சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 7 ஆம் அறிவு படத்தின்வேறுபட்ட பார்வையிலான விமர்ச்சனம்.
சினிமாவை பொழுது போக்காக பார்ப்பவர்களுக்கு பொழுது போக்காகவும், சூர்யாவுக்காக பார்பவர்களுக்கு கொஞ்சம் வித்தியாச படமாகவும் வெளி வந்துள்ளது இந்த படம். கமல் ஹாசனின் மகள் சுருதி இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
1600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து சைனாவுக்கு சென்ற போதி தர்மரால் சைனாவில் லட்ச கணக்கான மக்கள் சாக காரணமாக இருந்த மர்ம நோயை போதி தர்மர் குணப்படுத்துவோதொடு அந்த மக்களுக்கும் அதை சொல்லி கொடுக்கிறார் . அதே போல் மனிதர்களால் வந்த ஆபத்தை தன்னுடைய தற்காப்பு கலை மூலம் தடுத்து இன்று சைனாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த குங்க்பு கலையை சைனர்களுக்கு கற்று கொடுக்கிறார் போதி தர்மர் .
இதில் முக்கியமாக சொல்லப்பட்டது போதி தர்மர் ஒரு தமிழர். போதி தர்மர் மீண்டும் தமிழகத்திற்கே திரும்ப முயற்சித்த போது அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கிறார்கள் . விஷம் கலந்திருக்கிறது என்றும் தெரிந்தும் அந்த மக்களின் விருப்பத்திற்கிணங்க தன் உடல் அந்த மண்ணில் அடக்கம் செய்யட்டும் என விசத்தை உண்டு மாண்டு போகிறார் . அந்த போதி தர்மரை சீனர்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவியாகிய சுருதி போதி தர்மரை பற்றியும் தமிழனின் பெருமைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார் . போதி தருமரின் மரபணு கொண்டவர் தான் சூர்யா . சூர்யாவுக்கே தெரியாமல் சூர்யாவை தன் ஆய்வுக்கு பயன் படுத்துகிறார் சுருதி . இந்த நிலையில் சைனா இந்தியாவை தன் வசப்படுத்த ஆறாம் நூற்றாண்டில் சைனாவில் அழிவை ஏற்படுத்திய விச கிருமியை தமிழ் நாட்டில் பரப்ப முனைகிறது . அதே நேரம் போதி தர்மரை ஆய்வின் மூலம் தட்டி எழுப்பி விட கூடாது என நினைத்து ஆய்வு செய்த சுருதியையும், போதி தருமரின் வம்சா வழியான சூர்யாவையும் கொல்லவும் விசா கிருமியை பரப்பவும் எல்லா கலைகளையும் தெரிந்த ஒருவரை இந்தியாவுக்கு சைனா அனுப்பி வைக்கிறது .
எல்லா படத்திலும் வருவது போல் துரோகியாக இங்கேயும் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா எப்படி போதி தர்மராக மாறுகிறார் எப்படி அந்த விச கிருமிகளிடம் இருந்து மக்களை மீட்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை .
படத்தின் நாகயன் சூர்யாவை விட தமிழர்கள் அனைவருக்கும் நாயகனாக இயக்குனர் முருகதாஸ் தெரிகிறார் . தன் மனதின் ஆழத்தில் இருந்த வேதனையை வசனங்கள் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார்.
"இலங்கையில் தமிழர்களை அழித்து விட்டு இங்கேயும் வந்திருக்கிறான்'
வீரம் வீரம் என்று சொல்லியே பக்கத்து நாட்டில் மக்கள் சாகடிக்க பட்டார்களே என்று சுருதி சொல்லும் போது . அது வீரம் அல்ல "9 நாடுகள் சேர்ந்து செய்த துரோகத்தால் தமிழன் கொல்லப்பட்டான்" என்று சூர்யா சொல்லும் போது ஒவ்வெருவருடைய உணர்வுகளும் தட்டி எழுப்பியது போல் இருந்தது . இந்த வசனத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம் .
"கலைக்காக மக்கள் இல்லை மக்களுக்காக தான் கலை " என்று தாமரை பேசியது தான் நினைவுக்கு வந்தது . தமிழன் என்று பெருமை பட்டு கொள்ளும் வகையில் வசனங்கள் எடுக்க பட்டுள்ளது .
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மக்கள் வெறுமனே 800 ஆண்டுகளில் வந்த ஆங்கிலம் பேசுவதை பெருமையாகவும் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தமிழை பேச வெட்க படுபவர்களுக்கு சரியான சவுக்கடி வசனம் இடம் பெற்றது வரவேற்க தக்கது .
மசாலா படமாக எடுத்தது தமிழ் உணர்வை ஊட்ட முடியும் என்று சாதித்து காட்டிய முருகதாஸ் வழியில் மற்ற கலைஞர்களும் துணிந்து தமிழ் உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்ப முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே"
- என்ற பாடல் வரிகள் தமிழர்களின் நம்பிக்கையை கூட்டுகிறது.
இந்த பாடலை நக்கீரன் இணையதளம் ஈழ போராட்ட காட்சிகளோடு வெளியிட்டிருக்கிறது
மொத்தத்தில் குடுத்த காசுக்கு நம்பி பார்க்கலாம் .
7 ஆம் அறிவை காட்டியதோ இல்லையோ தமிழர்களின் ஆறாம் அறிவை தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை ............
5 கருத்துக்கள்:
நல்ல விமர்சனம் சுரேஷ்... நீங்கள் பதிவு செய்ததை போலவே நானும் உணர்ந்தேன்... ஒவ்வரு தமிழனும் திரையரங்கில் போய் பார்க்க வேண்டிய படம்..
Hats off to AR M & Team
நன்றி அண்ணே உங்கள் கருத்திற்கு . தமிழ் உணர்வை தட்டி எழுப்பிய இந்த படம் வெற்றியடைவதன் மூலம் மேலும் பல இயக்குனர்கள் தமிழ் உணர்வோடு படம் எடுப்பார்கள்
போதிதர்மரை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையோடு போதி தர்மர் பற்றி திரைப்படமெடுக்க முன் வந்த முருகதாஸின் முயற்சிக்கு எனது வந்தனங்கள். வேறு யாராவது எடுத்திருந்தால்கூட போதிதர்மர் இந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ரீச் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் முருகதாஸ் வணக்கத்துக்குரியவர்..!
போகி பண்டிகை மூலம் தமிழர்களின் ஓலை சுவடிகளை அழித்தமை,,,பார்பனர்கள் எப்போதுமே தமிழனை உயர விட மாட்டார்கள் என்பதை ரங்கராஜன் என்கிற பார்பன பெயரைக் கொண்ட ஒரு பேராசிரியர் மூலம் காட்டியமை ,,இவை எல்லாவற்றையும் விட போதிதர்மனை தமிழர் மனதில் பதித்தமை ,,போன்ற காரணங்களுக்காக இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் ....அப்போது தான் இது போன்ற படங்களை எடுக்க மற்ற இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தைரியம் வரும்
ஏன் எதிர்க்கவேண்டும் ‘ஏழாம் அறிவை’ ?
http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post_551.html
தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு ?
http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post.html
‘’காசுக்கு புடிச்ச கேடு இந்த தண்ட கருமாந்திரத்தையெல்லாம் பாத்து தொலைக்க வேண்டியிருக்கிறது’’ என எனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த பீதி தருமரை தட்டி எழுப்பிய பெருமைக்காக முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!
http://www.athishaonline.com/2011/10/blog-post_28.html
Post a Comment