இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label போராட்டங்கள். Show all posts
Showing posts with label போராட்டங்கள். Show all posts
Friday
முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு
எழுதியது
Suresh Kumar
Labels:
கேரளா,
தமிழகம்,
போராட்டங்கள்,
முல்லை பெரியாறு
எழுதிய நேரம்
Friday, December 23, 2011
தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை பெரியாறு அணையை மட்டும் கைப்பற்றி விட்டால் ஐந்து மாவட்ட மக்களின் எதிர் காலத்தையும் தலைமுறையையும் வறுமைக்கு கொண்டு செல்ல சிறிது சிறிதாக திர்ட்டமிடுகிறது கேரளம்.
மக்கள் மத்தியில் நாளை வரும் ஆபத்துக்களை அயராது தளராது விளக்கி வைகோ, அப்பாஸ் , நெடுமாறன் போன்றோர்களின் பிரச்சாரங்கள் தான் இன்று மக்களை தன்னெழுச்சியாக போராட வைத்திருக்கிறது. இன்று இளைஞர்கள் முதல் எல்லா தரப்பும் முல்லை பெரியாறு அணையை காக்க உறுதி எடுத்திருப்பதை நினைக்கும் போது தமிழகம் உணர்வினை இழந்து போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கிறது.
முல்லை பெரியாறு அணையை காக்க என் பங்கிற்கு என்ன செய்யலாம் என நினைத்தது கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோர்களுக்கு போராட்டத்தில் பங்கு பெற ஒரு வாய்ப்பு . கீழ் வரும் அலைபேசி எண்ணில் உங்களுடைய அலைபேசி மூலம் ஒரு தவறிய அழைப்பு (Missed Call )கொடுங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் சொல்லி தவறிய அழைப்பை கொடுக்க வையுங்கள் . நம் எதிர் பார்ப்பு ஒரு கோடி அழைப்புகள் இதன் மூலம் ஓட்டு மொத்த தமிழகமும் அணையை காக்க உறுதியாக இருக்கிறது என்பதை உணர்ச்சியற்ற மத்திய அரசுக்கு நம் உணர்வுகளால் தெரிவிக்க முடியும்.
செயல் படுங்கள் தோழர்களே தவறிய அழைப்பு விடுங்கள் மறந்தும் தவறிய அழைப்பு(Missed Call) விட தவறி விடாதீர்கள். காலம் தாழ்த்த வேண்டாம் இன்றே செய்வோம் இப்போதே செய்வோம் . Missed Call கொடுக்க வேண்டிய அலை பேசி எண் - 928 1000 152.
Wednesday
அத்துமீறல்: காவல்துறை மன்னிப்பு கேட்க பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தல்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
பெண்கள்,
போராட்டங்கள்
எழுதிய நேரம்
Wednesday, April 22, 2009
இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் 5 பெண்களை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, பெண்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி, நீலவேணி, பாண்டிமாதேவி, காமேஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறோம்.
Read More

இதில் 20 பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்த வேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இதுவரை தமிழக அரசோ, மத்திய அரசின் பிரதிநிதிகளோ எங்களை வந்து சந்திக்கவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவல்துறையின் அத்துமீறல்
காவல்துறையின் அத்துமீறல்
இன்று 10வது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 150 போலீசார் ஷூ கால்களுடன் உள்ளே வந்து, தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் போர்வையை விலக்கி பார்த்து, ஓவ்வொரு பெண்களின் பெயர்களை கூறி அடையாளம் கண்டுபிடிக்க முயன்றனர். எங்களை கையை பிடித்து வலுக்கட்டாயமாக மேலே தூக்கினர்.
எங்களது மொபைல்களை பறித்துக்கொண்டனர். இதனால் நாங்கள் பத்திரிகையாளர்களையோ, தமிழ் ஆர்வலர்களையோ தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டு, அரசு முத்திரை இல்லாத, தேதி குறிப்பிடாத மொட்டைக் கடிதம் போன்ற ஓர் கடிதத்தை எங்களிடம் தந்தனர். இதுகுறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்தவதாகவும், உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியே செல்லும்படியும் காவல்துறையை எச்சரித்தோம்.
உடனே அவர்கள், எங்களை கைது செய்வதாக கூறினர். நாங்கள் கழிவறைக்கு சென்றுவிட்டு, உடை மாற்றிவிட்டு வருவதாக கூறினோம். எனினும், கழிவறைக்கு சென்ற பெண்களுடன் ஆண் காவலர்கள் சென்றனர்
நாங்கள் உடைமாற்றுவதற்காக திரைச்சீலையால் ஓர் தடுப்பை ஏற்படுத்தி வைத்திருந்தோம். அந்த திரைச்சீலையை அகற்றிவிட்டு, எங்களை உடைமாற்ற முடியாமல் செய்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களிடம், "நன்றாக சாப்பிட்டீர்களா?" என்று கேட்டு அவமானப்படுத்தினர்.
போராட்டம் தொடரும்

