இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts
Thursday
மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
வைகோ,
ஜெயலலிதா
எழுதிய நேரம்
Thursday, May 10, 2012
18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார்
என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா
திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர்
முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.
பால் விலையை
ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத்
திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப்
பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை
ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில்
இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர
மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை.
'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில்
வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார்.
பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.
திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை
பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''
'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''
''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை
முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே
அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை
முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?
தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது
விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட
கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது
பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து
வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும்
கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''
''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''
''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’
என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது
பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி
செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது,
அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள்
பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது
கவனிக்கத் தக்கது.''
''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''
''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால்,
மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத
மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின்
எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு
வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும்
மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச்
சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின்
எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று
பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச்
செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி
கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது,
அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை
உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார்
முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால்,
அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர்
குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.
இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை
பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும்
கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல்
திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள்,
காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின்
வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத்
தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.
மூன்றாவது... சாராயக்
கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது
கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய்,
பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த
பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே
உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது.
தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம்
இவர்கள் இருவரையும் சபிக்கும்!''
''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''
''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை
காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத்
தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார்.
80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம்
'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே
கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை
மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல.
வெறும் ஷோ!
யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை
பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால்
நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது
கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை
மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு
இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம்
பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில்
அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப்
பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது
இயல்பானது.
நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009
காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம்.
இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன்
சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல்
கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால்,
2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை
குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.
தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார்.
ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார்.
இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் -
சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால்
பரிகாரம் காணவே முடியாது.
தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை
சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம்
எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''
''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''
''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?
கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும்
ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத
ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள்
நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை -
இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத்
தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது.
திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை
திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும்
கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக்
குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய
நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை.
பரிதாபப்படுகிறேன்.
எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும்
பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை
அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு
ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''
''அ.தி.மு.க.,
தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை
இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''
''இரண்டு
கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி
அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த
முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில்
இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.
இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய
இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய
வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து
உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால்,
பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''
''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு
இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு
வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''
''எங்களை எதிர்த்து நின்ற
மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு
பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''
''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''
''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை
கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத்
தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது
ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய
முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப்
பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
நன்றி :ஆனந்த விகடன்
Saturday
தமிழகத்திலேயே ஏழ்மையான குடும்பம் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் !
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
சொத்து விபரம்,
திமுக
எழுதிய நேரம்
Saturday, August 06, 2011
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்துவிட்டார் என்கிறார்கள்.
''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
- வேல்ஸ்
-ஜூனியர் விகடன்
தலை சுத்துதா ..........................?
Tuesday
வரலாற்றை மாற்றி பதிவு செய்யும் தமிழ் லீடர்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
தமிழ் ஈழம்,
வைகோ
எழுதிய நேரம்
Tuesday, March 29, 2011
தமிழ் லீடர் என்ற இணையத்தில் ஒரு கவர்ச்சிகரமாக பெயரிட பட்ட ஒரு கட்டுரையை பார்த்தேன். அந்த தலைப்பிற்கும் கட்டுரைக்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் எழுத பட்டிருக்கிறது. கட்டுரையின் தலைப்பு "ஈழம் அழிந்து போனதுக்கு வைகோ காரணம்!" ஆனால் கட்டுரை வைகோவின் வாழ்க்கை வரலாறாக வருகிறது.
ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத பட்ட கட்டுரையாகவும் இருக்கலாம் . அல்லது தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை உருவாக்கும் நோக்கத்திலும் இப்படி தலைப்பு வைத்திருக்கலாம் . பொதுவாக இல்லத்திற்கு எதிரானவர்கள் முதலில் கை வைப்பது யார் ஈழம் விடுதலை புலிகள் இந்த கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் . அதன் மூலம் அவர்களை செல்வாக்கற்றவர்களாக மாற்ற வேண்டும் . அந்த நோக்கத்தில் கூட சில இணையங்கள் கட்டுரைகள் எழுதுகின்றன.
