Tuesday

வரலாற்றை மாற்றி பதிவு செய்யும் தமிழ் லீடர்

தமிழ் லீடர் என்ற இணையத்தில்  ஒரு கவர்ச்சிகரமாக பெயரிட பட்ட ஒரு கட்டுரையை பார்த்தேன். அந்த தலைப்பிற்கும் கட்டுரைக்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் எழுத பட்டிருக்கிறது.  கட்டுரையின் தலைப்பு "ஈழம் அழிந்து போனதுக்கு வைகோ காரணம்!" ஆனால் கட்டுரை வைகோவின் வாழ்க்கை வரலாறாக வருகிறது. 

ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத பட்ட கட்டுரையாகவும் இருக்கலாம் . அல்லது தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை உருவாக்கும் நோக்கத்திலும் இப்படி தலைப்பு வைத்திருக்கலாம் . பொதுவாக இல்லத்திற்கு எதிரானவர்கள் முதலில் கை வைப்பது யார் ஈழம் விடுதலை புலிகள் இந்த கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் . அதன் மூலம் அவர்களை செல்வாக்கற்றவர்களாக மாற்ற வேண்டும் . அந்த நோக்கத்தில் கூட சில இணையங்கள் கட்டுரைகள் எழுதுகின்றன. 

அதில் தெரிவிக்க பட்டுள்ள சில பகுதிகள் "1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்."

 இவ்வாறு கட்டுரையாளர் தெரிவித்துள்ளார் . இதில் பல உண்மைகள் மறைக்க பட்டுள்ளது. வைகோ கலைஞருக்கு தெரியாமல் கள்ள தோணி மூலம் ஈழம் சென்றது உண்மை தான் . வைகோ செல்லும் முன்னர் தன்னுடைய நண்பரிடம் ஈழம் செல்லும் பயணம் குறித்த பல பக்கங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்து கலைஞரிடம் நான் போன பின்னர் கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்து விட்டு சென்றார் . அதை அந்த நண்பரும் கொடுத்தார் .

கலைஞர் வைகோ வரும் வரை பயணத்தை வெளியிடாமல் இருந்தார் என குறிப்பிட பட்டுள்ளது தவறான தகவல். வைகோ கடிதத்தில் நான் ஈழம் செல்கிறேன் , அங்கு செல்வதால் என் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்து கட்சிக்கு என்னால் கெட்ட பெயர் உருவாகிற சூழ்நிலை வந்தால் இந்த கடிதத்தை வெளியிடுங்கள் . அப்போது கட்சிக்கும் என்னுடைய பயணத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நாட்டிற்கு தெரியும் இவ்வாறு வைகோ கடிதத்தில் எழுதியிருந்தார் . ஆனால்  வைகோ திரும்பி வரும் முன்னால் கடிதம் கலைஞர் கையில் கிடைத்தவுடன் வெளியிட்டு கட்சிக்கும் வைகோ சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்து கொண்டவர் தான் .

அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.

இந்த பகுதியிலும் வரலாறு திரிக்க பட்டுள்ளது . திமுக தலைவர் கருணாநிதியால் வைகோவை கட்சியிலிருந்து மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வர பட்டத்து . ஆனால் பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அந்த தீர்மானம் தோற்கடிக்க பட்டது இது தான் உண்மை . பின்னர் வைராக்கியத்தோடு போலியாக ஒரு உளவு துறை தகவலை காட்டி செயற்குழு மூலமாக வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் . அந்த தருணம் என்பது வைகோவை கட்சியை விட்டு நீக்கியது மட்டுமல்ல . கருணாநிதியை விடுதலை புலிகள் மூலமாக வைகோ கொலை செய்ய பார்கிறார் என்ற பொய்யால் விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி படுத்தும் விதமாக கருணாநிதி செயல் பட்டார் என்பது தான் உண்மை .

இந்த கட்டுரை எதற்காக எழுத பட்டுள்ளது என்பதன் நோக்கம் கடைசியில் நமக்கு சரியாக தெரிய வருகிறது . தமிழின துரோகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடியுமா என நினைப்பது தெரிகிறது ..... அந்த வரிகள் .......

காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?

"ஒரே ஒரு காரணம்.

தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.

ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்."