பின்னர், தாங்கள் அழைத்து வந்திருந்த ஓர் மருத்துவரிடம், எங்கள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனை செய்யும்படி கூறினர். நாங்கள் மறுத்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள 5 பேரை கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர். யாரையெல்லாம் கைது செய்து அழைத்து செல்கிறீர்களோ அவர்களது பெயர் பட்டியலை தாருங்கள் என்று கேட்டோம். இதற்கு காவலர்கள் மறுத்தனர். இதனால் நடுரோட்டில் சுமார் 2 மணி நேரம் அவர்களுடன் போராடினோம். அதன்பின்னரே, அவர்கள் தந்த மொட்டை கடிதத்தின் பின்புறம், 5 பேரை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக எங்களிடம் எழுதித் தந்தனர்.
இதுபோன்ற அத்துமீறல்கள், அநாகரிகச் செயல்கள் மூலம் எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், சாகும்வரை எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.
காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும்
இதுபோன்ற அத்துமீறல்கள், அநாகரிகச் செயல்கள் மூலம் எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், சாகும்வரை எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.
காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும்
இரவு உடையில், சோர்வாக தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறி, அநாகரிகமாக நடந்துக்கொள்ள எந்த சட்டம் இவர்களை அனுமதித்தது?.
இந்த சம்பவத்துக்காக காவல்துறையை நாங்கள் கண்டிக்கிறோம். நடந்த சம்பவத்துக்காக காவல்துறை மன்னிப்பு கேட்கவேண்டும். காவல்துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
வேலை நிறுத்தம் ஓர் நாடகம்

இலங்கைத் தமிழர் பிரச்சனைகாக முதல்வர் கருணாநிதி நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளார். இதே பிரச்சனைக்காக தான் நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலையில் எங்களிடம் அத்துமீறல் நடந்துள்ளது. எனவே,முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தம், மக்களிடம் ஓட்டுவாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி நடத்தும் ஓர் நாடகம். பெண் உரிமைக்கு மரியாதை கொடுப்பதாக கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி, பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ன முதலில் காவல்துறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
திசை திருப்பும் முயற்சி
இதுபோன்ற அராஜக, அநாகரிக செயல்கள் மூலம், இலங்கை தமிழருக்கான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, பெண்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான மோதலாக திசை திருப்ப முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிக்கு நாங்கள் ஒருபோதும் பலியாக மாட்டோம்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை, எங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இவ்வாறு பெண்கள் அமைப்பினர் கூறினர்.
நன்றி : தமிழ் வெப் துனியா
கலைஞர் அவர்களே வழக்கறிஞர் போராட்டத்தை திசை மாற்றியது போல் பெண்களின் போராட்டத்தையும் திசை மாற்ற முயற்சிப்பதை விட்டு விட்டு போர்நிறுத்தம் ஏற்பட முயற்சியுங்கள் . இல்லை அதை விட்டு நான் எப்பவுமே துரோகியாதன் வாழ விரும்புகிறேன் என்றால் நாங்கள் என்ன பண்ண முடியும் இந்த லட்சணத்தில நாள வேலை நிறுத்தமா ?

Saturday
6 -வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம் 4 பேர் கவலைகிடம்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழகம்,
போராட்டங்கள்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Saturday, April 18, 2009
இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி சென்னையில் 6 வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . இதில் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது . இதையடுத்து உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை யாரும் பார்க்க வரவில்லை எனவும் சோனியா காந்தி உடனடியாக தலையிட்டு போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டனர் . அவர்களை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர் .
இலங்கையில் தமிழர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்தும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்தில 13 ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினர் . ஆனால் தமிழக காவல் துறை அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல் துரத்தியது . இப்படி ஒவ்வெரு இடமாக மாறி மாறி தங்களுடைய உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றனர் . இப்போது மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்கள் .

உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு பல பெண்கள் மற்றும் பொதுமக்கள் சென்று பெண்களை வாழ்த்தியும் அவர்களுக்கு ஆதரவாக போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றனர் . உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் பெண்களில் நான்கு பேரின் உடல் பலவீனமடைந்து இருக்கிறது . இந்த நிலையில் தான் சத்திய மூர்த்தி பவனை பெண்கள் முற்றுகையிட்டனர் . நாடாளுமன்ற தேர்தலில் மங்கி போன ஈழ ஆதரவு போராட்ட்டத்தை பெண்கள் கையில் எடுத்து போராடி வருகிறார்கள் .
இன்னும் சில நாட்கள் இந்த போராட்டம் நீடித்தால் இன்னும் பலரின் உடல்நிலை மோசமாகும் என தெரிகிறது . தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாக தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் . பெண்களின் போராட்டமானது தமிழகமெங்கும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது .
பெண்கள் 20 தேதி தமிழக பிரச்சாரத்திற்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து போர்நிறுத்தம் வலியுறுத்தவிருக்கிறார்கள். காங்கிரஸ் அரசும் சோனியாவும் பெண்களின் குரலுக்கு செவி சாய்ப்பார்களா ?

