Saturday

தமிழின வலி உனக்கு கேலிகூத்தா மத்திய அரசே ?

உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழின அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்டுவருகிறது. ஆறு லட்சம் மக்கள் இன்று சாவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றனர்.

முல்லை தீவில் விடுதலை புலிகள் முடங்கி போயுள்ளனர் என்று விடுதலை புலிகளுக்கு எதிராக தான் போர் செய்கிறோம் என்று தினம் தினம் அப்பாவி மக்கள் மீது குண்டு போட்டு கொலை செய்து வருகிறது சிங்கள அரசு. பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரவேல் குண்டுகளை பொழிகிறது தெரிந்த உன் கண்களுக்கு ஏன் எங்கள் தமிழினத்தின் மீது சர்வதேச விதிமுறைகளுக்கு மீறி குண்டு போடும் சிங்கள அரசை கண்ணுக்கு தெரியவில்லை .

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த போது பொங்கி எழுந்த உனக்கு , எங்கள் அப்பாவி மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு தள்ளப்பட்டபோது ஏனோ உன் கண்களுக்கு தெரியவில்லை .

அத்துமீறி தமிழர் தேசத்தின் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்திய போது எங்கள் தாயகம் இருக்கும் இந்தியாவை நோக்கி உங்கள் உதவியை கேட்டபோது ஏனோ நீ செவி சாய்க்கவில்லை . ஈழ தமிழர்களுக்காக ஒட்டு மொத்த தமிழகமும் எழுச்சி கொண்டு கேட்ட போதும் ஏனோ நீ மௌனமாகவே இருந்தாய் .

இலங்கை நீ இருக்கிறாய் என்ற தைரியத்தில் தானே போரை நடத்தி தமிழர்களை கொலை செய்கிறது. எங்கள் தமிழனை கொலை செய்து அதில் மகிழ்ச்சி கொண்டு ஆட்டம் போடும் சிங்களனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் மத்திய அரசே ?. போராளியாக இருந்தாலும் தமிழ் பண்பாட்டில் பிறந்த ஒரு பெண் போராளியின் இறந்த உடலை ரசித்த சிங்கள ராணுவத்துக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் மத்திய அரசே ? பெண்ணை தெய்வமாக நினைக்கும் நம்மால் எப்படி பொறுக்க முடியும் .

மனித உரிமை ஆணையமெல்லாம் என்ன பார்வையளவில் தானா ? இலங்கை என்ன உனக்கு முதலாளியா ? நூறு கோடி மக்களை கொண்ட இந்தியாவை இலங்கை மதிக்காதா? இல்லை இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நீ தான் நடத்துகிறாயா ?

மத்திய காங்கிரஸ் அரசை நம்பி இந்தியாவில் இருக்கும் ஆறு கோடி தமிழர்களே நிம்மதியாக வாழ முடியாமலிருக்கிறோம். எங்கள் அண்டை மாநிலங்களெல்லாம் நியாயமாக வரவேண்டிய தண்ணீரை கூட தடுத்து வைக்கிறது. அதை கூட உன்னால் தமிழனுக்கு பெற்று தரமுடியவில்லை. ஏனோ தெரியவில்லை எங்கள் தலைவர்களும் உன்னை போலவே அமைந்து விட்டார்கள் .


என்ன பாவம் செய்தது பிறந்தே இரண்டு ஆண்டுகளான பச்சிளம் குழந்தைகள். குறைந்தது ஒருநாள் இரண்டு குழந்தைகளை கொலை செய்கிறதே சிங்கள அரசு. இதைதான் அவனும் சொல்கிறான் இரண்டு விடுதலை புலிகளை கொலை செய்தோமென்று . உனக்கு தெரியாதா அது குழந்தை என்று ஏன் இன்னும் மௌனம். ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்து விட்டால் நீ நிம்மதியாக இருக்கலாமென்று நினைக்கிறாயா ?

எத்தனையோ போராட்டங்கள் போராடி விட்டோம் கடைசியாக தமிழினத்துக்காக ஒரு துடிப்புமிக்க தலைவன் திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார். திலிபனை போன்று தமிழன் தானே செத்து விட்டு தான் போட்டுமே என்று உன் மௌனம் தொடர்ந்தால் . தமிழினத்தின் கோபத்தை உன்னால் தாங்க முடியாது. இனியும் நீ மௌனித்தால் தமிழினம் மௌனம் காக்காது.

தமிழர் பிணத்தை பார்த்து மகிழ்ந்து போதும் மத்திய காங்கிரஸ் அரசே! விரைந்து செயல் படு ஆறு லட்சம் தமிழர் உயிரை காத்திடு .

1 கருத்துக்கள்:

Anonymous said...

தமிழர்கள் மீது சவாரி செய்து கொண்டே,தமிழர்களிடம் பொய்யும் புரட்டும் செய்து வரும் காங்கிரசையும்,பழி வாங்கும் அம்மையாரையும் தமிழர்கள் அவமானப் படுத்த வேண்டும்.
அது ஒன்றுதான் அவர்களுக்குப் புரிந்த மொழி.
அவமானப் போராட்டம் தொடங்கட்டும்.

Post a Comment

Send your Status to your Facebook