Wednesday

மங்காத்தா - திரை விமர்ச்சனம்

தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தவறு செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு சேர வேண்டிய பணத்தை தாங்களே சுருட்டி கொள்வது தான் மங்காத்தா கதை. 


 அஜித்தின் 50 வது படமான மங்காத்தா இன்று திரைக்கு வந்துள்ளது . அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைக்கு வந்திருக்கிறது.  வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளார். முக.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தமிழ் நாடு முழுவதும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. 

போலிஸ் வேடத்தில் என்ட்ரி கொடுக்கும் அஜித் பின்னர் படம் முழுக்க வில்லன் போலவே வந்து முடிவில் ஹீரோவாக மாறுகிறார். மற்றொரு நடிகரான அர்ஜுன் படம் முழுக்க போலிஸ் அதிகாரியாக வந்து கடைசியில் காவல் துறையையை எமாற்றுபவராக மாறி விடுகிறார்.  நாயகியாகிய திரிஷா இரண்டாம் பாதியில் காணாமல் போய் விடுகிறார். 

திரைகதை கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து துவங்கி அதன் மூலம் வரும் பணத்தை யார் கைப்பற்றுவது என்பதாக கதை நகருகிறது. நகைச்சுவையாகவும் மசாலா படமாக இருக்கிறது. கதை என்று சொல்லும் அளவிற்கு எந்த கதையும் இல்லை படம் முழுக்க பணம் (Money) பணம் (Money) பணம் (Money)      என்றே இருக்கிறது. இன்னொரு நடிகையான லெட்சுமி ராய் துவக்கத்திலும் கடைசியிலும் வருகிறார். 


அஜித்திடம் உங்கள் வயது என்ன என்று கேட்ட போது சளைக்காமல் உண்மையான வயதை சொன்னது அஜித்தை வித்தியாசபடுத்தி காட்டியது. விளையாடு மங்காத்தா பாடல் ரசிகர்களை உற்சாக படவைக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு கொண்டே இருக்கலாம்.   

மங்காத்தா "மச்சி ஓபன் தி பாட்டல்"  





ஐயோ இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ........  தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறன் வெளியீட்டில் வந்ததாலோ என்னவோ தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பணத்தை அமுக்கி கொள்வது போல் படம் அமையுது. வெங்கட் பிரபு 2Gயை நினத்து தான் ..............எடுத்தாரோ ?    

1 கருத்துக்கள்:

N.H. Narasimma Prasad said...

Ajith Always Rocks. Thala Pola Varuma?

Post a Comment

Send your Status to your Facebook