அதில் தெரிவிக்க பட்டுள்ள சில பகுதிகள் "1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்."
இவ்வாறு கட்டுரையாளர் தெரிவித்துள்ளார் . இதில் பல உண்மைகள் மறைக்க பட்டுள்ளது. வைகோ கலைஞருக்கு தெரியாமல் கள்ள தோணி மூலம் ஈழம் சென்றது உண்மை தான் . வைகோ செல்லும் முன்னர் தன்னுடைய நண்பரிடம் ஈழம் செல்லும் பயணம் குறித்த பல பக்கங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்து கலைஞரிடம் நான் போன பின்னர் கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்து விட்டு சென்றார் . அதை அந்த நண்பரும் கொடுத்தார் .
கலைஞர் வைகோ வரும் வரை பயணத்தை வெளியிடாமல் இருந்தார் என குறிப்பிட பட்டுள்ளது தவறான தகவல். வைகோ கடிதத்தில் நான் ஈழம் செல்கிறேன் , அங்கு செல்வதால் என் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்து கட்சிக்கு என்னால் கெட்ட பெயர் உருவாகிற சூழ்நிலை வந்தால் இந்த கடிதத்தை வெளியிடுங்கள் . அப்போது கட்சிக்கும் என்னுடைய பயணத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நாட்டிற்கு தெரியும் இவ்வாறு வைகோ கடிதத்தில் எழுதியிருந்தார் . ஆனால் வைகோ திரும்பி வரும் முன்னால் கடிதம் கலைஞர் கையில் கிடைத்தவுடன் வெளியிட்டு கட்சிக்கும் வைகோ சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்து கொண்டவர் தான் .
அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.
இந்த பகுதியிலும் வரலாறு திரிக்க பட்டுள்ளது . திமுக தலைவர் கருணாநிதியால் வைகோவை கட்சியிலிருந்து மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வர பட்டத்து . ஆனால் பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அந்த தீர்மானம் தோற்கடிக்க பட்டது இது தான் உண்மை . பின்னர் வைராக்கியத்தோடு போலியாக ஒரு உளவு துறை தகவலை காட்டி செயற்குழு மூலமாக வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் . அந்த தருணம் என்பது வைகோவை கட்சியை விட்டு நீக்கியது மட்டுமல்ல . கருணாநிதியை விடுதலை புலிகள் மூலமாக வைகோ கொலை செய்ய பார்கிறார் என்ற பொய்யால் விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி படுத்தும் விதமாக கருணாநிதி செயல் பட்டார் என்பது தான் உண்மை .
இந்த கட்டுரை எதற்காக எழுத பட்டுள்ளது என்பதன் நோக்கம் கடைசியில் நமக்கு சரியாக தெரிய வருகிறது . தமிழின துரோகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடியுமா என நினைப்பது தெரிகிறது ..... அந்த வரிகள் .......
காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?
"ஒரே ஒரு காரணம்.
தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.
ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்."
திமுக மைனாரிட்டி அரசாக இருந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சியை கருணாநிதியால் மிரட்ட முடியவில்லையாம் . இதை சின்ன பிள்ளைகளிடம் கேட்டால் கூட சொல்லுமே 1 ,76 ,௦௦௦௦ கோடி பணத்திற்காக ஒரு இனத்தையே கருவறுத்தார் கருணாநிதி என்று . இதே திமுக மைனாரிட்டியாக இருந்த போது தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் மைனாரிட்டியாக இருந்தது . அந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்வார்கள் என்று தீர்மானம் போட்டது என்ன வாயிற்று . அந்த தீர்மானம் போட்டவுடன் எல்லோருமே கருணாநிதியை புகழ்ந்தோமே (இப்போ திருமாவளவன் , வீரமணி நம்பி புகழ்ந்த மாதிரி ) ஆனால் எட்டு கோடி மக்களுக்கும் அல்வா தந்தாரே .