திமுக மைனாரிட்டி அரசாக இருந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சியை கருணாநிதியால் மிரட்ட முடியவில்லையாம் . இதை சின்ன பிள்ளைகளிடம் கேட்டால் கூட சொல்லுமே 1 ,76 ,௦௦௦௦ கோடி பணத்திற்காக ஒரு இனத்தையே கருவறுத்தார் கருணாநிதி என்று .  இதே திமுக மைனாரிட்டியாக இருந்த போது தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் மைனாரிட்டியாக இருந்தது . அந்த 40  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்வார்கள் என்று தீர்மானம் போட்டது என்ன வாயிற்று . அந்த தீர்மானம் போட்டவுடன் எல்லோருமே கருணாநிதியை புகழ்ந்தோமே (இப்போ திருமாவளவன் , வீரமணி நம்பி புகழ்ந்த மாதிரி ) ஆனால் எட்டு கோடி மக்களுக்கும் அல்வா தந்தாரே .

அன்று மட்டும் கலைஞர் பதவியை விட தமிழ் இனம் முக்கியம் என்று நினைத்திருந்தால் தமிழ் இனம் கலைஞர் வாழும் வரை கலைஞரை மெஜாரிட்டி அரசாக வைத்திருக்குமே . ஏன் செய்யவில்லை? முடிந்தும் செய்யாமல் ஏன் விட்டார் . பதவிக்காகவும் ஸ்பெக்ட்ரம் பணத்திற்காகவும் தமிழ் இனத்தை அளிக்க துணை போன கருணாநிதியை நீங்கள் எத்தனை வடிவில் திரித்து எழுதினாலும் இந்த வரலாறு மாறாது .

8 கருத்துக்கள்:

சக்தி கல்வி மையம் said...

நல்ல அலசல்..

Suresh Kumar said...

நன்றி கருன்

ராஜேஷ், திருச்சி said...

FULL OF REEL

Suresh Kumar said...

ராஜேஷ், திருச்சி said...

FULL OF REEL
/////////////////

மேலே சொல்ல பட்ட கடிதம் சம்பந்த பட்ட அனைத்து தமிழ்நாடு சட்ட மன்றத்தில் மதிமுகவினால் பதிவு செய்ய பட்ட தகவல்கள் தான் . கலைஞரே மறுக்காத போது உங்களுக்கு மட்டும் எப்படி ரீல் என தெரிந்தது

Ramesh said...

Nice explanation

Unknown said...

ஆனித்தரமான எடுத்துரைப்புகள்

வின்னர் said...

சிலர் சிங்களர்களுக்கு கைக்கூலியாக மாறி விடுதலை புலிகளையும் தமிழ் ஈழத்தையும் சமரசமின்றி ஆதரிக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் போலியாக வரலாறுகளை திரித்து எழுதும் நிகழ்வுகளை போன்றது தான் இந்த தமிழ் லீடர் கட்டுரையும் .

கட்டுரைக்கும் தலைப்பிற்கும் சம்மந்தம் இல்லாமல் திரிசூலம் என்றல சிவகாசி என எழுதுபவர்களை என்ன சொல்ல . கருணாநிதிக்கு எப்படி எழுதி செம்பு தூக்கணும் என்றே தெரியவில்லை . வேற என்ன சொல்ல

சுரேஷ் உங்கள் விளக்கம் அருமை ........

ராஜ நடராஜன் said...

//அன்று மட்டும் கலைஞர் பதவியை விட தமிழ் இனம் முக்கியம் என்று நினைத்திருந்தால் தமிழ் இனம் கலைஞர் வாழும் வரை கலைஞரை மெஜாரிட்டி அரசாக வைத்திருக்குமே . ஏன் செய்யவில்லை? முடிந்தும் செய்யாமல் ஏன் விட்டார் . பதவிக்காகவும் ஸ்பெக்ட்ரம் பணத்திற்காகவும் தமிழ் இனத்தை அளிக்க துணை போன கருணாநிதியை நீங்கள் எத்தனை வடிவில் திரித்து எழுதினாலும் இந்த வரலாறு மாறாது . //

கருணாநிதி குறித்த ஏனைய விமர்சனங்கள் நாட்கணக்கில் மாறிவிடும்.ஈழம் குறித்த கருணாநிதியின் நிலைப்பாடு வரலாற்றுத் தவறாகவும் மாறாத வடுவாகவும் தமிழகத்தின் இயலாமையாகவும் மாறி விட்டது.

கருணாநிதி மீதான மொத்த கோபத்துக்கும் காரணம் ஈழ இனப்படுகொலை.இல்லையெனில் தமிழர்கள் மன்னிக்கவும்,மறக்கவும் கூடிய குணமுடையவர்களாகவும் 2011 சட்டமன்றத் தேர்தல் இன்னுமொரு முதல்வர் சந்தர்ப்பத்தை இயல்பாக வழங்கியிருக்கும்.

Post a Comment

Send your Status to your Facebook