Thursday

ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

மலர் - மோடி தமிழகத்தில் வைகோவின் பேச்சை கேட்கிறார் என எழுதுகிறான்...,

விகடன் - வைகோ பற்றி அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சி வழியும் நக்கல் வீடியோ போடுகிறான்..,

இந்து - சமஸ் போன்ற வெங்காய பஜ்ஜி சமையல்காரர்களை வைத்து வைகோ எதிர்ப்பு கட்டுரைகளாக போடுகிறான்...,

இதிலிருந்து என்ன உணர்கிறீர்கள்?

தினமலரை பாராட்ட வேண்டிய தேவையுமில்லை..,
விகடனையும், இந்துவையும் திட்ட வேண்டிய தேவையுமில்லை..,
ஆம்.., இந்த பத்திரிக்கைகள் மட்டுமல்ல இன்னும் சில பத்திரிக்கைகளுக்கும் தரப்பட்டுள்ள ப்ராக்ஜெட் அசைன்ட்மென்ட் படியே அவர்கள் நகர்கிறார்கள்.

தினமலரும், விகடனும், இந்துவும் தமது
காரியத்தை கச்சிதமாக பார்க்கிறார்கள்!!!

அதிமுக தற்போதைய சூழலால் ஒருவேளை பல குழப்பங்கள் ஏற்பட்டு, பலவீனமானால் இங்கே வைகோ கவனிக்கப்பட வேண்டிய திராவிட இயக்க தலைமையாகி விடக்கூடாது என்பதே இந்த ஊடக விற்பன்னர்களின் நோக்கம்.

அதாவது, கலைஞர், ஜெயா அடுத்து ஸ்டாலின் என்பதோடு இங்கே முடிந்துவிட வேண்டும் என்பதே உள்ளூர் வியாபாரிகள் மற்றும் இங்கே வலுப்பெற துடிக்கும் சில பல தேசிய வியாதி கட்சிகளின் ஆவல்.

திராவிட இயக்கத்தில் ஸ்டாலின் வலுப்பெறுவதில் இந்த விற்பன்னர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஒருவேளை ஸ்டாலின் அதிகார பீடம் ஏறினாலும் திராவிட கொள்கையென எதையும் அவர் தூக்கி சுமக்க மாட்டார், சுமக்கவும் தெரியாது என்பதோடு அவர் கலைஞரை போல் இவர்களுக்கு பாகற்காயாக இருக்க மாட்டார். ஸ்டாலினை நாணலை போல் வளைப்பது எளிது என்பதும் அவர்களுக்கு தெரியும். கூடவே, கலைஞர் போல் ஸ்டாலின் புத்திசாலி இல்லை என்பதும், ஸ்டாலின் பெரிய வீட்டில் பிறந்த சவலை பிள்ளை என்பதையும் அறிந்தே வைத்துள்ளது, தினமலரும், விகடனும், மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு குழுமமும். இவற்றோடு ஸ்டாலினுக்கு, சங்கர மடத்தின் ஆசியும், சூனா சாமியின் அருளும் தீர்க்கமாக கிட்டும் என்பதும் அவர்களின் கூடுதல் கணக்கு.

ஆனால், மேற்சொன்ன எவையும் ஸ்டாலின் இடத்தில் வைகோ இருந்தால் நடைபெறாது என்பதையும் இந்த விற்பன்னர்கள் மிக ஆழமாக உணர்ந்துள்ளனர். ஆதலால், இந்த சந்தர்ப்பத்தில் வைகோ வலுப்பெற்றால் அது திராவிட இயக்க கொள்கைகள், மாநில உரிமைகளை காப்பது போன்ற அழுத்தங்கள் இன்னும் நீட்சி பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதே அவர்களின் பெரும் அச்சம். ஆதலால் தான், வைகோவை அடுத்த திராவிட இயக்கத்தின் வலுவான தலைமையாக உருவெடுக்க விடாமல் பல காலமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கும் பல சதிகளில் தற்போது நடப்பவைகளும் ஒன்று. கருப்பு துண்டு போட்ட வைகோவை எந்த இந்துத்துவ வாதி ஏற்பான்? ஆனால், திராவிட இயக்கத்தை விரும்புவர்களிடத்தில் வைகோ மீதான பல்வேறு குழப்பமான செய்திகளை சொல்வதின் மூலம் வைகோவை வெறுக்க வைக்கலாம் தானே? இதுதான் அவர்களுக்கு தேவை!!! பாஜகவிற்காக வைகோ பேசுகிறார் என்கிற பிம்பத்தை காட்டிட தான் ஊடக விற்பன்னர்கள் முயல்கிறார்கள். ஆனால், வைகோவை இந்த விற்பன்னர்கள் ஒருபோதும் மனதார ஏற்க மாட்டார்கள்.

எண்ணிக்கையில் குறைவானவர்கள், தாங்கள் நேரடி போருக்கு செல்லகூடாது என்பதால், புத்திசாலிகளை தங்கள் நண்பர்களை போல் உடன்வைத்து அவர்களை வலுபெறாமல் செய்வதோடு, மாறாக முட்டாள் எதிரியை பலசாலியை போல் இல்லாத்தை உருவாக்கி காண்பித்து அவர்களை ஆளவிட்டு திரைமறைவில் இவர்கள் அந்த முட்டாளை முழுமையாக ஆட்டுவிப்பார்கள்.

அதிகாரமில்லா புத்திசாலி....,
அதிகாரமிக்க முட்டாள்..,

விற்பன்னர்களின் தேர்வு ஒருநாளும் முந்தையதாக இருக்காது!!! ஆம்.., சோழியன் குடுமி எந்நாளும் சும்மா ஆடாது!!!

தாயகம் சுரேஷ் 

1 கருத்துக்கள்:

Anonymous said...

கோடிகளில் கொள்ளை அடித்த கோமாளி ...

Post a Comment

Send your Status to your Facebook