தமிழ் ஈழம் முதல் உலகம் முழுவதும் தொடரும் தமிழர் புரட்சி
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
போராட்டங்கள்
எழுதிய நேரம்
Wednesday, April 08, 2009
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!
Read More
தமிழ் ஈழத்தில் தமிழர் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து தமிழர்களை இனபடுகொலை செய்வதை கண்டித்து தமிழ் ஈழத்திலே ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள் . ஈழத்திலே தமிழர்களை நச்சு குண்டுகளை கொண்டு கொலை செய்து வருகிறது இதற்கு பல உலக நாடுகள் உதவி வருகின்றன . இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் அரசானது விடுதலை புலிகளை அடியோடு ஒழிக்க வேண்டும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை கொடுத்து வருகிறது சோனியா தலைமையிலான அரசு .
ஏழு கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்து வருகிறது . ஈழ போர் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்ட்ட இந்த நேரத்தில் சிங்கள இனவெறி அரசு தினம் தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை உலகத்தில் தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகளை கொண்டு கொலை செய்கிறது . ஒரு குறுகிய நிலப்பரப்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .
இந்த சிங்கள அரசின் இனவெறியை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் எழுச்சி போராட்ட்டங்களை தொடர் போராட்டங்களாக நடத்தி வருகின்றனர் . இங்கிலாந்து , பிரான்ஸ் , இத்தாலி , நார்வே , கனடா , நெதெர்லாந்து , ஸ்வீடன் போன்ற நாடுகளில் துவங்கிய போராட்டங்கள் போர் நிருத்துவரை தொடர் போராட்டமாக மாறி வருகிறது . எழுச்சிமிகு போராட்டங்களில் விடுதலை புலிகள் தான் எங்கள் ஏக பிரதிநிதிகள் என்றும் தமிழ் ஈழத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்றும் , சிங்கள அரசு இனபடுகொலையை உடனடியாக விலக்க வேடனும் என்றும் , ஆக்கிரமிக்க தமிழர் பூமியை விட்டு சிங்கள ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உலகம் முழுவதும் தமிழர் புரட்சி வீறு கொண்டு நடைபெறுகிறது .

தமிழகத்திலும் தமிழ் ஈழ மக்களுக்காக போர்நிறுத்தம் ஏற்படும் வரை தங்கள் வேலையை விட்டு அனைத்து தமிழ் மக்களும் வீதிக்கு வரவேண்டும் என தமிழ் ஈழ மக்கள் சாவின் விளிம்பில் இருந்து கொண்டு கேட்கிறார்கள் . ஒருநாள் ஆர்பாட்டம் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் போல் ஆகி விட்ட தமிழகத்தில் மக்கள் எழுச்சியின் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தினால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது .
தமிழினமே தமிழக அரசியல் தலைவர்களே தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் . உயிர் போனால் திருப்மி வராது . போராடுவோம் தமிழினத்தை காப்போம் . புலம்பெயர் வாழ் தமிழர்கள் நடத்தும் தொடர் போராட்டங்கள் தமிழகத்திலும் நடந்தால் இந்தியா போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் . தமிழனே எழு விழித்துகொள் இனிஒரு கனம் பொறுத்தால் நாளை தமிழினம் இருக்காது .
இந்திய அரசே விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கு !
சிங்கள அரசின் இனபடுகொலையை தடுத்து நிறுத்து !
தமிழ் ஈழத்தை அங்கீகரி ! தமிழர் புரட்சி ஓங்குக !
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!* (பாவேந்தர் பாரதிதாசன்)
Monday
போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நாளை நடைபெறும் மனித சங்கிலியில் அணிதிரள்வோம்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
போராட்டங்கள்
எழுதிய நேரம்
Monday, February 16, 2009
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (17-02-09 ) சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவிருக்கிறது . இதில் நாம் கலந்து கொண்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்துவோம் .
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமானது போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது . அதில் ஒரு பகுதியாக நாளை மனித சங்கிலி போராட்டத்தை நடத்தவிருக்கிறது .
இதில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மாணவர்கள் , இளைஞர்கள் , பெரியோர்கள், சிறியோர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர் . சிங்கள அரசின் திட்டமிட்ட இனபடுகொலைகளை காட்டும் படங்களை தாங்கி மனித சங்கிலியில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்தவிருக்கின்றனர் .
இதில் நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அலைகடலென திரண்டு மனித சங்கிலி மூலம் நம் எதிர்ப்பை ஒரே குரலில் பதிவு செய்வோம் . சாவின் விழிம்பில் இருக்கும் ஈழ தமிழர்களுக்காக நாம் மனித சங்கிலியில் இணைவோம் .

Subscribe to:
Posts (Atom)