவுக்கு கடிதம் எழுதினார்.



இந்த கடிதம் கண்டு மதிமுகவினர் கொந்தளித்தனர். திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு இப்போது கடிதம் எழுதி நாடகம் ஆடுகிறாயா என்று தமிழகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மதிமுகவின் சில மாவட்ட மாணவரணியினர் அதிமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க பாடுபடுவோம். அதற்காக தனி அமைத்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சபதம் ஏற்றுள்ளனர்.



கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சதயா, ‘’கழக பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா. எங்களை வெளியேற்றிவிட்டு எவ்வளவு அக்கறை அவருக்கு. இப்படி அனுதாபப்பட்டு கடிதம் எழுதி ஊரை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா.



மதிமுகவினரிடம் அனுதாபத்தை தேடிக்கொள்ள பார்க்கிறார். மதிமுகவினர் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறார். அது நடக்காது’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Suresh Kumar said...

@ராஜேஷ் ///////

மதிமுக தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து புறக்கணித்திருக்கிறது . வாக்களிக்க கூடாது என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை . இன்றைய சூழ்நிலையில் திமுக அதிமுக இரண்டையும் ஒன்றாக தான் மதிமுகவினர் பார்ப்பார்கள் . இரண்டு தீய சக்திகளுக்கு எதிரான ஒரு மாற்று அணி அடுத்த தேர்தல்களில் உருவாக்க வேண்டும் என்பது தான் மதிமுகவின் அடுத்த திட்டமாக இருக்கும் . அதிமுக மீதான வெறுப்பு திமுக மீதும் ஒவ்வெரு மதிமுகவினருக்கும் இருக்கும் . இந்த நேரத்தில் ஒவ்வெரு மதிமுகவினரும் சிந்தித்து வாக்களிப்பார்கள் .

Suresh Kumar said...

@ ராஜேஷ் /////

என்ன நக்கீரன் செய்தியை படித்து விட்டு தான் பதிவு செய்தீர்களோ . நக்கீரன் கதை தான் நாறி கிடக்கிறது தெரியாதா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நக்கீரன் ஆசியர் எழுதுவதை நம்ப முடியுமா ?

முனிசாமி. மு said...

மக்களால் புறக்கணிக்கப்பட்ட வைகோ தேர்தலை புறக்கணித்து என்ன பயன்?

pichaikaaran said...

வைகோ வின் நன்மதிப்பு, கட்சி சார்பற்றவர்களிடம் அதிகரித்து இருக்கிறது என்பதை நான் பலரிடம் பேசியதில் இருந்து உணர்ந்தேன்..
வழக்கமாக உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கும் வைகோ, இந்த அளவுக்கு நிதானம் காட்டியது எதிர்பாராத ஒன்று... வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்று..

இந்த தேர்தலின் முடிவு,( அந்த முடிவு எப்படி அமைந்தாலும் ) ஐந்து ஆண்டுகள் நிலைக்காது..காரணம் இருதரப்புமே அதிக கட்சிகளுன் இருப்பதால், கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல் எல்லாம் நடந்து , சீக்கிரம் ஆட்சி கவிழும்..

இப்படிப்பட்ட ஒரு தேர்தலில் இருந்து விலகி இருப்பது, மதிமுகவுக்கு நல்லது...

தமிழ் அமுதன் said...

மதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட்வர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் ஏற்கனவே எதிர் முகாமிற்கு சென்று காணாமல் போய் விட்டார்கள் . ஆனால் இப்போது இருப்பவர்களோ ஒரு லட்சியத்தோடு வைகோ பின்னால் அணி வகுத்திருப்பவர்கள் . ////


உண்மை...!

shiva said...

Its ok when vaikoo joined ADMK it was told that he was given 20 million indian rs.I dont know whether it is true or false.But i wonder how many millions was offered now to boycott elections????

Anonymous said...

You all the people are thinking VAIKO is good for helping Elam. He is slave for rajpakshe .More money may gone through Rajapakshe-Vijay Mallaya- Jayalaitha-VAIKO to stop tamil elam fight against srilanka government.

Just keep observe his activity coming days. You all the people realize it.

தாராபுரத்தான் said...

உண்மை...

Ivan Yaar said...

வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.

Post a Comment

Send your Status to your Facebook