அன்று மட்டும் கலைஞர் பதவியை விட தமிழ் இனம் முக்கியம் என்று நினைத்திருந்தால் தமிழ் இனம் கலைஞர் வாழும் வரை கலைஞரை மெஜாரிட்டி அரசாக வைத்திருக்குமே . ஏன் செய்யவில்லை? முடிந்தும் செய்யாமல் ஏன் விட்டார் . பதவிக்காகவும் ஸ்பெக்ட்ரம் பணத்திற்காகவும் தமிழ் இனத்தை அளிக்க துணை போன கருணாநிதியை நீங்கள் எத்தனை வடிவில் திரித்து எழுதினாலும் இந்த வரலாறு மாறாது .
Monday
யார் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
கருணாநிதி,
திமுக,
ராஜா,
ஸ்பெக்ட்ரம் ஊழல்
எழுதிய நேரம்
Monday, November 15, 2010
ராஜாவா ? மன்மோகன் சிங் ? சோனியா? கருணாநிதி? கனிமொழி? யார் தான் குற்றவாளி . ஒரு குற்றம் நடந்தால் அதில் குற்றவாளி யார் என விசாரித்தால் பலரும் குற்றத்தில் சம்மந்த பட்டிருப்பார்கள் . இன்று இந்தியாவையை அதிர வைத்திருக்கும் ஊழல் தான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் . ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய ஊழல் இது தான் என்றும் சொல்லுகிறார்கள் . உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடு இந்தியாவில் தான் இப்படி நடக்கும் .
இந்தியா இதுவரை பல ஊழல் வாதிகளை கண்டிருக்கிறது . ஆனால் இது மிக பெரிய ஊழல் என்றே கணக்கிட படுகிறது . இப்படி ஒரு ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடனே முதன் முதலில் மாறன சகோதரர்களின் மீடியாக்களில் தான் பிரபலமாக ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்க பட்டது . இது ஒரு பூதாகரமாக அமைந்து விடுமோ என எண்ணிய கலைஞர் மாறன சகோதரர்களிடம் மண்டியிட்டது வேறு . மாறன சகோதரர்களை அமுக்கி விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என கணக்கு போட்ட கருணாநிதிக்கு மக்கள் விளிப்புனர்வாலும் மற்ற ஊடகங்களாலும் மத்திய கணக்கு அதிகாரிகள் மூலமாகவும் மீண்டும் பிரச்னை வந்தது . எதிர்கட்சிகள் ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் . ராஜா மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினர் . பின்னர் ஒரு வழியா ராஜா ராஜினமா செய்வதாக அறிவிக்க பட்டது .
ஆனால் உண்மையில் யார் குற்றவாளி? ராஜா மட்டும் தானா? கிடையாது ராஜா பலிக்கு கொடுக்க பட்ட ஆடு மட்டும் தான் . இத்தனை கோடிகளையும் ராஜா சுருட்டியிருப்பார் என நினைத்தால் அது தான் தவறு . இந்திய அரசியல் கேளிகூத்தாட படும் போது இவ்வாறு ஊழல்கள் இருக்க தான் செய்யும் . கூட்டணி ஆட்சியை உண்மையான கூட்டாட்சி என்று ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் தாங்கள் கையில் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் . அதற்கு பணம் ஒன்றே போதும் என்ற குறிக்கோள்களில் தான் இந்த கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன . ஊழலை தண்டிக்க சரியான சட்டங்கள் இல்லாததால் தான் இந்த நிலை . அப்படி ஒரு சரியான சட்டங்கள் எந்த அரசியல் நிற்பந்தங்களுக்கும் பணியாமல் இருந்திருந்தால் இன்று கருணாநிதியால் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது .
தமிழகத்திலேயே முதன் முதலாக ஒரு ஊழல் ஆட்சியை கொடுத்தவர் தான் இப்போதைய முதல்வர். அப்போதைய சர்க்காரிய கமிசன் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ய பட்டுள்ளது என அறிக்கை அளித்தது . அரசியலுக்காக அந்த வழக்குகள் தள்ளுபடி செய்ய பட்டது எல்லாம் முடிந்து போன கதை . அந்த தைரியத்தில் தான் இவர்களால் துணிந்து ஊழல் செய்ய முடிகிறது .
இந்த மிக பெரிய ஊழலில்காங்கிரஸ் கட்சிக்கு பலன் இருந்ததாகவும் சொல்ல படுகிறது . அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆற்று வெள்ளம போல் பணம் இறக்க பட்டது . ஆனால் இதில் மிக பெரிய பலன் அடைந்தது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் ஊழலில் கிடைத்த லாப பணத்தை ராஜா ஒருவர் கொண்டு போக முடியாது . ராஜாவுக்கு இந்த ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு கருணாநிதிக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இருக்கிறது . கருணாநிதியால் மட்டுமே இத்தனை கோடிக்கு ஊழல் செய்ய சிந்திக்க முடியும் . ராஜா ஒருவரால் இது முடியாது . இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக பார்த்தால் கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் கடைசியில் பல்கடாக்கப்பட்டார் ராஜா .
சிலருடைய வாதங்கள் இது அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தானே தவிர ராஜா ஊழல் செய்ததாக எங்கேயும் சொல்லவில்லை . அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இத்தனை கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை விட இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியது . திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட பலன் தான் ஊழல் . இந்த ஊழலில் ராஜாவை மட்டும் பலி ஆடு ஆக்காமல் தீர விசாரித்து ஊழல் செய்து அரசுக்கு இழப்பு எற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் . இது தான் அனைவருடைய விருப்பம் .
Thursday
இளங்கோவனை பார்த்து பயந்தார்களா ? கருணாநிதி கும்பல்

இந்தியாவிலே ஊழலில் முதலிடத்தில் இருப்பது கருணாநிதி தலைமையிலான திமுக தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை . முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆய்வு பணிக்கு அனுமதி கொடுக்கும் வரை கண்டு கொள்ளாமல் ( தெரியாமலிருந்திருக்குமோ ) இருந்து விட்டு எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னர் வேண்டா வெறுப்பாக உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்து வழக்கை வாதாட தெரியாமல் தமிழகத்திற்கு பாதகமான இடைக்கால தீர்ப்பை வாங்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும் .
மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆடிய நாடகம் தான் மதுரையில் நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை எதிர்த்து கண்டன கூட்டம் என அவசர கோலத்தில் பின் விளைவுகளை பற்றி அறியாமல் அறிவித்தார் . முசோலினி வம்சா வழியில் வந்த சோனியா விடுவாரா கடந்த முறை கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த ஸ்பெக்த்ராம் ஊழலை தோண்ட முடிவெடுத்து தடா புடலாக cpi ராஜாவின் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியது . 22000 கோடி ருபாய் அளவிற்கு ராஜா அமைச்சரவையின் கீழ் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்ய பட்டது .
இதை பார்த்த திமுக கொள்ளை கும்பல் பயந்து போனது வண்டவாளம் எல்லாம் வெளியில் வரும் என நினைத்து . இதனிடையே போதுக்கூட்ட்டத்தில் பேசிய தமிழ் விரோதி இளங்கோவன் திமுகவின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினார் . இதை எதிர் பார்க்காத திமுக கூட்டம் அவசர அவசரமாக கண்டன கூட்டம் நடை பெறாது என்றது .
இப்படி தான் நாடகமாடி சோனியாவுக்கு பல்லாக்கு தூக்கி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஈழத்திலே சாவதற்கு காரணமாகி போனார் கருணாநிதி . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலே காங்கிரஸ் கட்சிக்காக அந்த திட்டத்தையே கானல் நீராக்கி மூன்று மாவட்ட மக்களின் குடிநீரில் உலை வைத்தார் . இப்போது 22000 கோடி பணத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக செயல் படுகிறார் .
தமிழகத்தின் இயற்கை துறைமுகமான குளச்சலில் துறைமுகம் ஏற்படுத்த மக்கள் விடுத்த கோரிக்கை கூட காற்றில் பறந்து கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது .
இப்படியே நாள் முழுக்க சிந்த்தித்து தன் குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கிய கருணாநிதிக்கு தமிழர்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறார்களோ . முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா முதல்வர் அச்சுதானந்தன் பாராட்ட வேண்டிய அளவிற்கு கருணாநிதி நடக்கிறார் என்பது கேரளா மாநில மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் .
இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................
Subscribe to:
Posts (Atom)






